தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {தாவீது பாடிய பாடல். } [QS]தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது; [QE][QS]நான் இன்னிசையால் புகழ்ந்து பாடுவேன்; [QE][QS]என்னுடைய மகிமையும் பாடும். [QE]
2. [QS]வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள், [QE][QS]நான் அதிகாலையில் விழிப்பேன். [QE]
3. [QS]யெகோவாவே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; [QE][QS]தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன். [QE]
4. [QS]உமது கிருபை வானங்களுக்கு மேலாகவும், [QE][QS]உமது சத்தியம் மேகமண்டலங்கள் வரையிலும் எட்டுகிறது. [QE]
5. [QS]தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்; [QE][QS]உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக. [QE]
6. [QS]உமது பிரியர்கள் விடுவிக்கப்படுவதற்காக, [QE][QS]உமது வலதுகரத்தினால் இரட்சித்து, [QE][QS]எங்களுடைய ஜெபத்தைக் கேட்டருளும். [QE]
7. [QS]தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு சொன்னார், [QE][QS]ஆகையால் சந்தோஷப்படுவேன்; [QE][QS]சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன். [QE]
8. [QS]கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; [QE][QS]எப்பிராயீம் என்னுடைய தலையின் பெலன், [QE][QS]யூதா என்னுடைய செங்கோல். [QE]
9. [QS]மோவாப் என்னுடைய பாதம் கழுவும் பாத்திரம்; [QE][QS]ஏதோமின்மேல் என்னுடைய காலணியை எறிவேன்; [QE][QS]பெலிஸ்தியாவின்மேல் ஆர்ப்பரிப்பேன். [QE]
10. [QS]வலுவான நகரத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்? [QE][QS]ஏதோம்வரை எனக்கு வழிகாட்டுகிறவன் யார்? [QE]
11. [QS]எங்களுடைய சேனைகளோடு புறப்படாமலிருந்த தேவனே நீரல்லவோ? [QE][QS]எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவனே நீரல்லவோ? [QE]
12. [QS]இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; [QE][QS]மனிதனுடைய உதவி வீண். [QE]
13. [QS]தேவனாலே வெற்றி பெறுவோம்; [QE][QS]அவரே எங்களுடைய எதிரிகளை மிதித்துப்போடுவார். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 108 / 150
தாவீது பாடிய பாடல். 1 தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது; நான் இன்னிசையால் புகழ்ந்து பாடுவேன்; என்னுடைய மகிமையும் பாடும். 2 வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள், நான் அதிகாலையில் விழிப்பேன். 3 யெகோவாவே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன். 4 உமது கிருபை வானங்களுக்கு மேலாகவும், உமது சத்தியம் மேகமண்டலங்கள் வரையிலும் எட்டுகிறது. 5 தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக. 6 உமது பிரியர்கள் விடுவிக்கப்படுவதற்காக, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எங்களுடைய ஜெபத்தைக் கேட்டருளும். 7 தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு சொன்னார், ஆகையால் சந்தோஷப்படுவேன்; சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன். 8 கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; எப்பிராயீம் என்னுடைய தலையின் பெலன், யூதா என்னுடைய செங்கோல். 9 மோவாப் என்னுடைய பாதம் கழுவும் பாத்திரம்; ஏதோமின்மேல் என்னுடைய காலணியை எறிவேன்; பெலிஸ்தியாவின்மேல் ஆர்ப்பரிப்பேன். 10 வலுவான நகரத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்? ஏதோம்வரை எனக்கு வழிகாட்டுகிறவன் யார்? 11 எங்களுடைய சேனைகளோடு புறப்படாமலிருந்த தேவனே நீரல்லவோ? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவனே நீரல்லவோ? 12 இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனிதனுடைய உதவி வீண். 13 தேவனாலே வெற்றி பெறுவோம்; அவரே எங்களுடைய எதிரிகளை மிதித்துப்போடுவார்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 108 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References