1. {இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். } [QS]நான் யெகோவாவிடம் அடைக்கலமாக வந்திருக்கிறேன்; [QE][QS]பின்னை ஏன் நீங்கள் என்னுடைய ஆத்துமாவை நோக்கி, [QE][QS]பறவையைப்போல உன்னுடைய மலைக்குப் பறந்துபோ என்று சொல்லுகிறீர்கள். [QE]
2. [QS]இதோ, துன்மார்க்கர்கள் வில்லை வளைத்து, [QE][QS]செம்மையான இருதயத்தார்கள்மேல் இருளில் எய்யும்படி தங்களுடைய அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள். [QE]
3. [QS]அஸ்திபாரங்களும் அழிந்துபோகின்றதே, [QE][QS]நீதிமான் என்ன செய்வான்? [QE]
4. [QS]யெகோவா தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; [QE][QS]யெகோவாவுடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது; [QE][QS]அவருடைய கண்கள் தேவப்பிள்ளைகளைப் பார்க்கின்றன அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகின்றன. [QE]
5. [QS]யெகோவா நீதிமானைச் சோதித்தறிகிறார்; [QE][QS]துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது. [QE]
6. [QS]துன்மார்க்கர்கள்மேல் கண்ணிகளை பொழியச்செய்வார்; [QE][QS]நெருப்பும், கந்தகமும், [QE][QS]அனல் காற்றும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு. [QE]
7. [QS]யெகோவா நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்; [QE][QS]அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது. [QE]