1. {#1விபசாரிக்கு எதிரான எச்சரிக்கை } [QS]என் மகனே, நீ என்னுடைய வார்த்தைகளைக்காத்து, [QE][QS]என்னுடைய கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து. [QE]
2. [QS]என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய போதகத்தையும் உன்னுடைய கண்மணியைப்போல் காத்துக்கொள், [QE][QS]அப்பொழுது பிழைப்பாய். [QE]
3. [QS]அவைகளை உன்னுடைய விரல்களில் கட்டி, [QE][QS]அவைகளை உன்னுடைய இருதயப்பலகையில் எழுதிக்கொள். [QE]
4. [QS]ஆசைவார்த்தைகளைப் பேசும் அந்நியப் பெண்ணாகிய ஒழுங்கீனமானவளுக்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக, [QE]
5. [QS]ஞானத்தை நோக்கி, நீ என்னுடைய சகோதரி என்றும், [QE][QS]புத்தியைப்பார்த்து, நீ என்னுடைய இனத்தைச் சேர்ந்தவள் என்றும் சொல்லு. [QE]
6. [QS]நான் என்னுடைய வீட்டின் ஜன்னல் அருகே நின்று, [QE][QS]அதின் வழியாகப் பார்த்தபோது, [QE]
7. [QS]பேதையர்களாகிய வாலிபர்களுக்குள்ளே [QE][QS]ஒரு புத்தியற்ற வாலிபனைக்கண்டு அவனை கவனித்தேன். [QE]
8. [QS]அவன் மாலைமயங்கும் சூரியன் மறையும் நேரத்திலும், [QE][QS]இரவின் இருளிலும். [QE]
9. [QS]அவள் இருக்கும் தெருவிற்கு அடுத்த தெருவில் சென்று, [QE][QS]அவளுடைய வீட்டுவழியாக நடந்துபோனான். [QE]
10. [QS]அப்பொழுது இதோ, விபசாரியின் ஆடை ஆபரணம் தரித்த [QE][QS]தந்திரமனமுள்ள ஒரு பெண் அவனுக்கு எதிர்ப்பட்டாள். [QE]
11. [QS]அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்; [QE][QS]அவளுடைய கால்கள் வீட்டிலே தங்குகிறதில்லை. [QE]
12. [QS]சிலவேளை வெளியிலே இருப்பாள், சிலவேளை வீதியில் இருப்பாள், [QE][QS]சந்துகள்தோறும் மறைந்திருப்பாள். [QE]
13. [QS]அவள் அவனைப் பிடித்து முத்தமிட்டு, [QE][QS]முகம் நாணாமல் அவனைப் பார்த்து: [QE]
14. [QS]சமாதான பலிகள் என்மேல் சுமந்திருந்தது, [QE][QS]இன்றைக்குத்தான் என்னுடைய பொருத்தனைகளை நிறைவேற்றினேன். [QE]
15. [QS]ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு, [QE][QS]உன் முகத்தை ஆவலோடு தேடினேன்; [QE][QS]இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன். [QE]
16. [QS]என்னுடைய மெத்தையை இரத்தினக் கம்பளங்களாலும், [QE][QS]எகிப்து தேசத்தின் விசித்திரமான மெல்லிய துணிகளாலும் அலங்கரித்தேன். [QE]
17. [QS]என்னுடைய படுக்கையை வெள்ளைப்போளத்தாலும் [QE][QS]சந்தனத்தாலும் இலவங்கப்பட்டையாலும் வாசனையாக்கினேன். [QE]
18. [QS]வா, விடியற்காலைவரைக்கும் சந்தோஷமாக இருப்போம், [QE][QS]இன்பங்களினால் பூரிப்போம். [QE]
19. [QS]கணவன் வீட்டிலே இல்லை, தூரப்பயணம் போனான். [QE]
20. [QS]பணப்பையைத் தன்னுடைய கையிலே கொண்டுபோனான், [QE][QS]குறிக்கப்பட்ட நாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி, [QE]
21. [QS]தன்னுடைய மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, [QE][QS]தன்னுடைய உதடுகளின் இனிமையான பேச்சால் அவனை இணங்கச்செய்தாள். [QE]
22. [QS]உடனே அவன் அவள் பின்னே சென்றான்; [QE][QS]ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலவும், [QE][QS]ஒரு மூடன் விலங்கிடப்பட்டு தண்டனைக்குப் போவதுபோலவும், [QE]
23. [QS]ஒரு குருவி தன்னுடைய உயிரை வாங்கும் கண்ணியை அறியாமல் [QE][QS]அதில் விழுவதற்கு விரைந்து போகிறதுபோலவும், [QE][QS]அவளுக்குப் பின்னே போனான்; [QE][QS]அம்பு அவனுடைய இருதயத்தைப் பிளந்தது. [QE]
24. [QS]ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; [QE][QS]என்னுடைய வாயின் வார்த்தைகளைக் கவனியுங்கள். [QE]
25. [QS]உன்னுடைய இருதயம் அவளுடைய வழியிலே சாயவேண்டாம்; [QE][QS]அவளுடைய பாதையிலே மயங்கித் திரியாதே. [QE]
26. [QS]அவள் அநேகரைக் காயப்படுத்தி, விழச்செய்தாள்; [QE][QS]பலவான்கள் அநேகரைக் கொலைசெய்தாள். [QE]
27. [QS]அவளுடைய வீடு பாதாளத்திற்குப்போகும் வழி; [QE][QS]அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும். [QE]