1. [QS]யெகோவாவை துதியுங்கள்; [QE][QS]அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. [QE]
2. [QS]யெகோவாவால் எதிரியின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டு, [QE]
3. [QS]கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமுள்ள [QE][QS]பல தேசங்களிலுமிருந்து சேர்க்கப்பட்டவர்கள், [QE][QS]அப்படிச் சொல்வார்களாக. [QE]
4. [QS]அவர்கள் வாழும் ஊரைக்காணாமல், [QE][QS]வனாந்திரத்திலே பாலைவனவழியாக, [QE]
5. [QS]பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா சோர்ந்துபோனதாகவும் [QE][QS]அலைந்து திரிந்தார்கள். [QE]
6. [QS]தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள், [QE][QS]அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை மீட்டெடுத்தார். [QE]
7. [QS]வாழும் ஊருக்குப்போய்ச்சேர, [QE][QS]அவர்களைச் செவ்வையான வழியிலே நடத்தினார். [QE]
8. [QS]தாகமுள்ள ஆத்துமாவைக் யெகோவா திருப்தியாக்கி, [QE][QS]பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று, [QE]
9. [QS]அவருடைய கிருபையினிமித்தமும், [QE][QS]மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக. [QE]
10. [QS]தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாகக் கலகம்செய்து, [QE][QS]உன்னதமான தேவனுடைய ஆலோசனையை அசட்டைசெய்தவர்கள், [QE]
11. [QS]காரிருளிலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து, [QE][QS]ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டப்பட்டு கிடந்தார்கள். [QE]
12. [QS]அவர்களுடைய இருதயத்தை அவர் வருத்தத்தால் தாழ்த்தினார்; [QE][QS]உதவிசெய்ய ஒருவரும் இல்லாமல் விழுந்து போனார்கள். [QE]
13. [QS]தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்; [QE][QS]அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கிக் காப்பாற்றினார். [QE]
14. [QS]காரிருளிலும் மரண இருளிலுமிருந்து அவர்களை வெளிப்படச்செய்து, [QE][QS]அவர்களுடைய கட்டுகளை அறுத்தார். [QE]
15. [QS]யெகோவா வெண்கலக் கதவுகளை உடைத்து, [QE][QS]இரும்புத் தாழ்ப்பாள்களை முறித்தாரென்று, [QE]
16. [QS]அவருடைய கிருபையினிமித்தமும், [QE][QS]மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக. [QE]
17. [QS]புத்தியீனரும் தங்களுடைய கலக வழிகளாலும் [QE][QS]தங்களுடைய அக்கிரமங்களாலும் நோய்கொண்டு ஒடுங்கிப்போகிறார்கள். [QE]
18. [QS]அவர்களுடைய ஆத்துமா எல்லா உணவையும் வெறுக்கிறது, [QE][QS]அவர்கள் மரணவாசல்கள் வரையிலும் நெருங்குகிறார்கள். [QE]
19. [QS]தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; [QE][QS]அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கிக் காப்பாற்றுகிறார். [QE]
20. [QS]அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, [QE][QS]அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார். [QE]
21. [QS]அவர்கள் யெகோவாவை அவருடைய கிருபையினிமித்தமும், [QE][QS]மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து, [QE]
22. [QS]நன்றிபலிகளைச் செலுத்தி, அவருடைய செயல்களை ஆனந்த சத்தத்தோடு விவரிப்பார்களாக. [QE]
23. [QS]கப்பலேறி, கடற்பயணம்செய்து, திரளான தண்ணீர்களிலே தொழில் செய்கிறார்களே, [QE]
24. [QS]அவர்கள் யெகோவாவுடைய செயல்களையும், [QE][QS]ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள். [QE]
25. [QS]அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி, [QE][QS]அதின் அலைகளைக் கொந்தளிக்கச்செய்யும். [QE]
26. [QS]அவர்கள் வானத்தில் ஏறி, [QE][QS]ஆழங்களில் இறங்குகிறார்கள், [QE][QS]அவர்களுடைய ஆத்துமா துன்பத்தினால் கரைந்துபோகிறது. [QE]
27. [QS]குடித்துவெறித்தவனைப்போல் அலைந்து தடுமாறுகிறார்கள்; [QE][QS]அவர்களுடைய ஞானமெல்லாம் முழுகிப்போகிறது. [QE]
28. [QS]அப்பொழுது தங்களுடைய ஆபத்திலே அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், [QE][QS]அவர்களுடைய இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார். [QE]
29. [QS]கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது. [QE]
30. [QS]அமைதி உண்டானதிற்காக அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; [QE][QS]தாங்கள் விரும்பிய துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார். [QE]
31. [QS]அவர்கள் யெகோவாவை அவருடைய கிருபையினிமித்தமும், [QE][QS]மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து, [QE]
32. [QS]மக்களின் சபையிலே அவரை உயர்த்தி, [QE][QS]மூப்பர்களின் சங்கத்திலே அவரைப் போற்றுவார்களாக. [QE]
33. [QS]அவர் ஆறுகளை வனாந்திரமாகவும், நீரூற்றுகளை வறண்ட இடமாகவும், [QE]
34. [QS]குடிகளுடைய பொல்லாப்புக்காக செழிப்பான தேசத்தைத் தரிசு நிலமாகவும் மாற்றுகிறார். [QE]
35. [QS]அவர் வனாந்திரவெளியைத் தண்ணீர் குளமாகவும், [QE][QS]வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி, [QE]
36. [QS]பசித்தவர்களை அங்கே குடியேற்றுகிறார்; [QE][QS]அங்கே அவர்கள் குடியிருக்கும் நகரத்தைக் கட்டி, [QE]
37. [QS]வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சைத்தோட்டங்களை நாட்டுகிறார்கள், [QE][QS]அவைகள் வரத்துள்ள பலனைத் தரும். [QE]
38. [QS]அவர்களை ஆசீர்வதிக்கிறார், [QE][QS]மிகுதியும் பெருகுகிறார்கள்; அவர்களுடைய மிருகங்கள் குறையாமலிருக்கச்செய்கிறார். [QE]
39. [QS]பின்பு அவர்கள் இடுக்கத்தினாலும், ஆபத்தினாலும், [QE][QS]துயரத்தினாலும் குறைவுபட்டுத் தாழ்வடைகிறார்கள். [QE]
40. [QS]அவர் எதிரிகளின் தலைவர்கள்மேல் இகழ்ச்சிவரச்செய்து, [QE][QS]வழியில்லாத வனாந்திர வெளியிலே அவர்களைத் திரியச்செய்து, [QE]
41. [QS]எளியவனையோ சிறுமையிலிருந்து எடுத்து, [QE][QS]உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து, [QE][QS]அவனுடைய வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார். [QE]
42. [QS]உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள்; [QE][QS]நியாயக்கேடெல்லாம் தன்னுடைய வாயை மூடும். [QE]
43. [QS]எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கட்டும்; [QE][QS]ஞானவான்கள் யெகோவாவுடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள். [QE]