1. {#1ஞானத்திற்கான அறிவுரைகள் } [QS]பொல்லாத மனிதர்கள்மேல் பொறாமைகொள்ளாதே; [QE][QS]அவர்களோடு இருக்கவும் விரும்பாதே. [QE]
2. [QS]அவர்களுடைய இருதயம் கொடுமையை யோசிக்கும், [QE][QS]அவர்களுடைய உதடுகள் தீவினையைப் பேசும். [QE]
3. [QS]வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும். [QE]
4. [QS]அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான எல்லாவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும். [QE]
5. [QS]ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; [QE][QS]அறிவுள்ளவன் தன்னுடைய வல்லமையை அதிகரிக்கச்செய்கிறான். [QE]
6. [QS]நல்யோசனைசெய்து யுத்தம்செய்; [QE][QS]ஆலோசனைக்காரர்கள் அநேகரால் வெற்றி கிடைக்கும். [QE]
7. [QS]மூடனுக்கு ஞானம் எட்டாத உயரமாக இருக்கும்; [QE][QS]அவன் நீதிமன்றத்தில் தன்னுடைய வாயைத் திறக்கமாட்டான். [QE]
8. [QS]தீவினைசெய்ய நினைக்கிறவன் மதிகெட்டவன் என்னப்படுவான். [QE]
9. [QS]தீயநோக்கம் பாவமாகும்; பரியாசக்காரன் மனிதர்களுக்கு அருவருப்பானவன். [QE]
10. [QS]ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோனால், [QE][QS]உன்னுடைய பெலன் குறுகினது. [QE]
11. [QS]மரணத்திற்கு ஒப்புவிக்கப்பட்டவர்களையும், கொலைசெய்வதற்கு கொண்டுபோகிறவர்களையும் [QE][QS]விடுவிக்க முடிந்தால் விடுவி. [QE]
12. [QS]அதை நாங்கள் அறியோம் என்று சொன்னால், [QE][QS]இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியமாட்டாரோ? [QE][QS]உன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறவர் கவனிக்கமாட்டாரோ? [QE][QS]அவர் மனிதர்களுக்கு அவனவன் செயல்களுக்கு தக்கதாகப் பலனளிக்கமாட்டாரோ? [QE]
13. [QS]என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது; [QE][QS]கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாக இருக்கும். [QE]
14. [QS]அப்படியே ஞானத்தை அறிந்துகொள்வது உன்னுடைய ஆத்துமாவுக்கு இன்பமாக இருக்கும்; [QE][QS]அதைப் பெற்றுக்கொண்டால், அது முடிவில் உதவும், [QE][QS]உன்னுடைய நம்பிக்கை வீண்போகாது. [QE]
15. [QS]துன்மார்க்கனே, நீ நீதிமானுடைய வீட்டிற்கு விரோதமாக மறைந்திருக்காதே; [QE][QS]அவன் தங்கும் இடத்தைப் பாழாக்கிப்போடாதே. [QE]
16. [QS]நீதிமான் ஏழுமுறை விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; [QE][QS]துன்மார்க்கர்களோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள். [QE]
17. [QS]உன் எதிரி விழும்போது சந்தோஷப்படாதே; [QE][QS]அவன் இடறும்போது உன்னுடைய இருதயம் சந்தோஷப்படாமல் இருப்பதாக. [QE]
18. [QS]யெகோவா அதைக் காண்பார், அது அவருடைய பார்வைக்கு தீங்காக இருக்கும்; [QE][QS]அப்பொழுது அவனிடத்திலிருந்து அவர் தமது கோபத்தை நீக்கிவிடுவார். [QE]
19. [QS]பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலாகாதே; [QE][QS]துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே. [QE]
20. [QS]துன்மார்க்கனுக்கு நல்ல முடிவு இல்லை; [QE][QS]துன்மார்க்கர்களுடைய விளக்கு அணைந்துபோகும். [QE]
21. [QS]என் மகனே, நீ யெகோவாவுக்கும் ராஜாவுக்கும் பயந்து நட, [QE][QS]கலகக்காரர்களோடு சேராதே. [QE]
22. [QS]திடீரென அவர்களுடைய ஆபத்து எழும்பும்; [QE][QS]அவர்கள் இருவரின் அழிவையும் அறிந்தவன் யார்? [QE]
23. [QS]பின்னும் ஞானமுள்ளவர்களின் புத்திமதிகள் என்னவெனில்: [QE][QS]நியாயத்திலே பாரபட்சம் நல்லதல்ல. [QE]
24. [QS]துன்மார்க்கனைப் பார்த்து: [QE][QS]நீதிமானாக இருக்கிறாய் என்று சொல்லுகிறவனை மக்கள் சபிப்பார்கள், [QE][QS]குடிமக்கள் அவனை வெறுப்பார்கள். [QE]
25. [QS]அவனைக் கடிந்துகொள்ளுகிறவர்கள்மேல் பிரியம் உண்டாகும், [QE][QS]அவர்களுக்கு உத்தம ஆசீர்வாதம் கிடைக்கும். [QE]
26. [QS]செம்மையான மறுமொழி சொல்லுகிறவன் [QE][QS]உதடுகளை முத்தமிடுகிறவனுக்குச் சமம். [QE]
27. [QS]வெளியில் உன்னுடைய வேலையைத் தயாராக்கி, [QE][QS]வயலில் அதை ஒழுங்காக்கி, [QE][QS]பின்பு உன்னுடைய வீட்டைக் கட்டு. [QE]
28. [QS]நியாயமில்லாமல் பிறனுக்கு விரோதமாகச் சாட்சியாக ஏற்படாதே; [QE][QS]உன்னுடைய உதடுகளினால் வஞ்சகம் பேசாதே. [QE]
29. [QS]அவன் எனக்குச் செய்தபடி நானும் அவனுக்குச் செய்வேன், [QE][QS]அவன் செய்த செயல்களுக்குத் தகுந்தபடி நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே. [QE]
30. [QS]சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சைத்தோட்டத்தையும் கடந்துபோனேன். [QE]
31. [QS]இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாக இருந்தது; [QE][QS]நிலத்தின் முகத்தை முட்கள் மூடினது, [QE][QS]அதின் கற்சுவர் இடிந்துகிடந்தது.
32. அதைக் கண்டு சிந்தனை செய்தேன்; [QE][QS]அதை நோக்கிப் புத்தியடைந்தேன். [QE]
33. [QS]இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், [QE][QS]இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு தூங்கட்டும் என்பாயோ? [QE]
34. [QS]உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும் [QE][QS]உன் வறுமை ஆயுதம் அணிந்தவனைப்போலவும் வரும். [QE]