தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
நீதிமொழிகள்
1. {#1லேமுவேலிற்கு சொல்லப்பட்ட வசனங்கள் } [QS]ராஜாவாகிய லேமுவேலின் வசனங்கள்; [QE][QS]அவனுடைய தாய் அவனுக்குப் போதித்த உபதேசம்: [QE]
2. [QS]என் மகனே, என்னுடைய கர்ப்பத்தின் மகனே, [QE][QS]என்னுடைய பொருத்தனைகளின் மகனே, [QE]
3. [QS]பெண்களுக்கு உன்னுடைய பெலனையும் [QE][QS]ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன்னுடைய வழிகளையும் கொடுக்காதே. [QE]
4. [QS]திராட்சைரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; [QE][QS]லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; [QE][QS]மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல. [QE]
5. [QS]மதுபானம் குடித்தால் அவர்களுடைய நியாயப்பிரமாணத்தை மறந்து, [QE][QS]சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள். [QE]
6. [QS]மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சைரசத்தையும் கொடுங்கள்; [QE]
7. [QS]அவன் குடித்துத் தன்னுடைய குறைவை மறந்து, [QE][QS]தன்னுடைய வருத்தத்தை அப்புறம் நினைக்காமல் இருக்கட்டும். [QE]
8. [QS]ஊமையனுக்காகவும் திக்கற்றவர்கள் எல்லோருடைய நியாயத்திற்காகவும் [QE][QS]உன்னுடைய வாயைத் திற. [QE]
9. [QS]உன்னுடைய வாயைத் திறந்து, நீதியாக நியாயம் தீர்த்து, [QE][QS]சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயம் செய். [QE]
10. [QS]குணசாலியான பெண்ணைக் கண்டுபிடிப்பவன் யார்? [QE][QS]அவளுடைய விலை முத்துக்களைவிட உயர்ந்தது. [QE]
11. [QS]அவளுடைய கணவனுடைய இருதயம் அவளை நம்பும்; [QE][QS]அவனுடைய செல்வம் குறையாது. [QE]
12. [QS]அவள் உயிரோடிருக்கிற நாட்களெல்லாம் அவனுக்குத் தீமையை அல்ல, [QE][QS]நன்மையையே செய்கிறாள். [QE]
13. [QS]ஆட்டு ரோமத்தையும் சணலையும் தேடி, [QE][QS]தன்னுடைய கைகளினால் உற்சாகத்தோடு வேலைசெய்கிறாள். [QE]
14. [QS]அவள் வியாபாரக் கப்பல்களைப்போல இருக்கிறாள்; [QE][QS]தூரத்திலிருந்து தன்னுடைய உணவைக் கொண்டுவருகிறாள். [QE]
15. [QS]இருட்டோடு எழுந்து தன்னுடைய வீட்டாருக்கு உணவுகொடுத்து, [QE][QS]தன்னுடைய வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள். [QE]
16. [QS]ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; [QE][QS]தன்னுடைய கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சைத்தோட்டத்தை நாட்டுகிறாள். [QE]
17. [QS]தன்னை பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, [QE][QS]தன்னுடைய கைகளைப் பலப்படுத்துகிறாள். [QE]
18. [QS]தன்னுடைய வியாபாரம் பயனுள்ளதென்று அறிந்திருக்கிறாள்; [QE][QS]இரவிலே அவளுடைய விளக்கு அணையாமல் இருக்கும். [QE]
19. [QS]தன்னுடைய கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; [QE][QS]அவளுடைய விரல்கள் கதிரைப் பிடிக்கும். [QE]
20. [QS]சிறுமையானவர்களுக்குத் தன்னுடைய கையைத் திறந்து, [QE][QS]ஏழைகளுக்குத் தன்னுடைய கரங்களை நீட்டுகிறாள். [QE]
21. [QS]தன்னுடைய வீட்டார் அனைவருக்கும் கம்பளி ஆடை இருக்கிறபடியால், [QE][QS]தன்னுடைய வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படமாட்டாள். [QE]
22. [QS]இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டாக்குகிறாள்; [QE][QS]மெல்லிய புடவையும் இரத்தாம்பரமும் அவளுடைய ஆடை. [QE]
23. [QS]அவளுடைய கணவன் தேசத்தின் மூப்பர்களோடு நீதிமன்றங்களில் உட்கார்ந்திருக்கும்போது [QE][QS]பெயர் பெற்றவனாக இருக்கிறான். [QE]
24. [QS]மெல்லிய புடவைகளை உண்டாக்கி விற்கிறாள்; [QE][QS]கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள். [QE]
25. [QS]அவளுடைய உடை பலமும் அலங்காரமுமாக இருக்கிறது; [QE][QS]வருங்காலத்தைப் பற்றியும் மகிழுகிறாள். [QE]
26. [QS]தன்னுடைய வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; [QE][QS]தயையுள்ள போதகம் அவளுடைய நாவின்மேல் இருக்கிறது. [QE]
27. [QS]அவள் சோம்பலின் அப்பத்தை சாப்பிடாமல், [QE][QS]தன்னுடைய வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாக இருக்கிறாள். [QE]
28. [QS]அவளுடைய பிள்ளைகள் எழும்பி, [QE][QS]அவளை பாக்கியவதி என்கிறார்கள்; [QE][QS]அவளுடைய கணவன் அவளைப்பார்த்து: [QE]
29. [QS]அநேகம் பெண்கள் குணசாலிகளாக இருந்தது உண்டு; [QE][QS]நீயோ அவர்கள் எல்லோரையும்விட மேலானவள் என்று அவளைப் புகழுகிறான். [QE]
