1. {#1மேலும் சாலொமோனின் நீதிமொழிகள் } [QS]யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனிதர்கள் [QE][QS]பெயர்த்து எழுதின சாலொமோனுடைய நீதிமொழிகள்: [QE]
2. [QS]காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; [QE][QS]காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை. [QE]
3. [QS]வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும், [QE][QS]ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது. [QE]
4. [QS]வெள்ளியிலிருந்து கழிவை நீக்கிவிடு, [QE][QS]அப்பொழுது கொல்லனால் நல்ல பாத்திரம் வெளிப்படும். [QE]
5. [QS]ராஜாவின் முன்னின்று துன்மார்க்கர்களை நீக்கிவிடு, [QE][QS]அப்பொழுது அவனுடைய சிங்காசனம் நீதியினால் நிலைநிற்கும். [QE]
6. [QS]ராஜாவின் சமுகத்தில் மேன்மைபாராட்டாதே; [QE][QS]பெரியோர்களுடைய இடத்தில் நிற்காதே. [QE]
7. [QS]உன் கண்கள் கண்ட பிரபுவின் சமுகத்தில் நீ தாழ்த்தப்படுவது நல்லதல்ல; [QE][QS]அவன் உன்னைப் பார்த்து: [QE][QS]மேலே வா என்று சொல்வதே உனக்கு மேன்மை. [QE]
8. [QS]வழக்காடப் வேகமாகமாகப் போகாதே; [QE][QS]முடிவிலே உன்னுடைய அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது, [QE][QS]நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே. [QE]
9. [QS]நீ உன்னுடைய அயலானுடனேமட்டும் உன்னுடைய வழக்கைக்குறித்து வழக்காடு, [QE][QS]மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே. [QE]
10. [QS]மற்றப்படி அதைக் கேட்கிறவன் [QE][QS]உன்னை நிந்திப்பான்; [QE][QS]உன்னுடைய அவமானம் உன்னைவிட்டு நீங்காது. [QE]
11. [QS]ஏற்ற நேரத்தில் சொன்ன வார்த்தை [QE][QS]வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமம். [QE]
12. [QS]கேட்கிற காதுக்கு, ஞானமாகக் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன், [QE][QS]பொற்கடுக்கனுக்கும் தங்க மோதிரத்திற்கும் சமம். [QE]
13. [QS]அறுவடைக்காலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ, [QE][QS]அப்படியே உண்மையான தூதுவனும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான்; [QE][QS]அவன் தன்னுடைய எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரச்செய்வான். [QE]
14. [QS]கொடுப்பேன் என்று சொல்லியும் கொடுக்காமல் இருக்கிற வஞ்சகன் [QE][QS]மழையில்லாத மேகங்களுக்கும் காற்றுக்கும் சமம். [QE]
15. [QS]நீண்ட பொறுமையினால் [QE][QS]பிரபுவையும் சம்மதிக்கச்செய்யலாம்; [QE][QS]இனிய நாவு எலும்பையும் நொறுக்கும். [QE]
16. [QS]தேனைக் கண்டுபிடித்தால் அளவாகச் சாப்பிடு; [QE][QS]அதிகமாக சாப்பிட்டால் வாந்திபண்ணுவாய். [QE]
17. [QS]உன்னுடைய அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடி, [QE][QS]அடிக்கடி அவனுடைய வீட்டில் கால்வைக்காதே. [QE]
18. [QS]பிறனுக்கு விரோதமாகப் பொய்சாட்சி சொல்லுகிற மனிதன் [QE][QS]தண்டாயுதத்திற்கும் வாளிற்கும் கூர்மையான அம்பிற்கும் ஒப்பானவன். [QE]
19. [QS]ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது [QE][QS]உடைந்த பல்லுக்கும் மூட்டு விலகிய காலுக்கும் சமம். [QE]
20. [QS]மனதுக்கமுள்ளவனுக்குப் பாடல்களைப் பாடுகிறவன், [QE][QS]குளிர்காலத்தில் ஆடையை களைகிறவனைப்போலவும், [QE][QS]வெடியுப்பின்[* காயத்தின் மேல் உப்பு. காரத்தை/ வலியை அதிகமாக்கும் ]மேல் ஊற்றிய காடியைப்போலவும் இருப்பான். [QE]
21. [QS]உன்னுடைய எதிரிகள் பசியாக இருந்தால், [QE][QS]அவனுக்கு சாப்பிட உணவு கொடு; [QE][QS]அவன் தாகமாக இருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு. [QE]
22. [QS]அதினால் அவனை வெட்கப்படுத்துவாய்;[† நீ அவனுடைய தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய் ] [QE][QS]யெகோவா உனக்குப் பலனளிப்பார். [QE]
23. [QS]வடகாற்று மழையையும், [QE][QS]புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும். [QE]
24. [QS]சண்டைக்காரியோடு ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைவிட, [QE][QS]வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம். [QE]
25. [QS]தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி [QE][QS]தாகம் மிகுந்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமம். [QE]
26. [QS]துன்மார்க்கர்களுக்கு முன்பாக [QE][QS]நீதிமான் தள்ளாடுவது கலங்கின கிணற்றுக்கும் கெட்டுப்போன நீரூற்றுக்கும் ஒப்பாகும். [QE]
27. [QS]தேனை அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல, [QE][QS]தற்புகழை நாடுவதும் புகழல்ல. [QE]
28. [QS]தன்னுடைய ஆவியை அடக்காத மனிதன் [QE][QS]மதில் இடிந்த பாழான பட்டணம்போல இருக்கிறான். [QE]