1. [QS]யெகோவாவை துதித்து, அவருடைய பெயரை பிரபலமாக்குங்கள், [QE][QS]அவருடைய செய்கைகளை தேசங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள். [QE]
2. [QS]அவரைப் பாடி, அவரைப் புகழுங்கள்; [QE][QS]அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள். [QE]
3. [QS]அவருடைய பரிசுத்த பெயரைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்; [QE][QS]யெகோவாவை தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. [QE]
4. [QS]யெகோவாவையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; [QE][QS]அவர் சமுகத்தைத் தொடர்ந்து தேடுங்கள். [QE]
5. [QS]அவருடைய ஊழியனாகிய ஆபிரகாமின் சந்ததியே! [QE][QS]அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் மக்களே! [QE]
6. [QS]அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், [QE][QS]அவர் வாயிலிருந்து புறப்படும் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள். [QE]
7. [QS]அவரே நம்முடைய தேவனாகிய யெகோவா, [QE][QS]அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும். [QE]
8. [QS]ஆயிரம் தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வார்த்தையும், [QE][QS]ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும், [QE]
9. [QS]அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார்.
10. அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், [QE][QS]இஸ்ரவேலுக்கு நிரந்தர உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி: [QE]
11. [QS]உங்களுடைய சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார். [QE]
12. [QS]அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத் தொகைக்குட்பட்ட சில மக்களுமாக இருந்தார்கள். [QE]
13. [QS]அவர்கள் ஒரு தேசத்தைவிட்டு மறு தேசத்திற்கும், [QE][QS]ஒரு ராஜ்ஜியத்தைவிட்டு மறுதேசத்திற்கும் போனார்கள். [QE]
14. [QS]அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடுக்காமல், [QE][QS]அவர்களுக்காக ராஜாக்களைக் கடிந்துகொண்டு: [QE]
15. [QS]நான் அபிஷேகம்செய்தவர்களை நீங்கள் தொடாமலும், [QE][QS]என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார். [QE]
16. [QS]அவர் தேசத்திலே பஞ்சத்தை வரவழைத்து, உணவு என்னும் ஆதரவுகோலை முற்றிலும் முறித்தார். [QE]
17. [QS]அவர்களுக்கு முன்னாலே ஒரு மனிதனை அனுப்பினார்; [QE][QS]யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான். [QE]
18. [QS]அவனுடைய கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்; [QE][QS]அவனுடைய உயிர் இரும்பில் அடைபட்டிருந்தது. [QE]
19. [QS]யெகோவா சொன்ன வார்த்தை நிறைவேறும்வரை [QE][QS]அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது. [QE]
20. [QS]ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச் சொன்னான்; [QE][QS]மக்களின் அதிபதி அவனை விடுதலை செய்தான். [QE]
21. [QS]தன்னுடைய பிரபுக்களை அவனுடைய மனதின்படி கட்டவும், [QE][QS]தன்னுடைய மூப்பர்களை ஞானிகளாக்கவும், [QE]
22. [QS]அவனைத் தன்னுடைய வீட்டுக்கு அதிகாரியும், [QE][QS]தன்னுடைய செல்வங்களுக்கெல்லாம் ஆளுனராகவும் ஏற்படுத்தினார். [QE]
23. [QS]அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்; [QE][QS]யாக்கோபு காமின் தேசத்திலே அந்நியனாக இருந்தான். [QE]
24. [QS]அவர் தம்முடைய மக்களை மிகவும் பலுகச்செய்து, [QE][QS]அவர்களுடைய எதிரிகளைவிட அவர்களைப் பலவான்களாக்கினார். [QE]
25. [QS]தம்முடைய மக்களைப் பகைக்கவும், [QE][QS]தம்முடைய ஊழியக்காரர்களை வஞ்சனையாக நடத்தவும், [QE][QS]அவர்களுடைய இருதயத்தை மாற்றினார். [QE]
26. [QS]தம்முடைய ஊழியனாகிய மோசேயையும் தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார். [QE]
27. [QS]இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், [QE][QS]காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள். [QE]
28. [QS]அவர் இருளை அனுப்பி, காரிருளை உண்டாக்கினார்; [QE][QS]அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பவர்கள் இல்லை. [QE]
29. [QS]அவர்களுடைய தண்ணீர்களை இரத்தமாக மாற்றி, [QE][QS]அவர்களுடைய மீன்களை சாகடித்தார். [QE]
30. [QS]அவர்களுடைய தேசம் தவளைகளை அதிகமாகப் பிறக்கவைத்தது; [QE][QS]அவர்களுடைய ராஜாக்களின் அறைவீடுகளிலும் அவைகள் வந்தது. [QE]
31. [QS]அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளிலெங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது. [QE]
32. [QS]அவர்களுடைய மழைகளைக் கல்மழையாக்கி, [QE][QS]அவர்களுடைய தேசத்திலே ஜூவாலிக்கிற நெருப்பை வரச்செய்தார். [QE]
33. [QS]அவர்களுடைய திராட்சைச்செடிகளையும் அத்திமரங்களையும் அழித்து, [QE][QS]அவர்களுடைய எல்லைகளிலுள்ள மரங்களையும் முறித்தார். [QE]
34. [QS]அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து, [QE]
35. [QS]அவர்களுடைய தேசத்திலுள்ள எல்லா தாவரங்களையும் அரித்து, [QE][QS]அவர்களுடைய நிலத்தின் கனியைத் தின்றுபோட்டது. [QE]
36. [QS]அவர்களுடைய தேசத்திலே முதற்பிறப்புகள் அனைத்தையும், [QE][QS]அவர்களுடைய பெலனில் முதற்பெலனான எல்லோரையும் அழித்தார். [QE]
37. [QS]அப்பொழுது அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படச்செய்தார்; [QE][QS]அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை. [QE]
38. [QS]எகிப்தியர்கள் அவர்களுக்குப் பயந்ததினால், அவர்கள் புறப்பட்டபோது மகிழ்ந்தார்கள். [QE]
39. [QS]அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து, [QE][QS]இரவை வெளிச்சமாக்குகிறதற்காக நெருப்பையும் தந்தார். [QE]
40. [QS]இஸ்ரவேலர்கள் உணவு கேட்டார்கள், அவர் காடைகளை வரச்செய்தார்; [QE][QS]வான அப்பத்தினாலும் அவர்களைத் திருப்தியாக்கினார். [QE]
41. [QS]கன்மலையைத் திறந்தார், தண்ணீர்கள் புறப்பட்டு, வனாந்திரத்தில் ஆறாக ஓடினது. [QE]
42. [QS]அவர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும், [QE][QS]தம்முடைய ஊழியனாகிய ஆபிரகாமையும் நினைத்து, [QE]
43. [QS]தம்முடைய மக்களை மகிழ்ச்சியோடும், [QE][QS]தாம் தெரிந்துகொண்டவர்களைக் கெம்பீர சத்தத்தோடும் புறப்படச்செய்து, [QE]
44. [QS]தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், [QE][QS]தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும், [QE]
45. [QS]அவர்களுக்கு அந்நியர்களுடைய தேசங்களைக் கொடுத்தார்; [QE][QS]அந்நிய மக்களுடைய உழைப்பின் பலனைச் சுதந்தரித்துக்கொண்டார்கள். [QE][QS]அல்லேலூயா. [QE]