தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
நீதிமொழிகள்
1. {#1ஞானம் நன்மைகளின் ஊற்று } [QS]மாறுபாடான உதடுகளுள்ள மூடனைவிட, [QE][QS]உத்தமனாக நடக்கிற தரித்திரனே சிறப்பானவன். [QE]
2. [QS]ஆத்துமா அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல; [QE][QS]கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான். [QE]
3. [QS]மனிதனுடைய மதியீனம் அவனுடைய வழியைத் தாறுமாறாக்கும்; [QE][QS]என்றாலும் அவனுடைய மனம் யெகோவாவுக்கு விரோதமாக எரிச்சலடையும். [QE]
4. [QS]செல்வம் அநேக நண்பர்களைச் சேர்க்கும்; [QE][QS]தரித்திரனோ தன்னுடைய நண்பனாலும் பிரிந்துபோவான். [QE]
5. [QS]பொய்ச்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பான்; [QE][QS]பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை. [QE]
6. [QS]பிரபுவின் தயவை அநேகர் வருந்திக் கேட்பார்கள்; [QE][QS]கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் நண்பன். [QE]
7. [QS]தரித்திரனை அவனுடைய சகோதரர்கள் எல்லோரும் பகைக்கிறார்களே, [QE][QS]எத்தனை அதிகமாக அவனுடைய நண்பர்கள் அவனுக்குத் தூரமாவார்கள்; [QE][QS]அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான், [QE][QS]அவைகளோ வெறும் வார்த்தைகளே. [QE]
8. [QS]ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை நேசிக்கிறான்; [QE][QS]புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான். [QE]
9. [QS]பொய்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பமாட்டான்; [QE][QS]பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான். [QE]
10. [QS]மூடனுக்குச் செல்வம் தகாது; [QE][QS]பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமையானவனுக்கு எவ்வளவும் தகாது. [QE]
11. [QS]மனிதனுடைய விவேகம் அவனுடைய கோபத்தை அடக்கும்; [QE][QS]குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை. [QE]
12. [QS]ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; [QE][QS]அவனுடைய தயவு புல்லின்மேல் பெய்யும் பனிபோல இருக்கும். [QE]
13. [QS]மூடனாகிய மகன் தன்னுடைய தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; [QE][QS]மனைவியின் சண்டைகள் ஓயாமல் ஒழுகும் நீர். [QE]
14. [QS]வீடும் செல்வமும் பெற்றோர்கள் வைக்கும் சொத்து; [QE][QS]புத்தியுள்ள மனைவியோ யெகோவா அருளும் ஈவு. [QE]
15. [QS]சோம்பல் தூங்கிவிழச்செய்யும்; [QE][QS]அசதியானவன் பட்டினியாக இருப்பான். [QE]
16. [QS]கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்; [QE][QS]தன்னுடைய வழிகளை அவமதிக்கிறவன் சாவான். [QE]
17. [QS]ஏழைக்கு இரங்குகிறவன் யெகோவாவுக்குக் கடன்கொடுக்கிறான்; [QE][QS]அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். [QE]
18. [QS]நம்பிக்கையிருக்கும்வரை உன்னுடைய மகனைத் தண்டி; [QE][QS]ஆனாலும் அவனைக் கொல்ல உன்னுடைய ஆத்துமாவில் தீர்மானிக்காதே. [QE]
19. [QS]கடுங்கோபி தண்டனைக்குள்ளாவான்; [QE][QS]நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாக வரும். [QE]
20. [QS]உன்னுடைய முடிவுகாலத்தில் நீ ஞானமுள்ளவனாக இருக்கும்படி, [QE][QS]ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள். [QE]
21. [QS]மனிதனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; [QE][QS]ஆனாலும் யெகோவாவுடைய யோசனையே நிலைநிற்கும். [QE]
22. [QS]நன்மைசெய்ய மனிதன் கொண்டிருக்கும் ஆசையே தயவு; [QE][QS]பொய்யனைவிட தரித்திரன் சிறப்பானவன். [QE]
23. [QS]யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்க்கைக்கு ஏதுவானது; [QE][QS]அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; [QE][QS]தீமை அவனை அணுகாது. [QE]
24. [QS]சோம்பேறி தன்னுடைய கையை பாத்திரத்திலே வைத்து, [QE][QS]அதைத் திரும்பத் தன்னுடைய வாய்க்குகூட கொண்டுபோகாமல் இருக்கிறான். [QE]
25. [QS]பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; [QE][QS]புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான். [QE]
26. [QS]தன்னுடைய தகப்பனைக் கொள்ளையடித்து, தன்னுடைய தாயைத் துரத்திவிடுகிறவன், [QE][QS]வெட்கத்தையும், அவமானத்தையும் உண்டாக்குகிற மகன். [QE]
27. [QS]என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளைவிட்டு விலகச்செய்யும் [QE][QS]போதகங்களை நீ கேட்காதே. [QE]
