1. {#1விவேகமும் அலட்சியமும் } [QS]புத்தியுள்ள பெண் தன்னுடைய வீட்டைக் கட்டுகிறாள்; [QE][QS]புத்தியில்லாத பெண்ணோ தன்னுடைய கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள். [QE]
2. [QS]நிதானமாக நடக்கிறவன் யெகோவாவுக்குப் பயப்படுகிறான்; [QE][QS]தன்னுடைய வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்செய்கிறான். [QE]
3. [QS]மூடன் வாயிலே அவனுடைய அகந்தைக்கு ஏற்ற கோல் உண்டு; [QE][QS]ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும். [QE]
4. [QS]எருதுகள் இல்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாக இருக்கும்; [QE][QS]காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு. [QE]
5. [QS]மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லமாட்டான்; [QE][QS]பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான். [QE]
6. [QS]பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடிக்கமாட்டான்; [QE][QS]புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாகவரும். [QE]
7. [QS]மூடனுடைய முகத்தைவிட்டு விலகிப்போ; [QE][QS]அறிவுள்ள உதடுகளை அங்கே காணமாட்டாய். [QE]
8. [QS]தன்னுடைய வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்; [QE][QS]மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம். [QE]
9. [QS]மூடர்கள் பாவத்தைக்குறித்துப் பரியாசம்செய்கிறார்கள்; [QE][QS]நீதிமான்களுக்குள்ளே தயவு உண்டு. [QE]
10. [QS]இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; [QE][QS]அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தை ஆகமாட்டான். [QE]
11. [QS]துன்மார்க்கனுடைய வீடு அழியும்; [QE][QS]செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும். [QE]
12. [QS]மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழி உண்டு; [QE][QS]அதின் முடிவோ மரணவழிகள். [QE]
13. [QS]சிரிப்பிலும் மனதிற்குத் துக்கமுண்டு; [QE][QS]அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம். [QE]
14. [QS]பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன்னுடைய வழிகளிலேயும், [QE][QS]நல்ல மனிதனோ தன்னிலே தானும் திருப்தியடைவான். [QE]
15. [QS]பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; [QE][QS]விவேகியோ தன்னுடைய நடையின்மேல் கவனமாக இருக்கிறான். [QE]
16. [QS]ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; [QE][QS]மதியீனனோ கடுங்கோபம்கொண்டு துணிகரமாக இருக்கிறான். [QE]
17. [QS]முன்கோபி மதிகேட்டைச் செய்வான்; [QE][QS]கெட்டச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான். [QE]
18. [QS]பேதையர்கள் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்; [QE][QS]விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள். [QE]
19. [QS]தீயோர்கள் நல்லவர்களுக்கு முன்பாகவும், துன்மார்க்கர்கள் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு. [QE]
20. [QS]தரித்திரன் தன்னைச் சேர்ந்தவனாலும் பகைக்கப்படுகிறான்; [QE][QS]செல்வந்தனுக்கோ அநேக நண்பர்கள் உண்டு. [QE]
21. [QS]பிறனை அவமதிக்கிறவன் பாவம்செய்கிறான்; [QE][QS]தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான். [QE]
22. [QS]தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? [QE][QS]நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமும் உண்டு. [QE]
23. [QS]எல்லா உழைப்பினாலும் பயனுண்டு; [QE][QS]உதடுகளின் பேச்சோ வறுமையை மட்டும் தரும். [QE]
24. [QS]ஞானிகளுக்கு முடி அவர்களுடைய செல்வம்; [QE][QS]மூடர்களின் மதியீனம் மூடத்தனமே. [QE]
25. [QS]மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களைக் காப்பாற்றுகிறான்; [QE][QS]வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான். [QE]
26. [QS]யெகோவாவுக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; [QE][QS]அவனுடைய பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும். [QE]
27. [QS]யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்வு தரும் ஊற்று; [QE][QS]அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம். [QE]
28. [QS]மக்கள் கூட்டம் ராஜாவின் மகிமை; [QE][QS]மக்கள்குறைவு தலைவனின் முறிவு.
29. நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; [QE][QS]முன்கோபியோ புத்தியீனத்தை விளங்கச்செய்கிறான். [QE]
30. [QS]சமாதானத்துடன் இருப்பது உடலுக்கு வாழ்வு; [QE][QS]பொறாமையோ எலும்புருக்கி. [QE]
31. [QS]தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; [QE][QS]தரித்திரனுக்குத் தயவு செய்கிறவனோ அவரை மேன்மைப்படுத்துகிறான்; [QE]
32. [QS]துன்மார்க்கன் தன்னுடைய தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; [QE][QS]நீதிமானோ தன்னுடைய மரணத்திலே நம்பிக்கையுள்ளவன். [QE]
33. [QS]புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனர்களிடத்தில் உள்ளதோ வெளிப்படும். [QE]
34. [QS]நீதி மக்களை உயர்த்தும்; பாவமோ எந்த மக்களுக்கும் இகழ்ச்சி. [QE]
35. [QS]ராஜாவின் தயவு விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேல் இருக்கும்; [QE][QS]அவனுடைய கோபமோ அவமானத்தை உண்டாக்குகிறவன்மேல் இருக்கும். [QE]