1. {#1ஞானி மற்றும் பேதையர்களுக்கான அழைப்பு } [QS]ஞானம் தன்னுடைய வீட்டைக் கட்டி, [QE][QS]தன்னுடைய செதுக்கப்பட்ட ஏழு தூண்களையும் அமைத்து, [QE]
2. [QS]தன்னுடைய கொழுத்த மிருகங்களை அடித்து, [QE][QS]திராட்சைரசத்தை ஊற்றிவைத்து, [QE][QS]தன்னுடைய உணவுப்பந்தியை ஆயத்தப்படுத்தி, [QE]
3. [QS]தன்னுடைய பணிவிடைக்காரிகளை அனுப்பி, [QE][QS]பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு, [QE]
4. [QS]புத்தியீனனை நோக்கி: [QE][QS]எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும். [QE]
5. [QS]நீங்கள் வந்து என்னுடைய அப்பத்தைச் சாப்பிட்டு, [QE][QS]நான் ஊற்றிய திராட்சைரசத்தைக் குடியுங்கள். [QE]
6. [QS]பேதமையைவிட்டு விலகுங்கள், [QE][QS]அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; [QE][QS]புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று சொல்லுகிறது. [QE]
7. [QS]பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் அவமானமடைகிறான்; [QE][QS]துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான். [QE]
8. [QS]பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, [QE][QS]அவன் உன்னைப் பகைப்பான்; [QE][QS]ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், [QE][QS]அவன் உன்னை நேசிப்பான். [QE]
9. [QS]ஞானமுள்ளவனுக்குப் போதி, அவன் ஞானத்தில் தேறுவான்; [QE][QS]நீதிமானுக்கு உபதேசம் செய், [QE][QS]அவன் அறிவில் விருத்தியடைவான். [QE]
10. [QS]யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; [QE][QS]பரிசுத்த தேவனின் அறிவே அறிவு. [QE]
11. [QS]என்னாலே உன்னுடைய ஆயுசு நாட்கள் பெருகும்; [QE][QS]ஆயுளின் வருடங்கள் விருத்தியாகும். [QE]
12. [QS]நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்; [QE][QS]நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்று சொல்லுகிறது. [QE]
13. [QS]மதியற்ற பெண் வாயாடியும் ஒன்றுமறியாத மூடத்தனம் உள்ளவளுமாக இருக்கிறாள். [QE]
14. [QS]அவள் தன்னுடைய வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் இருக்கைபோட்டு உட்கார்ந்து, [QE]
15. [QS]தங்களுடைய வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கர்களைப் பார்த்து: [QE]
16. [QS]எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும் என்றும், [QE]
17. [QS]மதியீனனை நோக்கி: [QE][QS]திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், [QE][QS]மறைவான இடத்தில் சாப்பிடும் அப்பம் இன்பமாக இருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள். [QE]
18. [QS]இருப்பினும் இறந்தவர்கள் அந்த இடத்தில் உண்டென்றும், [QE][QS]அவளுடைய விருந்தாளிகள் நரக பாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியமாட்டான். [QE]