28. [QS]அநியாய சாட்சிக்காரன் நியாயத்தை சபிக்கிறான்; [QE][QS]துன்மார்க்கர்களுடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும். [QE]
29. [QS]பரியாசக்காரர்களுக்குத் தண்டனைகளும், [QE][QS]மூடர்களுடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாக இருக்கிறது. [QE]
மொத்தம் 31 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 19 / 31
ஞானம் நன்மைகளின் ஊற்று 1 மாறுபாடான உதடுகளுள்ள மூடனைவிட, உத்தமனாக நடக்கிற தரித்திரனே சிறப்பானவன். 2 ஆத்துமா அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல; கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான். 3 மனிதனுடைய மதியீனம் அவனுடைய வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவனுடைய மனம் யெகோவாவுக்கு விரோதமாக எரிச்சலடையும். 4 செல்வம் அநேக நண்பர்களைச் சேர்க்கும்; தரித்திரனோ தன்னுடைய நண்பனாலும் பிரிந்துபோவான். 5 பொய்ச்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை. 6 பிரபுவின் தயவை அநேகர் வருந்திக் கேட்பார்கள்; கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் நண்பன். 7 தரித்திரனை அவனுடைய சகோதரர்கள் எல்லோரும் பகைக்கிறார்களே, எத்தனை அதிகமாக அவனுடைய நண்பர்கள் அவனுக்குத் தூரமாவார்கள்; அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான், அவைகளோ வெறும் வார்த்தைகளே. 8 ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை நேசிக்கிறான்; புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான். 9 பொய்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பமாட்டான்; பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான். 10 மூடனுக்குச் செல்வம் தகாது; பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமையானவனுக்கு எவ்வளவும் தகாது. 11 மனிதனுடைய விவேகம் அவனுடைய கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை. 12 ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயவு புல்லின்மேல் பெய்யும் பனிபோல இருக்கும். 13 மூடனாகிய மகன் தன்னுடைய தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாமல் ஒழுகும் நீர். 14 வீடும் செல்வமும் பெற்றோர்கள் வைக்கும் சொத்து; புத்தியுள்ள மனைவியோ யெகோவா அருளும் ஈவு. 15 சோம்பல் தூங்கிவிழச்செய்யும்; அசதியானவன் பட்டினியாக இருப்பான். 16 கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்; தன்னுடைய வழிகளை அவமதிக்கிறவன் சாவான். 17 ஏழைக்கு இரங்குகிறவன் யெகோவாவுக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். 18 நம்பிக்கையிருக்கும்வரை உன்னுடைய மகனைத் தண்டி; ஆனாலும் அவனைக் கொல்ல உன்னுடைய ஆத்துமாவில் தீர்மானிக்காதே. 19 கடுங்கோபி தண்டனைக்குள்ளாவான்; நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாக வரும். 20 உன்னுடைய முடிவுகாலத்தில் நீ ஞானமுள்ளவனாக இருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள். 21 மனிதனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் யெகோவாவுடைய யோசனையே நிலைநிற்கும். 22 நன்மைசெய்ய மனிதன் கொண்டிருக்கும் ஆசையே தயவு; பொய்யனைவிட தரித்திரன் சிறப்பானவன். 23 யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்க்கைக்கு ஏதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது. 24 சோம்பேறி தன்னுடைய கையை பாத்திரத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன்னுடைய வாய்க்குகூட கொண்டுபோகாமல் இருக்கிறான். 25 பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான். 26 தன்னுடைய தகப்பனைக் கொள்ளையடித்து, தன்னுடைய தாயைத் துரத்திவிடுகிறவன், வெட்கத்தையும், அவமானத்தையும் உண்டாக்குகிற மகன். 27 என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளைவிட்டு விலகச்செய்யும் போதகங்களை நீ கேட்காதே. 28 அநியாய சாட்சிக்காரன் நியாயத்தை சபிக்கிறான்; துன்மார்க்கர்களுடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும். 29 பரியாசக்காரர்களுக்குத் தண்டனைகளும், மூடர்களுடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாக இருக்கிறது.
மொத்தம் 31 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 19 / 31
×

Alert

×

Tamil Letters Keypad References