1. [QS]என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று; [QE][QS]என் தேவனாகிய யெகோவாவே, நீர் மிகவும் பெரியவராக இருக்கிறீர்; [QE][QS]மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறீர். [QE]
2. [QS]ஒளியை ஆடையாக அணிந்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர். [QE]
3. [QS]தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மேல்தளமாக்கி, [QE][QS]மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய இறக்கைகளின்மேல் செல்லுகிறார். [QE]
4. [QS]தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், [QE][QS]தம்முடைய ஊழியக்காரர்களை நெருப்பு ஜூவாலைகளாகவும் செய்கிறார். [QE]
5. [QS]பூமி ஒருபோதும் நகர்த்த முடியாதபடி அதின் அஸ்திபாரங்கள்மேல் அதை நிறுவினார். [QE]
6. [QS]அதை ஆடையினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினீர்; [QE][QS]மலைகளின்மேல் தண்ணீர்கள் நின்றது. [QE]
7. [QS]அவைகள் உமது கண்டிதத்தால் விலகியோடி, [QE][QS]உமது குமுறலின் சத்தத்தால் விரைந்துசென்றது. [QE]
8. [QS]அவைகள் மலைகளில் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, [QE][QS]நீர் அவைகளுக்கு ஏற்படுத்தின இடத்தில் சென்றது. [QE]
9. [QS]அவைகள் திரும்பவும் வந்து பூமியை மூடிக்கொள்ளாதபடி [QE][QS]கடக்காமல் இருக்கும் எல்லையை அவைகளுக்கு ஏற்படுத்தினீர். [QE]
10. [QS]அவர் பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறார்; [QE][QS]அவைகள் மலைகள் நடுவே ஓடுகிறது. [QE]
11. [QS]அவைகள் வெளியின் உயிர்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுக்கும்; [QE][QS]அங்கே காட்டுக்கழுதைகள் தங்களுடைய தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும். [QE]
12. [QS]அவைகளின் ஓரமாக வானத்துப் பறவைகள் குடியிருந்து, [QE][QS]கிளைகள் மேலிருந்து பாடும். [QE]
13. [QS]தம்முடைய மேல்வீடுகளிலிருந்து மலைகளுக்குத் தண்ணீர் இறைக்கிறார்; [QE][QS]உமது செயல்களின் பயனால் பூமி திருப்தியாக இருக்கிறது. [QE]
14. [QS]பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், [QE][QS]மனிதருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார். [QE]
15. [QS]மனிதனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சைரசத்தையும், [QE][QS]அவனுக்கு முகக்களையை உண்டாக்கும் எண்ணெயையும், [QE][QS]மனிதனுடைய இருதயத்தை ஆதரிக்கும் உணவையும் விளைவிக்கிறார். [QE]
16. [QS]யெகோவாவுடைய மரங்களும், [QE][QS]அவரால் நடப்பட்ட லீபனோனின் கேதுருக்களும் செழித்து நிறைந்திருக்கும். [QE]
17. [QS]அங்கே குருவிகள் கூடுகட்டும்; தேவதாருமரங்கள் கொக்குகளின் குடியிருப்பு. [QE]
18. [QS]உயர்ந்த மலைகள் வரையாடுகளுக்கும், கன்மலைகள் குழிமுயல்களுக்கும் அடைக்கலம். [QE]
19. [QS]சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார்; [QE][QS]சூரியன் தன்னுடைய மறையும் நேரத்தை அறியும். [QE]
20. [QS]நீர் இருளைக் கட்டளையிடுகிறீர், இரவுநேரமாகும்; [QE][QS]அதிலே எல்லா காட்டு உயிர்களும் நடமாடும். [QE]
21. [QS]இளசிங்கங்கள் இரைக்காக கெர்ச்சித்து, தேவனால் தங்களுக்கு உணவு கிடைக்கும்படித்தேடும். [QE]
22. [QS]சூரியன் உதிக்கும்போது அவைகள் ஒதுங்கி, [QE][QS]தங்களுடைய மறைவிடங்களில் படுத்துக்கொள்ளும். [QE]
23. [QS]அப்பொழுது மனிதன் மாலைவரை தன்னுடைய வேலைக்கும், [QE][QS]தன்னுடைய உழைப்புக்கும் புறப்படுகிறான். [QE]
24. [QS]யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு திரளாக இருக்கிறது! [QE][QS]அவைகளையெல்லாம் ஞானமாகப் படைத்தீர்; [QE][QS]பூமி உம்முடைய பொருட்களினால் நிறைந்திருக்கிறது. [QE]
25. [QS]பெரிதும் அகலமுமான இந்த கடலும் அப்படியே நிறைந்திருக்கிறது; [QE][QS]அதிலே வாழும் சிறியவைகளும் பெரியவைகளுமான கணக்கில்லாத உயிர்கள் உண்டு. [QE]
26. [QS]அதிலே கப்பல்கள் ஓடும்; [QE][QS]அதிலே விளையாடும்படி நீர் உண்டாக்கின திமிங்கிலங்களும் உண்டு. [QE]
27. [QS]ஏற்றவேளையில் உணவைத் தருவீர் என்று அவைகளெல்லாம் [QE][QS]உம்மை நோக்கிக் காத்திருக்கும். [QE]
28. [QS]நீர்கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்; [QE][QS]நீர் உம்முடைய கையைத் திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும். [QE]
29. [QS]நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்; [QE][QS]நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் இறந்து, [QE][QS]தங்களுடைய மண்ணுக்குத் திரும்பும். [QE]
30. [QS]நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் உருவாக்கப்படும்; [QE][QS]நீர் பூமி அனைத்தையும் புதிதாக்குகிறீர். [QE]
31. [QS]யெகோவாவுடைய மகிமை என்றென்றைக்கும் விளங்கும்; [QE][QS]யெகோவா தம்முடைய செயல்களிலே மகிழுவார். [QE]
32. [QS]அவர் பூமியை நோக்கிப்பார்க்க, அது அதிரும்; [QE][QS]அவர் மலைகளைத் தொட, அவைகள் புகையும். [QE]
33. [QS]நான் உயிரோடிருக்கும்வரை என்னுடைய யெகோவாவைப் பாடுவேன்; [QE][QS]நான் உயிரோடிருக்கும்வரையும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன். [QE]
34. [QS]நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாக இருக்கும்; [QE][QS]நான் யெகோவாவுக்குள் மகிழுவேன். [QE]
35. [QS]பாவிகள் பூமியிலிருந்து மறைந்து, [QE][QS]துன்மார்க்கர்கள் இனி இல்லாமற்போவார்கள். [QE][QS]என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று, [QE][QS]அல்லேலூயா. [QE]