1. {#1ஞானத்தின் நற்பலன்கள் } [QS]என் மகனே, நீ உன்னுடைய செவியை ஞானத்திற்குச் சாய்த்து, [QE][QS]உன்னுடைய இருதயத்தைப் புத்திக்கு அமையச்செய்வதற்காக, [QE]
2. [QS]நீ என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, [QE][QS]என்னுடைய கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, [QE]
3. [QS]ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, [QE]
4. [QS]அதை வெள்ளியைப்போல் நாடி, [QE][QS]புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடினால், [QE]
5. [QS]அப்பொழுது யெகோவாவுக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, [QE][QS]தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். [QE]
6. [QS]யெகோவா ஞானத்தைத் தருகிறார்; [QE][QS]அவருடைய வாயிலிருந்து அறிவும் புத்தியும் வரும். [QE]
7. [QS]அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞானத்தை வைத்திருக்கிறார்; [QE][QS]உத்தமமாக நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாக இருக்கிறார். [QE]
8. [QS]அவர் நியாயத்தின் வழிகளைத் தற்காத்து, [QE][QS]தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார். [QE]
9. [QS]அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், [QE][QS]எல்லா நல்வழிகளையும் அறிந்துகொள்வாய். [QE]
10. [QS]ஞானம் உன்னுடைய இருதயத்தில் நுழைந்து, [QE][QS]அறிவு உன்னுடைய ஆத்துமாவுக்கு இன்பமாக இருக்கும்போது, [QE]
11. [QS]நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், [QE][QS]புத்தி உன்னைப் பாதுகாக்கும். [QE]
12. [QS]அதினால் நீ துன்மார்க்கர்களுடைய வழிக்கும், [QE][QS]மாறுபாடு பேசுகிற மனிதனுக்கும், [QE]
13. [QS]இருளான வழிகளில் நடக்க நீதிநெறிகளைவிட்டு, [QE]
14. [QS]தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கர்களுடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும், [QE]
15. [QS]மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் [QE][QS]நீ தப்புவிக்கப்படுவாய். [QE]
16. [QS]தன்னுடைய இளவயதின் நாயகனை விட்டு, [QE][QS]தன்னுடைய தேவனுடைய உடன்படிக்கையை மறந்து, [QE]
17. [QS]ஆசை வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய ஒழுங்கீனமானவளுக்கும் தப்புவிக்கப்படுவாய். [QE]
18. [QS]அவளுடைய வீடு மரணத்திற்கும், [QE][QS]அவளுடைய பாதைகள் மரித்தவர்களிடத்திற்கும் சாய்கிறது. [QE]
19. [QS]அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை, [QE][QS]வாழ்வின்பாதைகளில் வந்து சேருகிறதுமில்லை. [QE]
20. [QS]ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, [QE][QS]நீதிமான்களின் பாதைகளைக் காத்துக்கொள். [QE]
21. [QS]நன்மை செய்கிறவர்கள் பூமியிலே தங்குவார்கள்; [QE][QS]உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். [QE]
22. [QS]துன்மார்க்கர்களோ பூமியிலிருந்து துண்டிக்கப்பட்டுபோவார்கள்; [QE][QS]துரோகிகள் அதில் இல்லாதபடி அழிவார்கள். [QE]