1. {#1மதியீனன் } [QS]கோடைக்காலத்திலே உறைந்த பனியும், [QE][QS]அறுப்புக்காலத்திலே மழையும் தகாததுபோல, [QE][QS]மூடனுக்கு மகிமை தகாது. [QE]
2. [QS]அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலவும், [QE][QS]தகைவிலான் குருவி பறந்து போவதுபோலவும், [QE][QS]காரணம் இல்லாமல் சொன்னசாபம் தங்காது. [QE]
3. [QS]குதிரைக்குச் சவுக்கும், கழுதைக்குக் கடிவாளமும், [QE][QS]மூடனுடைய முதுகுக்குப் பிரம்பும் ஏற்றது. [QE]
4. [QS]மூடனுக்கு அவனுடைய மதியீனத்தின்படி மறுஉத்திரவு கொடுக்காதே; [QE][QS]கொடுத்தால் நீயும் அவனைப்போல ஆவாய். [QE]
5. [QS]மூடனுக்கு அவனுடைய மதியீனத்தின்படி மறுஉத்திரவு கொடு; [QE][QS]கொடுக்காவிட்டால் அவன் தன்னுடைய பார்வைக்கு ஞானியாக இருப்பான். [QE]
6. [QS]மூடன் கையிலே செய்தி அனுப்புகிறவன் [QE][QS]தன்னுடைய கால்களையே வெட்டிக்கொண்டு நஷ்டத்தை அடைகிறான். [QE]
7. [QS]நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும், [QE][QS]அப்படியே மூடர்களின் வாயிலுள்ள உவமைச்சொல்லும் குந்தும். [QE]
8. [QS]மூடனுக்கு மரியாதை கொடுக்கிறவன் கவணிலே கல்லைக்கட்டுகிறவன்போல் இருப்பான். [QE]
9. [QS]மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி [QE][QS]வெறியன் கையில் அகப்பட்ட முள். [QE]
10. [QS]பலத்தவன் அனைவரையும் நோகச்செய்து, [QE][QS]மூடனையும் வேலைவாங்குகிறான், [QE][QS]மீறி நடக்கிறவர்களையும் வேலைவாங்குகிறான். [QE]
11. [QS]நாயானது தான் கக்கினதை சாப்பிடும்படித் திரும்புவதுபோல, [QE][QS]மூடனும் தன்னுடைய மூடத்தனத்திற்குத் திரும்புகிறான். [QE]
12. [QS]தன்னுடைய பார்வைக்கு ஞானியாக இருப்பவனைக் கண்டால், [QE][QS]அவனைவிட மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாக இருக்கலாம். [QE]
13. [QS]வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான். [QE]
14. [QS]கதவு கீல்முளையில் ஆடுகிறதுபோல, [QE][QS]சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான். [QE]
15. [QS]சோம்பேறி தன்னுடைய கையைக் கலத்திலே வைத்து [QE][QS]அதைத் தன்னுடைய வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான். [QE]
16. [QS]புத்தியுள்ள மறுஉத்திரவு சொல்லத்தகும் ஏழுபேரைவிட [QE][QS]சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன். [QE]
17. [QS]வழியிலே போகும்போது தனக்கு சம்மந்தமில்லாத வழக்கில் தலையிடுகிறவன் [QE][QS]நாயைக் காதைப் பிடித்து இழுக்கிறவனைப்போல இருக்கிறான். [QE]
18. [QS]கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ, [QE]
19. [QS]அப்படியே, தன்னோடு இருந்தவனை வஞ்சித்து: [QE][QS]நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் [QE][QS]என்று சொல்லுகிற மனிதனும் இருக்கிறான். [QE]
20. [QS]விறகில்லாமல் நெருப்பு அணையும்; [QE][QS]கோள்சொல்லுகிறவன் இல்லாமல் சண்டை அடங்கும். [QE]
21. [QS]கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, [QE][QS]கோபக்காரன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன். [QE]
22. [QS]கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போல இருக்கும்; [QE][QS]ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் குத்தும். [QE]
23. [QS]நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் [QE][QS]வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போல இருக்கும். [QE]
24. [QS]பகைஞன் தன்னுடைய உள்ளத்தில் கபடத்தை மறைத்து, [QE][QS]தன்னுடைய உதடுகளினால் சூதுபேசுகிறான். [QE]
25. [QS]அவன் தாழ்மையாக பேசினாலும் அவனை நம்பாதே; [QE][QS]அவனுடைய இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு. [QE]
26. [QS]பகையை வஞ்சகமாக மறைத்து வைக்கிறவன் எவனோ, [QE][QS]அவனுடைய பொல்லாங்கு மகா சபையிலே வெளிப்படுத்தப்படும். [QE]
27. [QS]படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; [QE][QS]கல்லைப் புரட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்ப விழும். [QE]
28. [QS]பொய்நாவு தன்னால் பாதிக்கப்பட்டவர்களைப் பகைக்கும்; [QE][QS]முகஸ்துதி பேசும் வாய் அழிவை உண்டாக்கும். [QE]