1. {தாவீதின் பாடல். } [QS]இரக்கத்தையும், நியாயத்தையும் குறித்துப் பாடுவேன்; [QE][QS]யெகோவாவே, உம்மை புகழ்ந்துபாடுவேன். [QE]
2. [QS]உத்தமமான வழியிலே நேர்மையாக நடப்பேன்; [QE][QS]எப்பொழுது என்னிடத்தில் வருவீர்! [QE][QS]என்னுடைய வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன். [QE]
3. [QS]தீங்கான காரியத்தை என்னுடைய கண்முன் வைக்கமாட்டேன்; [QE][QS]வழி விலகுகிறவர்களின் செயல்களை வெறுக்கிறேன்; [QE][QS]அது என்னைப் பற்றாது. [QE]
4. [QS]மாறுபாடான மக்கள் என்னைவிட்டு விலகவேண்டும்; [QE][QS]பொல்லாதவனை ஏற்கமாட்டேன். [QE]
5. [QS]பிறனை இரகசியமாக அவதூறுசெய்கிறவனை அழிப்பேன்; [QE][QS]பெருமைக் கண்ணனையும் திமிர்பிடித்த மனப்பான்மை உள்ளவனையும் பொறுக்கமாட்டேன். [QE]
6. [QS]தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடு குடியிருக்கும்படி என்னுடைய கண்கள் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கும்; [QE][QS]உத்தமமான வழியில் நடக்கிறவன் எனக்கு ஊழியம்செய்வான். [QE]
7. [QS]கபடுசெய்கிறவன் என்னுடைய வீட்டுக்குள் இருப்பதில்லை; [QE][QS]பொய்சொல்லுகிறவன் என்னுடைய கண்முன் நிலைப்பதில்லை. [QE]
8. [QS]அக்கிரமக்காரர்கள் ஒருவரும் யெகோவாவுடைய நகரத்தில் இல்லாதபடி வேர் அறுக்கப்பட்டுபோக, [QE][QS]தேசத்திலுள்ள அக்கிரமக்காரர்கள் அனைவரையும் அதிகாலமே அழிப்பேன். [QE]