தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
நீதிமொழிகள்
1. {#1ஞானியின் செயல்கள் } [QS]புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; [QE][QS]கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன். [QE]
2. [QS]நல்லவன் யெகோவாவிடத்தில் தயவு பெறுவான்; [QE][QS]கெட்டசிந்தனைகளுள்ள மனிதனை அவர் தண்டனைக்கு உட்படுத்துவார். [QE]
3. [QS]துன்மார்க்கத்தினால் மனிதன் நிலைவரப்படமாட்டான்; [QE][QS]நீதிமான்களுடைய வேரோ அசையாது. [QE]
4. [QS]குணசாலியான பெண் தன்னுடைய கணவனுக்கு கிரீடமாக இருக்கிறாள்; [QE][QS]அவமானத்தை உண்டாக்குகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாக இருக்கிறாள். [QE]
5. [QS]நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்; [QE][QS]துன்மார்க்கர்களுடைய ஆலோசனைகளோ வஞ்சனையுள்ளவைகள். [QE]
6. [QS]துன்மார்க்கர்களின் வார்த்தைகள் இரத்தம் சிந்த மறைந்திருப்பதைப்பற்றியது; [QE][QS]உத்தமர்களுடைய வாயோ அவர்களைத் தப்புவிக்கும். [QE]
7. [QS]துன்மார்க்கர்கள் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்; [QE][QS]நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும். [QE]
8. [QS]தன்னுடைய புத்திக்குத் தகுந்தபடி மனிதன் புகழப்படுவான்; [QE][QS]மாறுபாடான இருதயமுள்ளவனோ இகழப்படுவான். [QE]
9. [QS]உணவில்லாதவனாக இருந்தும், [QE][QS]தன்னைத்தான் மேன்மைப்படுத்துகிறவனைவிட, [QE][QS]மேன்மை இல்லாதவனாக இருந்தும் பணிவிடைக்காரனுள்ளவன் உத்தமன். [QE]
10. [QS]நீதிமான் தன்னுடைய மிருகஜீவன்களைக் காப்பாற்றுகிறான்; [QE][QS]துன்மார்க்கர்களுடைய இரக்கமும் கொடுமையே. [QE]
11. [QS]தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவினால் திருப்தியடைவான்; [QE][QS]வீணர்களைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன். [QE]
12. [QS]துன்மார்க்கன் கெட்டவர்களுடைய வலையை விரும்புகிறான்; [QE][QS]நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும். [QE]
13. [QS]துன்மார்க்கனுக்கு அவனுடைய உதடுகளின் துரோகமே கண்ணி; [QE][QS]நீதிமானோ நெருக்கத்திலிருந்து நீங்குவான். [QE]
14. [QS]அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; [QE][QS]அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும். [QE]
15. [QS]மதியீனனுடைய வழி அவனுடைய பார்வைக்குச் செம்மையாக இருக்கும்; [QE][QS]ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன். [QE]
16. [QS]மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; [QE][QS]அவமானத்தை மூடுகிறவனோ விவேகி. [QE]
17. [QS]சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; [QE][QS]பொய்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான். [QE]
18. [QS]பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; [QE][QS]ஞானமுள்ளவர்களுடைய நாவோ மருந்து. [QE]
19. [QS]சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; [QE][QS]பொய்நாவோ ஒரு நிமிடம்மாத்திரம் இருக்கும்; [QE]
20. [QS]தீங்கை திட்டமிடுகிறவர்களின் இருதயத்தில் கபடம் இருக்கிறது; [QE][QS]சமாதானம்செய்கிற ஆலோசனைக்காரர்களுக்கு உள்ளது சந்தோஷம். [QE]
21. [QS]நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; [QE][QS]துன்மார்க்கர்களோ தீமையினால் நிறையப்படுவார்கள். [QE]
22. [QS]பொய் உதடுகள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; [QE][QS]உண்மையாக நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். [QE]
23. [QS]விவேகமுள்ள மனிதன் அறிவை அடக்கிவைக்கிறான்; [QE][QS]மூடர்களுடைய இருதயமோ மதியீனத்தைப் பிரபலப்படுத்தும். [QE]
24. [QS]ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும்; [QE][QS]சோம்பேறியோ கட்டாயமாக வேலை வாங்கப்படுவான். [QE]
25. [QS]மனிதனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; [QE][QS]நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும். [QE]
