1. {இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல். } [PS]நான் துதிக்கும் தேவனே, [PE][PS]மவுனமாக இருக்கவேண்டாம். [PE]
2. [PS]துன்மார்க்கனுடைய வாயும், வஞ்சகவாயும், [PE][PS]எனக்கு விரோதமாகத் திறந்திருக்கிறது; [PE][PS]பொய் நாவினால் என்னோடு பேசுகிறார்கள். [PE]
3. [PS]பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு, [PE][PS]காரணமில்லாமல் என்னோடு போர்செய்கிறார்கள். [PE]
4. [PS]என்னுடைய அன்புக்கு பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், [PE][PS]நானோ ஜெபம் செய்து கொண்டிருக்கிறேன். [PE]
5. [PS]நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள், [PE][PS]என்னுடைய அன்புக்குப் பதிலாக என்னைப் பகைக்கிறார்கள். [PE]
6. [PS]அவனுக்கு மேலாகத் தீயவனை ஏற்படுத்தி வையும், [PE][PS]சாத்தான் அவனுடைய வலதுபக்கத்தில் நிற்கட்டும். [PE]
7. [PS]அவனுடைய நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாகட்டும்; [PE][PS]அவனுடைய ஜெபம் பாவமாகட்டும். [PE]
8. [PS]அவனுடைய நாட்கள் கொஞ்சமாகட்டும்; [PE][PS]அவனுடைய வேலையை வேறொருவன் பெறட்டும். [PE]
9. [PS]அவனுடைய பிள்ளைகள் திக்கற்றவர்களும், [PE][PS]அவனுடைய மனைவி விதவையுமாகட்டும். [PE]
10. [PS]அவனுடைய பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து, [PE][PS]தங்களுடைய பாழான வீடுகளிலிருந்து பிச்சை எடுக்கட்டும். [PE]
11. [PS]கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்ளட்டும்; [PE][PS]அவனுடைய உழைப்பின் பலனை அந்நியர்கள் பறித்துக்கொள்ளட்டும். [PE]
12. [PS]அவனுக்கு ஒருவரும் இரக்கங்காட்டாமலும், [PE][PS]அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்குத் தயவு செய்யாமல் போகட்டும். [PE]
13. [PS]அவனுடைய சந்ததியார் அழிக்கப்படட்டும்; [PE][PS]இரண்டாம் தலைமுறையில் அவர்களுடைய பெயர் இல்லாமல் போகட்டும். [PE]
14. [PS]அவனுடைய முன்னோர்களின் அக்கிரமம் யெகோவாவுக்கு முன்பாக நினைக்கப்படட்டும், [PE][PS]அவனுடைய தாயின் பாவம் நீங்காமலிருக்கட்டும். [PE]
15. [PS]அவைகள் எப்பொழுதும் யெகோவாவுக்கு முன்பாக இருக்கட்டும்; [PE][PS]அவர்களுடைய பெயர் பூமியில் இல்லாமல் அழிக்கப்படட்டும். [PE]
16. [PS]அவன் தயவுசெய்ய நினைக்காமல், [PE][PS]ஏழையும், தேவையுள்ளவனுமாகிய மனிதனைத் துன்பப்படுத்தி, [PE][PS]மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே. [PE]
17. [PS]சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; [PE][PS]அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், [PE][PS]அது அவனுக்குத் தூரமாக விலகிப்போகும். [PE]
18. [PS]சாபத்தை அவன் தனக்கு ஆடையாக உடுத்திக்கொண்டான்; [PE][PS]அது அவனுடைய உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், [PE][PS]அவனுடைய எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும். [PE]
19. [PS]அது அவன் போர்த்துக்கொள்ளுகிற ஆடையாகவும், [PE][PS]எப்பொழுதும் கட்டிக்கொள்ளுகிற வார்க்கச்சையாகவும் இருக்கட்டும். [PE]
20. [PS]இதுதான் என்னை விரோதிக்கிறவர்களுக்கும், [PE][PS]என்னுடைய ஆத்துமாவுக்கு விரோதமாகத் தீங்கு பேசுகிறவர்களுக்கும் யெகோவாவால் வரும் பிரதிபலன். [PE]
21. [PS]ஆண்டவராகிய யெகோவாவே, [PE][PS]நீர் உமது பெயரினிமித்தம் என்னை ஆதரித்து, [PE][PS]உமது கிருபை நலமானதினால், [PE][PS]என்னை விடுவித்தருளும். [PE]
22. [PS]நான் ஏழையும் தேவையுள்ளவனுமாக இருக்கிறேன், [PE][PS]என்னுடைய இருதயம் எனக்குள் புண்பட்டிருக்கிறது. [PE]
23. [PS]சாயும் நிழலைப்போல் அகன்றுபோனேன்; [PE][PS]வெட்டுக்கிளியைப்போல் பறக்கடிக்கப்படுகிறேன். [PE]
24. [PS]உபவாசத்தினால் என்னுடைய முழங்கால்கள் பலவீனமடைகிறது; [PE][PS]என்னுடைய சரீரமும் பலமற்று உலர்ந்து போகிறது. [PE]
25. [PS]நான் அவர்களுக்கு நிந்தையானேன்; அவர்கள் என்னைப் பார்த்து, [PE][PS]தங்களுடைய தலையை அசைக்கிறார்கள். [PE]
26. [PS]என் தேவனாகிய யெகோவாவே எனக்கு உதவிசெய்யும்; [PE][PS]உமது கிருபையின்படி என்னைக் காப்பாற்றும். [PE]
27. [PS]இது உமது கரம் என்றும், யெகோவாவே, [PE][PS]தேவனே நீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக. [PE]
28. [PS]அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; [PE][PS]அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போகட்டும்; [PE][PS]உமது அடியானோ மகிழ்சியாக இருப்பேன். [PE]
29. [PS]என்னுடைய விரோதிகள் அவமானத்தால் மூடப்பட்டு, [PE][PS]தங்களுடைய வெட்கத்தைச் சால்வையைப்போல் அணிந்துக்கொள்வார்களாக. [PE]
30. [PS]யெகோவாவை நான் என்னுடைய வாயினால் மிகவும் துதித்து, [PE][PS]அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன். [PE]
31. [PS]தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களிடம் ஒடுக்கப்பட்டவனுடைய ஆத்துமாவை காப்பாற்றும்படி [PE][PS]அவர் அவனுடைய வலதுபக்கத்தில் நிற்பார். [PE]