1. {#1விவேகத்தினால் வரும் நன்மை } [QS]சண்டையோடுகூடிய வீடுநிறைந்த சுவையான உணவைவிட, [QE][QS]சமாதானத்தோடு சாப்பிடும் வெறும் அப்பமே நலம். [QE]
2. [QS]புத்தியுள்ள வேலைக்காரன் அவமானத்தை உண்டாக்குகிற மகனை ஆண்டு, [QE][QS]சகோதரர்களுடைய சுதந்தரத்தில் பங்கை அடைவான். [QE]
3. [QS]வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; [QE][QS]இருதயங்களைச் சோதிக்கிறவரோ யெகோவா. [QE]
4. [QS]தீயவன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; [QE][QS]பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான். [QE]
5. [QS]ஏழையைப் புறக்கணிக்கிறவன் அவனை உண்டாக்கினவரை சபிக்கிறான்; [QE][QS]ஆபத்தைக் குறித்துக் மகிழ்கிறவன் தண்டனைக்குத் தப்பமாட்டான். [QE]
6. [QS]பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோர்களுக்குக் கிரீடம்; [QE][QS]பிள்ளைகளின் மேன்மை அவர்களுடைய தகப்பன்மார்களே. [QE]
7. [QS]மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது; [QE][QS]பொய் பேசும் உதடு பிரபுவுக்கு கொஞ்சம்கூட தகாது. [QE]
8. [QS]லஞ்சம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போல இருக்கும்; [QE][QS]அது பார்க்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும். [QE]
9. [QS]குற்றத்தை மூடுகிறவன் நட்பை நாடுகிறான்; [QE][QS]கேட்டதைச் சொல்லுகிறவன் உயிர் நண்பனையும் பிரித்துவிடுகிறான். [QE]
10. [QS]மூடனை நூறடி அடிப்பதைவிட, [QE][QS]புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாக உறைக்கும். [QE]
11. [QS]தீயவன் கலகத்தையே தேடுகிறான்; [QE][QS]கொடிய தூதன் அவனுக்கு விரோதமாக அனுப்பப்படுவான். [QE]
12. [QS]தன்னுடைய மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைவிட, [QE][QS]குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது மேல். [QE]
13. [QS]நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ, [QE][QS]அவனுடைய வீட்டைவிட்டுத் தீமை நீங்காது. [QE]
14. [QS]சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோல இருக்கும்; [QE][QS]ஆதலால் விவாதம் எழும்புமுன்பு அதை விட்டுவிடு. [QE]
15. [QS]துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், [QE][QS]நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இந்த இருவரும் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள். [QE]
16. [QS]ஞானத்தை வாங்கும்படி மூடன் கையிலே பணம் என்னத்திற்கு? [QE][QS]அதின்மேல் அவனுக்கு மனமில்லையே. [QE]
17. [QS]நண்பன் எல்லாக் காலத்திலும் நேசிப்பான்; [QE][QS]இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான். [QE]
18. [QS]புத்தியீனன் தன்னுடைய நண்பனுக்காக உறுதியளித்துப் பிணைப்படுகிறான். [QE]
19. [QS]விவாதப்பிரியன் பாவப்பிரியன்; [QE][QS]தன்னுடைய வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான். [QE]
20. [QS]மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; [QE][QS]பொய் நாவுள்ளவன் தீமையில் விழுவான். [QE]
21. [QS]மதிகெட்ட மகனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலம் உண்டாக அவனைப் பெறுகிறான்; [QE][QS]மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை. [QE]
22. [QS]மனமகிழ்ச்சி நல்ல மருந்து; [QE][QS]முறிந்த ஆவியோ எலும்புகளை உலரச்செய்யும். [QE]
23. [QS]துன்மார்க்கன், நீதியின் வழியைப்புரட்ட மடியிலுள்ள லஞ்சத்தை வாங்குகிறான். [QE]
24. [QS]ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்; [QE][QS]மூடனுடைய கண்களோ பூமியின் கடைசி எல்லைகள்வரை செல்லும். [QE]
25. [QS]மதிகெட்ட மகன் தன்னுடைய தகப்பனுக்குச் சலிப்பும், [QE][QS]தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன். [QE]
26. [QS]நீதிமானைத் தண்டிப்பதும், நியாயம்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல. [QE]
27. [QS]அறிவாளி தன்னுடைய வார்த்தைகளை அடக்குகிறான்; [QE][QS]விவேகி குளிர்ந்த மனமுள்ளவன். [QE]
28. [QS]பேசாமலிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; [QE][QS]தன்னுடைய உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான். [QE]