1. {தாவீதின் பாடல். } [QS]என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று; [QE][QS]என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த பெயரைப் போற்று. [QE]
2. [QS]என் ஆத்துமாவே, யெகோவாவுக்கு நன்றிசொல்; [QE][QS]அவர் செய்த எல்லா நன்மைகளையும் மறவாதே. [QE]
3. [QS]அவர் உன்னுடைய அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, [QE][QS]உன்னுடைய நோய்களையெல்லாம் குணமாக்கி, [QE]
4. [QS]உன்னுடைய உயிரை அழிவுக்கு விலக்கி மீட்டு, [QE][QS]உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, [QE]
5. [QS]நன்மையினால் உன்னுடைய வாயைத் திருப்தியாக்குகிறார்; [QE][QS]கழுகுக்குச் சமமாக உன்னுடைய வயது திரும்ப இளவயது போலாகிறது. [QE]
6. [QS]ஒடுக்கப்படுகிற அனைவருக்கும், யெகோவா நீதியையும் நியாயத்தையும் செய்கிறார். [QE]
7. [QS]அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது செயல்களை இஸ்ரவேல் சந்ததிக்கும் தெரியப்படுத்தினார். [QE]
8. [QS]யெகோவா உருக்கமும், இரக்கமும், [QE][QS]நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். [QE]
9. [QS]அவர் எப்பொழுதும் கடிந்துகொள்வதில்லை; [QE][QS]என்றைக்கும் கோபமாக இருப்பதில்லை. [QE]
10. [QS]அவர் நம்முடைய பாவங்களுக்குத் தகுந்தபடி நமக்குச் செய்யாமலும், [QE][QS]நம்முடைய அக்கிரமங்களுக்குத் தகுந்தபடி நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். [QE]
11. [QS]பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாக இருக்கிறதோ, [QE][QS]அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாக இருக்கிறது. [QE]
12. [QS]மேற்கிற்கும் கிழக்கிற்கும் எவ்வளவு தூரமோ, [QE][QS]அவ்வளவு தூரமாக அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார். [QE]
13. [QS]தகப்பன் தன்னுடைய பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, [QE][QS]யெகோவா தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார். [QE]
14. [QS]நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; [QE][QS]நாம் மண்ணென்று நினைவுகூருகிறார். [QE]
15. [QS]மனிதனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாக இருக்கிறது; [QE][QS]வெளியின் பூவைப்போல் பூக்கிறான். [QE]
16. [QS]காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போனது; [QE][QS]அது இருந்த இடமும் இனி அதை அறியாது. [QE]
17. [QS]யெகோவாவுடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், [QE][QS]அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் ஆதிகாலம் முதற்கொண்டு என்றென்றைக்கும் உள்ளது. [QE]
18. [QS]அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது. [QE]
19. [QS]யெகோவா வானங்களில் தமது சிங்காசனத்தை நிறுவியிருக்கிறார்; [QE][QS]அவருடைய ராஜரிகம் எல்லாவற்றையும் ஆளுகிறது. [QE]
20. [QS]யெகோவாவுடைய வார்த்தையைக் கேட்டு, [QE][QS]அவருடைய வசனத்தின்படி செய்கிற [QE][QS]பலத்த வல்லமையுள்ளவர்களாகிய அவருடைய தூதர்களே, [QE][QS]அவரைத் துதியுங்கள். [QE]
21. [QS]யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்து, [QE][QS]அவர் பணிவிடைக்காரர்களாக இருக்கிற அவருடைய எல்லா சேனைகளே, [QE][QS]அவரைப் போற்றுங்கள். [QE]
22. [QS]யெகோவா ஆளுகிற எல்லா இடங்களிலுமுள்ள அவருடைய எல்லா படைப்புகளே, [QE][QS]அவரைப் போற்றுங்கள்; [QE][QS]என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று. [QE]