1. [QS]யெகோவாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? [QE][QS]துன்பம் நேரிடுகிற நேரங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்? [QE]
2. [QS]துன்மார்க்கன் தன்னுடைய பெருமையினால் [QE][QS]ஏழ்மையானவனை கொடூரமாகத் துன்பப்படுத்துகிறான்; [QE][QS]அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள். [QE]
3. [QS]துன்மார்க்கன் தன்னுடைய உள்ளத்தின் ஆசையில் பெருமை பாராட்டுகிறான், [QE][QS]பொருளை அபகரிக்கிறவன் யெகோவாவைச் சபித்து அசட்டைசெய்கிறான். [QE]
4. [QS]துன்மார்க்கன் தன்னுடைய கர்வத்தினால் தேவனைத் தேடமாட்டான்; [QE][QS]அவனுடைய நினைவுகளெல்லாம் தேவன் இல்லை என்பதே. [QE]
5. [QS]அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்; [QE][QS]உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாக இருக்கின்றன; [QE][QS]தன்னுடைய எதிராளிகள் எல்லோர்மேலும் சீறுகிறான். [QE]
6. [QS]நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லை [QE][QS]என்று தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். [QE]
7. [QS]அவன் வாய் சபிப்பினாலும், கபடத்தினாலும், [QE][QS]கொடுமையினாலும், நிறைந்திருக்கிறது; [QE][QS]அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு. [QE]
8. [QS]கிராமங்களின் மறைவான இடங்களிலே மறைந்திருந்து, [QE][QS]மறைவான இடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்; [QE][QS]திக்கற்றவர்களைப் பிடிக்க அவனுடைய கண்கள் நோக்கிக்கொண்டிருக்கின்றன. [QE]
9. [QS]தன்னுடைய கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் மறைந்திருக்கிறான்; [QE][QS]ஏழையைப் பிடிக்கப் மறைந்திருந்து, அவனைத் தன்னுடைய வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான். [QE]
10. [QS]திக்கற்றவர்கள் தன்னுடைய பலவான்கள் கையில் விழும்படி அவன் பதுங்கிக் கிடக்கிறான். [QE]
11. [QS]தேவன் அதை மறந்தார் என்று அவர் தம்முடைய முகத்தை மறைத்து, [QE][QS]எப்போதும் அதைக் காணமாட்டார் என்றும்; [QE][QS]தன்னுடைய இருதயத்திலே சொல்லிகொள்ளுகிறான். [QE]
12. [QS]யெகோவாவே, எழுந்தருளும்; [QE][QS]தேவனே, உம்முடைய கையை உயர்த்தும்; [QE][QS]ஏழைகளை மறக்காமலிரும். [QE]
13. [QS]துன்மார்க்கன் தேவனை அசட்டைசெய்து, [QE][QS]நீர் கேட்டு விசாரிப்பதில்லை; [QE][QS]என்று தன்னுடைய இருதயத்தில் ஏன் சொல்லிக்கொள்ளவேண்டும்? [QE]
14. [QS]அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும், [QE][QS]துக்கத்தையும் கவனித்திருக்கிறீரே; [QE][QS]நீர் பதிலளிப்பீர்; [QE][QS]ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; [QE][QS]திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே. [QE]
15. [QS]துன்மார்க்கனும் பொல்லாதவனுமாக இருக்கிறவனுடைய கையை முறித்துவிடும்; [QE][QS]அவனுடைய துன்மார்க்கம் காணாமற்போகும்வரை அதைத் தேடி விசாரியும். [QE]
16. [QS]யெகோவா எல்லாக் காலங்களுக்கும் இராஜாவாக இருக்கிறார்; [QE][QS]அந்நியமக்கள் அவருடைய தேசத்திலிருந்து அழிந்து போவார்கள். [QE]
17. [QS]யெகோவாவே, ஏழைகளுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; [QE][QS]அவர்கள் இருதயத்தை உறுதிப்படுத்துவீர். [QE]
18. [QS]மண்ணான மனிதன் இனிப் பலவந்தம்செய்யத் தொடராமல், [QE][QS]தேவனே நீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் [QE][QS]ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்ய [QE][QS]உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளுவீர். [QE]