1. {#1விபசாரத்திற்கு எதிரான எச்சரிக்கை } [QS]என் மகனே, என்னுடைய ஞானத்தைக் கவனித்து, [QE][QS]என்னுடைய புத்திக்கு உன்னுடைய செவியைச் சாய்; [QE]
2. [QS]அப்பொழுது நீ விவேகத்தைப் பேணிக்கொள்வாய், [QE][QS]உன்னுடைய உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும். [QE]
3. [QS]ஒழுங்கீனமானவளின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; [QE][QS]அவளுடைய வாய் எண்ணெயைவிட மிருதுவாக இருக்கும். [QE]
4. [QS]அவளுடைய செயல்களின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும், [QE][QS]இருபுறமும் கூர்மையுள்ள பட்டயம்போல் கூர்மையுமாக இருக்கும். [QE]
5. [QS]அவளுடைய காலடிகள் மரணத்திற்கு இறங்கும்; [QE][QS]அவளுடைய நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும். [QE]
6. [QS]நீ வாழ்வின் வழியைச் சிந்தித்துக்கொள்ளாதபடி, [QE][QS]அவளுடைய நடைகள் மாறிமாறி அலையும்; அவைகளை அறியமுடியாது. [QE]
7. [QS]ஆதலால் பிள்ளைகளே; இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்; [QE][QS]என்னுடைய வாயின் வசனங்களைவிட்டு நீங்காமல் இருங்கள். [QE]
8. [QS]உன்னுடைய வழியை அவளுக்குத் தூரப்படுத்து; [QE][QS]அவளுடைய வீட்டின் வாசலுக்கு அருகில் சேராதே. [QE]
9. [QS]சேர்ந்தால் உன்னுடைய மேன்மையை அந்நியர்களுக்கும், [QE][QS]உன்னுடைய ஆயுளின் காலத்தைக் கொடூரமானவர்களுக்கும் கொடுத்துவிடுவாய். [QE]
10. [QS]அந்நியர்கள் உன்னுடைய செல்வத்தினால் திருப்தியடைவார்கள்; [QE][QS]உன்னுடைய உழைப்பின் பலன் மற்றவர்களுடைய வீட்டில் சேரும். [QE]
11. [QS]முடிவிலே உன்னுடைய மாம்சமும் உன்னுடைய சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து: [QE]
12. [QS]ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, [QE][QS]கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம் செய்ததே! [QE]
13. [QS]என்னுடைய போதகரின் சொல்லை நான் கேட்காலும், [QE][QS]எனக்கு உபதேசம்செய்தவர்களுக்கு செவிகொடுக்காமலும் போனேனே! [QE]
14. [QS]சபைக்குள்ளும் சங்கத்திற்குள்ளும் கொஞ்சம்குறைய [QE][QS]எல்லாத் தீமைக்கும் உள்ளானேனே! என்று முறையிடுவாய். [QE]
15. [QS]உன்னுடைய கிணற்றிலுள்ள தண்ணீரையும், [QE][QS]உன்னுடைய ஊற்றில் ஊறுகிற நீரையும் குடி. [QE]
16. [QS]உன்னுடைய ஊற்றுகள் வெளியிலும் [QE][QS]உன்னுடைய வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக. [QE]
17. [QS]அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாக இல்லாமல், [QE][QS]உனக்கே உரியவைகளாக இருப்பதாக. [QE]
18. [QS]உன்னுடைய ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; [QE][QS]உன்னுடைய இளவயதின் மனைவியோடு மகிழ்ந்திரு. [QE]
19. [QS]அவளே நேசிக்கப்படக்கூடிய பெண்மானும், [QE][QS]அழகான வரையாடும்போல இருப்பாளாக; [QE][QS]அவளுடைய மார்புகளே எப்பொழுதும் உன்னைத் திருப்தியாக்கும்; [QE][QS]அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிரு. [QE]
20. [QS]என் மகனே, நீ ஒழுங்கீனமானவளின்மேல் மயங்கித் திரிந்து, [QE][QS]அந்நிய பெண்ணின் மார்பைத் தழுவவேண்டியது என்ன? [QE]
21. [QS]மனிதனுடைய வழிகள் யெகோவாவின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; [QE][QS]அவனுடைய வழிகள் எல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார். [QE]
22. [QS]துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; [QE][QS]தன்னுடைய பாவக்கயிறுகளால் கட்டப்படுவான். [QE]
23. [QS]அவனுடைய புத்தியைக் கேட்காததினால் இறந்து, [QE][QS]தன்னுடைய மதிகேட்டின் மிகுதியினால் மயங்கிப்போவான். [QE]