1. {#1யெகோவாவின் ஆளுகை } [QS]ராஜாவின் இருதயம் யெகோவாவின் கையில் நீரூற்றைப்போல இருக்கிறது; [QE][QS]அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார். [QE]
2. [QS]மனிதனுடைய வழியெல்லாம் அவனுடைய பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; [QE][QS]யெகோவாவோ இருதயங்களை நிறுத்திப்பார்க்கிறார். [QE]
3. [QS]பலியிடுவதைவிட, நீதியும் நியாயமும் செய்வதே யெகோவாவுக்குப் பிரியம். [QE]
4. [QS]மேட்டிமையான பார்வையும், [QE][QS]அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கர்கள் போடும் வெளிச்சம் பாவமே.
5. ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்திற்கும், [QE][QS]பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்திற்கும் ஏதுவாகும். [QE]
6. [QS]பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது [QE][QS]சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம்போல இருக்கும். [QE]
7. [QS]துன்மார்க்கர்கள் நியாயம்செய்ய மனமில்லாமல் இருக்கிறபடியால், [QE][QS]அவர்கள் அழிக்கப்பட்டுபோவார்கள். [QE]
8. [QS]குற்றமுள்ளவன் தன்னுடைய வழிகளில் மாறுபாடுள்ளவன்; [QE][QS]சுத்தமுள்ளவனோ தன்னுடைய செயலில் செம்மையானவன். [QE]
9. [QS]சண்டைக்காரியோடு ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைவிட, [QE][QS]வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம். [QE]
10. [QS]துன்மார்க்கனுடைய மனம் தீங்கைச் செய்ய விரும்பும்; [QE][QS]அவனுடைய கண்களில் அவனுடைய அயலானுக்கு இரக்கம் கிடையாது. [QE]
11. [QS]பரியாசக்காரனைத் தண்டிக்கும்போது பேதை ஞானமடைவான்; [QE][QS]ஞானவான் போதிக்கப்படும்போது அறிவடைவான். [QE]
12. [QS]நீதிபரர் துன்மார்க்கர்களுடைய வீட்டைக் கவனித்துப்பார்க்கிறார்; [QE][QS]துன்மார்க்கர்களைத் தீங்கில் கவிழ்த்துப்போடுவார். [QE]
13. [QS]ஏழையின் கூக்குரலுக்குத் தன்னுடைய செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், [QE][QS]தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான். [QE]
14. [QS]இரகசியமாக கொடுக்கப்பட்ட வெகுமதி கோபத்தைத் தணிக்கும்; [QE][QS]மடியிலுள்ள லஞ்சம் கோபத்தை ஆற்றும். [QE]
15. [QS]நியாயம்தீர்ப்பது நீதிமானுக்கு சந்தோஷமும், [QE][QS]அக்கிரமக்காரர்களுக்கோ அழிவுமாகும். [QE]
16. [QS]விவேகத்தின் வழியைவிட்டுத் தப்பி நடக்கிற மனிதன் செத்தவர்களின் கூட்டத்தில் தங்குவான். [QE]
17. [QS]சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; [QE][QS]மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் செல்வந்தனாவதில்லை. [QE]
18. [QS]நீதிமானுக்கு பதிலாக துன்மார்க்கனும், [QE][QS]செம்மையானவனுக்கு பதிலாக துரோகியும் மீட்கும் பொருளாவார்கள். [QE]
19. [QS]சண்டைக்காரியும் கோபக்காரியுமான பெண்ணுடன் குடியிருப்பதைவிட [QE][QS]வனாந்தரத்தில் குடியிருப்பது நலம். [QE]
20. [QS]வேண்டிய செல்வமும் எண்ணெயும் ஞானவானுடைய வீட்டில் உண்டு; [QE][QS]மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான். [QE]
21. [QS]நீதியையும் தயவையும் பின்பற்றுகிறவன் [QE][QS]நல்வாழ்வையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான். [QE]
22. [QS]பலவான்களுடைய பட்டணத்தின் மதிலை ஞானமுள்ளவன் ஏறிப்பிடித்து, [QE][QS]அவர்கள் நம்பின மதில்சுவரை இடித்துப்போடுவான். [QE]
23. [QS]தன்னுடைய வாயையும் தன்னுடைய நாவையும் காக்கிறவன் [QE][QS]தன்னுடைய ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான். [QE]
24. [QS]அகங்காரமும் அகந்தையும் உள்ளவனுக்குப் பரியாசக்காரன் என்று பெயர், [QE][QS]அவன் அகந்தையான கோபத்தோடு நடக்கிறான். [QE]
25. [QS]சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதிக்காததால், [QE][QS]அவனுடைய ஆசை அவனைக் கொல்லும். [QE]
26. [QS]அவன் நாள்தோறும் ஆவலுடன் விரும்புகிறான்; [QE][QS]நீதிமானோ தனக்கென்று வைத்துக்கொள்ளாமல் கொடுப்பான். [QE]
27. [QS]துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது; [QE][QS]அதைத் தீயசிந்தையோடு செலுத்தினாலோ எத்தனை அதிகமாக அருவருக்கப்படும். [QE]
28. [QS]பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்; [QE][QS]செவிகொடுக்கிறவனோ எப்பொழுதும் பேசக்கூடியவனாவான். [QE]
29. [QS]துன்மார்க்கன் தன்னுடைய முகத்தைக் கடினப்படுத்துகிறான்; [QE][QS]செம்மையானவனோ தன்னுடைய வழியை நேர்ப்படுத்துகிறான். [QE]
30. [QS]யெகோவாவுக்கு விரோதமான [QE][QS]ஞானமும், புத்தியும், ஆலோசனையும் இல்லை. [QE]
31. [QS]குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; [QE][QS]வெற்றியோ யெகோவாவால் வரும். [QE]