1. [QS]அல்லேலூயா, [QE][QS]செம்மையானவர்களுடைய கூட்டத்திலும் சபையிலும் யெகோவாவை முழு இருதயத்தோடும் துதிப்பேன். [QE]
2. [QS]யெகோவாவின் செய்கைகள் பெரியவைகளும், [QE][QS]அவைகளில் பிரியப்படுகிற எல்லோராலும் ஆராயப்படுகிறவைகளுமாக இருக்கிறது. [QE]
3. [QS]அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது, [QE][QS]அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும். [QE]
4. [QS]அவர் தம்முடைய அதிசயமான செயல்களை நினைவுகூரும்படி செய்தார், [QE][QS]யெகோவா இரக்கமும் மனவுருக்கமுமுள்ளவர். [QE]
5. [QS]தமக்குப் பயந்தவர்களுக்கு உணவு கொடுத்தார்; [QE][QS]தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார். [QE]
6. [QS]தேசங்களின் சுதந்தரத்தைத் தமது மக்களுக்குக் கொடுத்ததினால், [QE][QS]தமது செயல்களின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார். [QE]
7. [QS]அவருடைய கரத்தின் செயல்கள் சத்தியமும் நியாயமுமானவைகள்; [QE][QS]அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள். [QE]
8. [QS]அவைகள் என்றென்றைக்குமுள்ள எல்லாகாலங்களுக்கும் உறுதியானவைகள், [QE][QS]அவைகள் உண்மையும் செம்மையுமாகச் செய்யப்பட்டவைகள். [QE]
9. [QS]அவர் தமது மக்களுக்கு மீட்பை அனுப்பி, [QE][QS]தமது உடன்படிக்கையை நிரந்தர உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; [QE][QS]அவருடைய பெயர் பரிசுத்தமும் பயங்கரமுமானது. [QE]
10. [QS]யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; [QE][QS]அவருடைய கற்பனைகளின்படி செய்கிற அனைவருக்கும் நற்புத்தியுண்டு; [QE][QS]அவருடைய புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும். [QE]