1. {#1தேவ ஞானமும் நீதியும் } [QS]மனதின் யோசனைகள் மனிதனுடையது; [QE][QS]நாவின் பதில் யெகோவாவால் வரும். [QE]
2. [QS]மனிதனுடைய வழிகளெல்லாம் அவனுடைய பார்வைக்குச் சுத்தமானவைகள்; [QE][QS]யெகோவாவோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார். [QE]
3. [QS]உன்னுடைய செயல்களைக் யெகோவாவுக்கு ஒப்புவி; [QE][QS]அப்பொழுது உன்னுடைய யோசனைகள் உறுதிப்படும். [QE]
4. [QS]யெகோவா எல்லாவற்றையும் தமக்கென்று படைத்தார்; [QE][QS]தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார். [QE]
5. [QS]மனமேட்டிமையுள்ளவன் எவனும் யெகோவாவுக்கு அருவருப்பானவன்; [QE][QS]கையோடு கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பமாட்டான். [QE]
6. [QS]கிருபையினாலும், சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; [QE][QS]யெகோவாவுக்குப் பயப்படுகிறதினால் மனிதர்கள் தீமையைவிட்டு விலகுவார்கள். [QE]
7. [QS]ஒருவனுடைய வழிகள் யெகோவாவுக்குப் பிரியமாக இருந்தால், [QE][QS]அவனுடைய எதிரிகளும் சமாதானமாகும்படிச் செய்வார். [QE]
8. [QS]அநியாயமாக வந்த அதிக வருமானத்தைவிட, [QE][QS]நியாயமாக வந்த கொஞ்ச வருமானமே நல்லது. [QE]
9. [QS]மனிதனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; [QE][QS]அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ யெகோவா. [QE]
10. [QS]ராஜாவின் உதடுகளில் இனிய வார்த்தை பிறக்கும்; [QE][QS]நியாயத்தில் அவனுடைய வாய் தவறாது. [QE]
11. [QS]நியாயமான நிறைகோலும் தராசும் யெகோவாவுடையது; [QE][QS]பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல். [QE]
12. [QS]அநியாயம்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; [QE][QS]நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும். [QE]
13. [QS]நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; [QE][QS]நிதானமாகப் பேசுகிறவன்மேல் ராஜாக்கள் பிரியப்படுவார்கள். [QE]
14. [QS]ராஜாவின் கோபம் மரணதூதர்களுக்குச் சமம்; [QE][QS]ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான். [QE]
15. [QS]ராஜாவின் முகக்களையில் வாழ்வு உண்டு; [QE][QS]அவனுடைய தயவு பின்மாரிபெய்யும் மேகத்தைப்போல் இருக்கும். [QE]
16. [QS]பொன்னைச் சம்பாதிப்பதைவிட ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு நல்லது! [QE][QS]வெள்ளியை சம்பாதிப்பதைவிட புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை [QE]
17. [QS]தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; [QE][QS]தன்னுடைய நடையைக் கவனித்திருக்கிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான். [QE]
18. [QS]அழிவுக்கு முன்னானது அகந்தை; [QE][QS]விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை. [QE]
19. [QS]அகங்காரிகளோடு கொள்ளைப்பொருளைப் பங்கிடுவதைவிட, [QE][QS]சிறுமையானவர்களோடு மனத்தாழ்மையாக இருப்பது நலம். [QE]
20. [QS]விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மை பெறுவான்; [QE][QS]யெகோவாவை நம்புகிறவன் பாக்கியவான். [QE]
21. [QS]இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகி எனப்படுவான்; [QE][QS]உதடுகளின் இனிமை கல்வியைப் பெருகச்செய்யும். [QE]
22. [QS]புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனர்களின் போதனை மதியீனமே. [QE]
23. [QS]ஞானியின் இருதயம் அவனுடைய வாய்க்கு அறிவை ஊட்டும்; [QE][QS]அவனுடைய உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும். [QE]
24. [QS]இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு இன்பமும், [QE][QS]எலும்புகளுக்கு மருந்தாகும். [QE]
25. [QS]மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழியுண்டு; [QE][QS]அதின் முடிவோ மரண வழிகள். [QE]
26. [QS]உழைக்கிறவன் தனக்காகவே உழைக்கிறான்; [QE][QS]அவனுடைய வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும். [QE]
27. [QS]வீணான மகன் கிண்டிவிடுகிறான்; [QE][QS]அவனுடைய உதடுகளில் இருப்பது எரிகிற அக்கினிபோன்றது. [QE]
28. [QS]மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; [QE][QS]கோள் சொல்லுகிறவன் உயிர் நண்பனையும் பிரித்துவிடுகிறான். [QE]
29. [QS]கொடுமையானவன் தன்னுடைய அயலானுக்கு நயங்காட்டி, [QE][QS]அவனை நலமல்லாத வழியிலே நடக்கச்செய்கிறான். [QE]
30. [QS]அவனுடைய மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன்னுடைய கண்களை மூடி, [QE][QS]தீமையைச் செய்யும்படி தன்னுடைய உதடுகளைக் கடிக்கிறான். [QE]
31. [QS]நீதியின் வழியில் உண்டாகும் நரை முடியானது [QE][QS]மகிமையான கிரீடம். [QE]
32. [QS]பலவானைவிட நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; [QE][QS]பட்டணத்தைப் பிடிக்கிறவனைவிட தன்னுடைய மனதை அடக்குகிறவன் உத்தமன். [QE]
33. [QS]சீட்டு மடியிலே போடப்படும்; [QE][QS]காரியத்தின் முடிவோ யெகோவாவால் வரும். [QE]