26. [QS]நீதிமான் தன்னுடைய அயலானைவிட மேன்மையுள்ளவன்; [QE][QS]துன்மார்க்கர்களுடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும். [QE]
27. [QS]சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; [QE][QS]ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது. [QE]
28. [QS]நீதியின் பாதையில் வாழ்வு உண்டு; [QE][QS]அந்தப் பாதையில் மரணம் இல்லை. [QE]
மொத்தம் 31 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 12 / 31
ஞானியின் செயல்கள் 1 புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன். 2 நல்லவன் யெகோவாவிடத்தில் தயவு பெறுவான்; கெட்டசிந்தனைகளுள்ள மனிதனை அவர் தண்டனைக்கு உட்படுத்துவார். 3 துன்மார்க்கத்தினால் மனிதன் நிலைவரப்படமாட்டான்; நீதிமான்களுடைய வேரோ அசையாது. 4 குணசாலியான பெண் தன்னுடைய கணவனுக்கு கிரீடமாக இருக்கிறாள்; அவமானத்தை உண்டாக்குகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாக இருக்கிறாள். 5 நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்; துன்மார்க்கர்களுடைய ஆலோசனைகளோ வஞ்சனையுள்ளவைகள். 6 துன்மார்க்கர்களின் வார்த்தைகள் இரத்தம் சிந்த மறைந்திருப்பதைப்பற்றியது; உத்தமர்களுடைய வாயோ அவர்களைத் தப்புவிக்கும். 7 துன்மார்க்கர்கள் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்; நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும். 8 தன்னுடைய புத்திக்குத் தகுந்தபடி மனிதன் புகழப்படுவான்; மாறுபாடான இருதயமுள்ளவனோ இகழப்படுவான். 9 உணவில்லாதவனாக இருந்தும், தன்னைத்தான் மேன்மைப்படுத்துகிறவனைவிட, மேன்மை இல்லாதவனாக இருந்தும் பணிவிடைக்காரனுள்ளவன் உத்தமன். 10 நீதிமான் தன்னுடைய மிருகஜீவன்களைக் காப்பாற்றுகிறான்; துன்மார்க்கர்களுடைய இரக்கமும் கொடுமையே. 11 தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவினால் திருப்தியடைவான்; வீணர்களைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன். 12 துன்மார்க்கன் கெட்டவர்களுடைய வலையை விரும்புகிறான்; நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும். 13 துன்மார்க்கனுக்கு அவனுடைய உதடுகளின் துரோகமே கண்ணி; நீதிமானோ நெருக்கத்திலிருந்து நீங்குவான். 14 அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும். 15 மதியீனனுடைய வழி அவனுடைய பார்வைக்குச் செம்மையாக இருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன். 16 மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; அவமானத்தை மூடுகிறவனோ விவேகி. 17 சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; பொய்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான். 18 பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ மருந்து. 19 சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய்நாவோ ஒரு நிமிடம்மாத்திரம் இருக்கும்; 20 தீங்கை திட்டமிடுகிறவர்களின் இருதயத்தில் கபடம் இருக்கிறது; சமாதானம்செய்கிற ஆலோசனைக்காரர்களுக்கு உள்ளது சந்தோஷம். 21 நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; துன்மார்க்கர்களோ தீமையினால் நிறையப்படுவார்கள். 22 பொய் உதடுகள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; உண்மையாக நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். 23 விவேகமுள்ள மனிதன் அறிவை அடக்கிவைக்கிறான்; மூடர்களுடைய இருதயமோ மதியீனத்தைப் பிரபலப்படுத்தும். 24 ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும்; சோம்பேறியோ கட்டாயமாக வேலை வாங்கப்படுவான். 25 மனிதனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும். 26 நீதிமான் தன்னுடைய அயலானைவிட மேன்மையுள்ளவன்; துன்மார்க்கர்களுடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும். 27 சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது. 28 நீதியின் பாதையில் வாழ்வு உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.
மொத்தம் 31 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 12 / 31
×

Alert

×

Tamil Letters Keypad References