தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (IRV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. அல்லேலூயா, [QBR] செம்மையானவர்களுடைய கூட்டத்திலும் சபையிலும் யெகோவாவை முழு இருதயத்தோடும் துதிப்பேன். [QBR]
2. யெகோவாவின் செய்கைகள் பெரியவைகளும், [QBR] அவைகளில் பிரியப்படுகிற எல்லோராலும் ஆராயப்படுகிறவைகளுமாக இருக்கிறது. [QBR]
3. அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது, [QBR] அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும். [QBR]
4. அவர் தம்முடைய அதிசயமான செயல்களை நினைவுகூரும்படி செய்தார், [QBR] யெகோவா இரக்கமும் மனவுருக்கமுமுள்ளவர். [QBR]
5. தமக்குப் பயந்தவர்களுக்கு உணவு கொடுத்தார்; [QBR] தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார். [QBR]
6. தேசங்களின் சுதந்தரத்தைத் தமது மக்களுக்குக் கொடுத்ததினால், [QBR] தமது செயல்களின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார். [QBR]
7. அவருடைய கரத்தின் செயல்கள் சத்தியமும் நியாயமுமானவைகள்; [QBR] அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள். [QBR]
8. அவைகள் என்றென்றைக்குமுள்ள எல்லாகாலங்களுக்கும் உறுதியானவைகள், [QBR] அவைகள் உண்மையும் செம்மையுமாகச் செய்யப்பட்டவைகள். [QBR]
9. அவர் தமது மக்களுக்கு மீட்பை அனுப்பி, [QBR] தமது உடன்படிக்கையை நிரந்தர உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; [QBR] அவருடைய பெயர் பரிசுத்தமும் பயங்கரமுமானது. [QBR]
10. யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; [QBR] அவருடைய கற்பனைகளின்படி செய்கிற அனைவருக்கும் நற்புத்தியுண்டு; [QBR] அவருடைய புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 111 / 150
சங்கீதம் 111:172
1 அல்லேலூயா, செம்மையானவர்களுடைய கூட்டத்திலும் சபையிலும் யெகோவாவை முழு இருதயத்தோடும் துதிப்பேன். 2 யெகோவாவின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லோராலும் ஆராயப்படுகிறவைகளுமாக இருக்கிறது. 3 அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது, அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும். 4 அவர் தம்முடைய அதிசயமான செயல்களை நினைவுகூரும்படி செய்தார், யெகோவா இரக்கமும் மனவுருக்கமுமுள்ளவர். 5 தமக்குப் பயந்தவர்களுக்கு உணவு கொடுத்தார்; தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார். 6 தேசங்களின் சுதந்தரத்தைத் தமது மக்களுக்குக் கொடுத்ததினால், தமது செயல்களின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார். 7 அவருடைய கரத்தின் செயல்கள் சத்தியமும் நியாயமுமானவைகள்; அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள். 8 அவைகள் என்றென்றைக்குமுள்ள எல்லாகாலங்களுக்கும் உறுதியானவைகள், அவைகள் உண்மையும் செம்மையுமாகச் செய்யப்பட்டவைகள். 9 அவர் தமது மக்களுக்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நிரந்தர உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; அவருடைய பெயர் பரிசுத்தமும் பயங்கரமுமானது. 10 யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற அனைவருக்கும் நற்புத்தியுண்டு; அவருடைய புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 111 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References