1. {துயரப்படுகிறவன் துக்கத்தில் மூழ்கி யெகோவாவிடத்தில் தன் மனவேதனையை தெரியப்படுத்தும் விண்ணப்பம். } [QS]யெகோவாவே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேளும்; [QE][QS]என்னுடைய ஜெபம் உம்மிடத்தில் சேர்வதாக. [QE]
2. [QS]என்னுடைய ஆபத்துநாளிலே உமது முகத்தை எனக்கு மறைக்காமல் இரும்; [QE][QS]உமது செவியை என்னிடத்தில் சாயும்; [QE][QS]நான் கூப்பிடுகிற நாளிலே எனக்கு விரைவாக பதில் சொல்லும். [QE]
3. [QS]என்னுடைய நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது; [QE][QS]என்னுடைய எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல் எரிந்தது. [QE]
4. [QS]என்னுடைய இருதயம் புல்லைப்போல் வெட்டப்பட்டு உலர்ந்தது; [QE][QS]என்னுடைய ஆகாரத்தைச் சாப்பிட மறந்தேன். [QE]
5. [QS]என்னுடைய பெருமூச்சின் சத்தத்தினால், என்னுடைய எலும்புகள் என்னுடைய சரீரத்தோடு ஒட்டிக்கொள்ளுகிறது. [QE]
6. [QS]வனாந்தர நாரைக்கு ஒப்பானேன்; [QE][QS]பாழான இடங்களில் தங்கும் ஆந்தையைப் போலானேன். [QE]
7. [QS]நான் தூக்கம் இல்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப்போல இருக்கிறேன். [QE]
8. [QS]நாள்தோறும் என்னுடைய எதிரிகள் என்னை நிந்திக்கிறார்கள்; [QE][QS]என்மேல் மூர்க்கவெறிகொண்டவர்கள் எனக்கு விரோதமாகச் சாபம் இடுகிறார்கள். [QE]
9. [QS]நீர் என்னை உயரத்தூக்கி, கீழேத் தள்ளினீர், [QE][QS]உமது கோபத்திற்கும், கடுங்கோபத்திற்கும் உள்ளானேன். [QE]
10. [QS]ஆதலால், நான் சாம்பலை அப்பமாகச் சாப்பிட்டு, [QE][QS]என்னுடைய பானங்களைக் கண்ணீரோடு கலக்கிறேன். [QE]
11. [QS]என்னுடைய ஆயுசு நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலிருக்கிறது; [QE][QS]புல்லைப்போல் உலர்ந்துபோகிறேன். [QE]
12. [QS]யெகோவாவாகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்; [QE][QS]உம்முடைய பெயரின் புகழ் தலைமுறை தலைமுறையாக நிற்கும். [QE]
13. [QS]தேவனே நீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; [QE][QS]அதற்கு தயவு செய்யும் காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது. [QE]
14. [QS]உம்முடைய ஊழியக்காரர்கள் அதின் கல்லுகள்மேல் வாஞ்சைவைத்து, [QE][QS]அதின் மண்ணுக்குப் பரிதபிக்கிறார்கள். [QE]
15. [QS]யெகோவா சீயோனைக் கட்டி, தமது மகிமையில் வெளிப்படுவார். [QE]
16. [QS]திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்செய்யாமல், [QE][QS]அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார். [QE]
17. [QS]அப்பொழுது தேசங்கள் யெகோவாவுடைய பெயருக்கும், [QE][QS]பூமியிலுள்ள ராஜாக்களெல்லோரும் உம்முடைய மகிமைக்கும் பயப்படுவார்கள். [QE]
18. [QS]பின்சந்ததிக்காக இது எழுதப்படும்; [QE][QS]உருவாக்கப்படும் மக்கள் யெகோவாவை துதிப்பார்கள். [QE]
19. [QS]யெகோவா கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும், [QE][QS]கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும், [QE]
20. [QS]தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பார்த்து, [QE][QS]வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்ணோக்கமானார். [QE]
21. [QS]யெகோவாவுக்கு ஆராதனைசெய்ய, மக்களும் ராஜ்ஜியங்களும் ஒன்றாகக் கூடிக்கொள்ளும்போது, [QE]
22. [QS]சீயோனில் யெகோவாவுடைய பெயரையும், [QE][QS]எருசலேமில் அவருடைய துதியையும் பறைசாற்றுவார்கள். [QE]
23. [QS]பாதி வயதில் என்னுடைய பெலனை அவர் ஒடுக்கி, [QE][QS]என்னுடைய நாட்களைக் குறுகச்செய்தார். [QE]
24. [QS]அப்பொழுது நான்: என் தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாமல் இரும்; [QE][QS]உம்முடைய வருடங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும். [QE]
25. [QS]நீர் ஆரம்பத்திலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; [QE][QS]வானங்கள் உம்முடைய கரத்தின் செயல்களாக இருக்கிறது. [QE]
26. [QS]அவைகள் அழிந்துபோகும், நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் ஆடையைப்போல் பழமையாகப்போகும்; [QE][QS]அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர், அப்பொழுது மாறிப்போகும். [QE]
27. [QS]நீரோ மாறாதவராக இருக்கிறீர்; [QE][QS]உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை. [QE]
28. [QS]உமது அடியாரின் பிள்ளைகள் வாழ்ந்திருப்பார்கள்; [QE][QS]அவர்களுடைய சந்ததி உமக்கு முன்பாக நிலைபெற்றிருக்கும் என்று சொன்னேன். [QE]