1. {நன்றிப்பாடல். } [QS]பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடுங்கள். [QE]
2. [QS]மகிழ்ச்சியோடு யெகோவாவுக்கு ஆராதனைசெய்து, [QE][QS]ஆனந்தசத்தத்தோடு அவர் முன்பாக வாருங்கள். [QE]
3. [QS]யெகோவாவே தேவனென்று அறியுங்கள்; [QE][QS]நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; [QE][QS]நாம் அவர் மக்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாக இருக்கிறோம். [QE]
4. [QS]அவர் வாசல்களில் துதியோடும், அவர் முற்றங்களில் புகழ்ச்சியோடும் நுழைந்து, அவரைத் துதித்து, [QE][QS]அவருடைய பெயருக்கு நன்றிசெலுத்துங்கள். [QE]
5. [QS]யெகோவா நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், [QE][QS]அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது. [QE]