30. [QS]செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், [QE][QS]யெகோவாவுக்குப் பயப்படுகிற பெண்ணே புகழப்படுவாள். [QE]
31. [QS]அவளுடைய கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; [QE][QS]அவளுடைய செயல்கள் வாசல்களில் அவளைப் புகழ்வதாக.[QE]
மொத்தம் 31 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 31 / 31
லேமுவேலிற்கு சொல்லப்பட்ட வசனங்கள் 1 ராஜாவாகிய லேமுவேலின் வசனங்கள்; அவனுடைய தாய் அவனுக்குப் போதித்த உபதேசம்: 2 என் மகனே, என்னுடைய கர்ப்பத்தின் மகனே, என்னுடைய பொருத்தனைகளின் மகனே, 3 பெண்களுக்கு உன்னுடைய பெலனையும் ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன்னுடைய வழிகளையும் கொடுக்காதே. 4 திராட்சைரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல. 5 மதுபானம் குடித்தால் அவர்களுடைய நியாயப்பிரமாணத்தை மறந்து, சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள். 6 மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சைரசத்தையும் கொடுங்கள்; 7 அவன் குடித்துத் தன்னுடைய குறைவை மறந்து, தன்னுடைய வருத்தத்தை அப்புறம் நினைக்காமல் இருக்கட்டும். 8 ஊமையனுக்காகவும் திக்கற்றவர்கள் எல்லோருடைய நியாயத்திற்காகவும் உன்னுடைய வாயைத் திற. 9 உன்னுடைய வாயைத் திறந்து, நீதியாக நியாயம் தீர்த்து, சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயம் செய். 10 குணசாலியான பெண்ணைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைவிட உயர்ந்தது. 11 அவளுடைய கணவனுடைய இருதயம் அவளை நம்பும்; அவனுடைய செல்வம் குறையாது. 12 அவள் உயிரோடிருக்கிற நாட்களெல்லாம் அவனுக்குத் தீமையை அல்ல, நன்மையையே செய்கிறாள். 13 ஆட்டு ரோமத்தையும் சணலையும் தேடி, தன்னுடைய கைகளினால் உற்சாகத்தோடு வேலைசெய்கிறாள். 14 அவள் வியாபாரக் கப்பல்களைப்போல இருக்கிறாள்; தூரத்திலிருந்து தன்னுடைய உணவைக் கொண்டுவருகிறாள். 15 இருட்டோடு எழுந்து தன்னுடைய வீட்டாருக்கு உணவுகொடுத்து, தன்னுடைய வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள். 16 ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; தன்னுடைய கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சைத்தோட்டத்தை நாட்டுகிறாள். 17 தன்னை பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன்னுடைய கைகளைப் பலப்படுத்துகிறாள். 18 தன்னுடைய வியாபாரம் பயனுள்ளதென்று அறிந்திருக்கிறாள்; இரவிலே அவளுடைய விளக்கு அணையாமல் இருக்கும். 19 தன்னுடைய கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; அவளுடைய விரல்கள் கதிரைப் பிடிக்கும். 20 சிறுமையானவர்களுக்குத் தன்னுடைய கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன்னுடைய கரங்களை நீட்டுகிறாள். 21 தன்னுடைய வீட்டார் அனைவருக்கும் கம்பளி ஆடை இருக்கிறபடியால், தன்னுடைய வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படமாட்டாள். 22 இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டாக்குகிறாள்; மெல்லிய புடவையும் இரத்தாம்பரமும் அவளுடைய ஆடை. 23 அவளுடைய கணவன் தேசத்தின் மூப்பர்களோடு நீதிமன்றங்களில் உட்கார்ந்திருக்கும்போது பெயர் பெற்றவனாக இருக்கிறான். 24 மெல்லிய புடவைகளை உண்டாக்கி விற்கிறாள்; கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள். 25 அவளுடைய உடை பலமும் அலங்காரமுமாக இருக்கிறது; வருங்காலத்தைப் பற்றியும் மகிழுகிறாள். 26 தன்னுடைய வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவளுடைய நாவின்மேல் இருக்கிறது. 27 அவள் சோம்பலின் அப்பத்தை சாப்பிடாமல், தன்னுடைய வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாக இருக்கிறாள். 28 அவளுடைய பிள்ளைகள் எழும்பி, அவளை பாக்கியவதி என்கிறார்கள்; அவளுடைய கணவன் அவளைப்பார்த்து: 29 அநேகம் பெண்கள் குணசாலிகளாக இருந்தது உண்டு; நீயோ அவர்கள் எல்லோரையும்விட மேலானவள் என்று அவளைப் புகழுகிறான். 30 செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், யெகோவாவுக்குப் பயப்படுகிற பெண்ணே புகழப்படுவாள். 31 அவளுடைய கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செயல்கள் வாசல்களில் அவளைப் புகழ்வதாக.
மொத்தம் 31 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 31 / 31
×

Alert

×

Tamil Letters Keypad References