1. {#1ஞானமே பிரதானம் } [QS]பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, [QE][QS]புத்தியை அடையும்படி கவனியுங்கள். [QE]
2. [QS]நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்; [QE][QS]என் உபதேசத்தை விடாதிருங்கள். [QE]
3. [QS]நான் என்னுடைய தகப்பனுக்குப் பிரியமான மகனும், [QE][QS]என்னுடைய தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன். [QE]
4. [QS]அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: [QE][QS]உன்னுடைய இருதயம் என்னுடைய வார்த்தைகளைக் காத்துக்கொள்வதாக; [QE][QS]என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய். [QE]
5. [QS]ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; [QE][QS]என்னுடைய வாயின் வார்த்தைகளை மறக்காமலும் விட்டு விலகாமலும் இரு. [QE]
6. [QS]அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்; [QE][QS]அதின்மேல் பிரியமாக இரு, [QE][QS]அது உன்னைக் காத்துக்கொள்ளும். [QE]
7. [QS]ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; [QE][QS]என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள். [QE]
8. [QS]நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; [QE][QS]நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உனக்கு மரியாதை செலுத்தும். [QE]
9. [QS]அது உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடத்தைக் கொடுக்கும்; [QE][QS]அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும். [QE]
10. [QS]என் மகனே, கேள், என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்; [QE][QS]அப்பொழுது உன்னுடைய ஆயுளின் வருடங்கள் அதிகமாகும். [QE]
11. [QS]ஞானவழியை நான் உனக்குப் போதித்தேன்; [QE][QS]செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன். [QE]
12. [QS]நீ அவைகளில் நடக்கும்போது உன்னுடைய நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; [QE][QS]நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய். [QE]
13. [QS]புத்திமதியை உறுதியாகப் பற்றிக்கொள், [QE][QS]அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு உயிர். [QE]
14. [QS]துன்மார்க்கர்களுடைய பாதையில் நுழையாதே; [QE][QS]தீயோர்களுடைய வழியில் நடக்காதே. [QE]
15. [QS]அதை வெறுத்துவிடு, அதின் வழியாகப் போகாதே; [QE][QS]அதைவிட்டு விலகிக் கடந்துபோ. [QE]
16. [QS]தீங்கு செய்யாமல் அவர்களுக்கு தூக்கம் வராது; [QE][QS]அவர்கள் யாரையாவது விழச்செய்யாமல் இருந்தால் அவர்களுடைய தூக்கம் கலைந்துபோகும். [QE]
17. [QS]அவர்கள் துன்மார்க்கத்தின் அப்பத்தைச் சாப்பிட்டு, [QE][QS]கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள். [QE]
18. [QS]நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் [QE][QS]அதிகமதிகமாகப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போல இருக்கும். [QE]
19. [QS]துன்மார்க்கர்களுடைய பாதையோ காரிருளைப்போல இருக்கும்; [QE][QS]தாங்கள் எதினால் இடறுகிறோம் என்பதை அறியமாட்டார்கள். [QE]
20. [QS]என் மகனே, என்னுடைய வார்த்தைகளைக் கவனி; [QE][QS]என்னுடைய வசனங்களுக்கு உன்னுடைய செவியைச் சாய். [QE]
21. [QS]அவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக; [QE][QS]அவைகளை உன்னுடைய இருதயத்திற்குள்ளே காத்துக்கொள். [QE]
22. [QS]அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் உயிரும், [QE][QS]அவர்களுடைய உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம். [QE]
23. [QS]எல்லாக் காவலோடும் உன்னுடைய இருதயத்தைக் காத்துக்கொள், [QE][QS]அதிலிருந்து ஜீவஊற்று புறப்படும். [QE]
24. [QS]வாயின் தாறுமாறுகளை உன்னைவிட்டு அகற்றி, [QE][QS]உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து. [QE]
25. [QS]உன்னுடைய கண்கள் நேராக நோக்குவதாக; [QE][QS]உன்னுடைய கண்ணின் இமைகள் உனக்கு முன்னே செவ்வையாகப் பார்க்கட்டும். [QE]
26. [QS]உன்னுடைய நடைகளைச் சீர்தூக்கிப்பார்; [QE][QS]உன்னுடைய வழிகளெல்லாம் பத்திரப்பட்டிருக்கட்டும். [QE]
27. [QS]வலதுபுறமோ இடதுபுறமோ சாயாதே; [QE][QS]உன்னுடைய காலைத் தீமைக்கு விலக்கு. [QE]