1. {#1ஞானம் வாழ்வின் வழிகாட்டி } [QS]பிரிந்து போகிறவன் தன்னுடைய ஆசையின்படி செய்யப்பார்க்கிறான், [QE][QS]எல்லா ஞானத்திலும் தலையிட்டுக் கொள்ளுகிறான். [QE]
2. [QS]மூடன் ஞானத்தில் பிரியம்கொள்ளாமல், [QE][QS]தன்னுடைய மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான். [QE]
3. [QS]துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடு இகழ்ச்சியும் வரும். [QE]
4. [QS]மனிதனுடைய வாய்மொழிகள் ஆழமான தண்ணீர்போல இருக்கும்; [QE][QS]ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போல இருக்கும். [QE]
5. [QS]வழக்கிலே நீதிமானைத் தோற்கடிக்கிறதற்கு, [QE][QS]துன்மார்க்கனுக்கு பாரபட்சம் செய்வது நல்லதல்ல. [QE]
6. [QS]மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், [QE][QS]அவனுடைய வாய் அடிகளை வரவழைக்கும். [QE]
7. [QS]மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, [QE][QS]அவனுடைய உதடுகள் அவனுடைய ஆத்துமாவுக்குக் கண்ணி. [QE]
8. [QS]கோள்சொல்கிறவனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போல இருக்கும், [QE][QS]ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் குத்தும். [QE]
9. [QS]தன்னுடைய வேலையில் அசதியாக இருப்பவன் அனைத்தையும் அழிப்பவனுக்குச் சகோதரன். [QE]
10. [QS]யெகோவாவின் நாமம் மிகவும் பலத்த கோட்டை; [QE][QS]நீதிமான் அதற்குள் ஓடி சுகமாக இருப்பான். [QE]
11. [QS]செல்வந்தனுடைய பொருள் அவனுக்கு பாதுகாப்பான பட்டணம்; [QE][QS]அது அவனுடைய எண்ணத்தில் உயர்ந்த மதில்போல இருக்கும். [QE]
12. [QS]அழிவு வருமுன்பு மனிதனுடைய இருதயம் இறுமாப்பாக இருக்கும்; [QE][QS]மேன்மைக்கு முன்னானது தாழ்மை. [QE]
13. [QS]காரியத்தைக் கேட்பதற்குமுன் பதில் சொல்லுகிறவனுக்கு, [QE][QS]அது புத்தியீனமும் வெட்கமுமாக இருக்கும். [QE]
14. [QS]மனிதனுடைய ஆவி அவனுடைய பலவீனத்தைத் தாங்கும்; [QE][QS]முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்? [QE]
15. [QS]புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; [QE][QS]ஞானியின் செவி அறிவை நாடும். [QE]
16. [QS]ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழி உண்டாக்கி, [QE][QS]பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும். [QE]
17. [QS]தன்னுடைய வழக்கிலே முதலில் பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; [QE][QS]அவனுடைய அயலானோ வந்து அவனை பரிசோதிக்கிறான். [QE]
18. [QS]சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து, [QE][QS]பலவான்கள் நடுவே நியாயம்தீர்க்கும். [QE]
19. [QS]பாதுகாப்பான பட்டணத்தை வசப்படுத்துவதைவிட [QE][QS]கோபம்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது கடினம்; [QE][QS]அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள்போல இருக்கும். [QE]
20. [QS]அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்; [QE][QS]அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான். [QE]
21. [QS]மரணமும், ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருக்கும்; [QE][QS]அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைச் சாப்பிடுவார்கள். [QE]
22. [QS]மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; [QE][QS]யெகோவாவால் தயவையும் பெற்றுக்கொள்ளுகிறான். [QE]
23. [QS]தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்; [QE][QS]செல்வந்தன் கடினமாக உத்திரவுகொடுக்கிறான். [QE]
24. [QS]நண்பர்கள் உள்ளவன் நேசிக்கவேண்டும்; [QE][QS]சகோதரனைவிட அதிக சொந்தமாக நேசிக்கப்படுபவனும் உண்டு. [QE]