1. {#1நீதியின் பயன்கள் } [QS]கள்ளத்தராசு யெகோவாவுக்கு அருவருப்பானது; [QE][QS]சரியான நிறைகல்லோ அவருக்குப் பிரியம். [QE]
2. [QS]அகந்தை வந்தால் அவமானமும் வரும்; [QE][QS]தாழ்ந்த சிந்தை உள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு. [QE]
3. [QS]செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; [QE][QS]துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும். [QE]
4. [QS]கோபாக்கினை நாளில் செல்வம் உதவாது; [QE][QS]நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும். [QE]
5. [QS]உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்; [QE][QS]துன்மார்க்கனோ தன்னுடைய துன்மார்க்கத்தினால் விழுவான். [QE]
6. [QS]செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்; [QE][QS]துரோகிகளோ தங்களுடைய தீவினையிலே பிடிபடுவார்கள். [QE]
7. [QS]துன்மார்க்கன் மரணமடையும்போது அவனுடைய நம்பிக்கை அழியும்; [QE][QS]அக்கிரமக்காரர்களின் எதிர்பார்ப்பு கெட்டுப்போகும். [QE]
8. [QS]நீதிமான் இக்கட்டிலிருந்து விடுவிக்கப்படுவான்; [QE][QS]அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான். [QE]
9. [QS]மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்; [QE][QS]நீதிமானோ அறிவினால் தப்புகிறான். [QE]
10. [QS]நீதிமான்கள் நன்றாக இருந்தால் பட்டணம் சந்தோஷமாக இருக்கும்; [QE][QS]துன்மார்க்கர்கள் அழிந்தால் கெம்பீரம் உண்டாகும். [QE]
11. [QS]செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்று ஓங்கும்; [QE][QS]துன்மார்க்கர்களுடைய வாயினால் அது இடிந்துவிழும். [QE]
12. [QS]மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்; [QE][QS]புத்திமானோ தன்னுடைய வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான். [QE]
13. [QS]புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; [QE][QS]ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான். [QE]
14. [QS]ஆலோசனையில்லாத இடத்தில் மக்கள் விழுந்துபோவார்கள்; [QE][QS]அநேக ஆலோசனைக்காரர்கள் உண்டானால் சுகம் உண்டாகும். [QE]
15. [QS]அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் மிகுந்த பாடுபடுவான்; [QE][QS]பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாக இருப்பான். [QE]
16. [QS]நல்லொழுக்கமுள்ள பெண் மானத்தைக் காப்பாள்; [QE][QS]பலசாலிகள் செல்வத்தைக் காப்பார்கள். [QE]
17. [QS]தயவுள்ள மனிதன் தன்னுடைய ஆத்துமாவுக்கு நன்மை செய்துகொள்ளுகிறான்; [QE][QS]கொடூரனோ தன்னுடைய உடலை அலைக்கழிக்கிறான். [QE]
18. [QS]துன்மார்க்கன் வீண்வேலையைச் செய்கிறான்; [QE][QS]நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான். [QE]
19. [QS]நீதி வாழ்வுக்கு ஏதுவாகிறதுபோல, [QE][QS]தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்திற்கு ஏதுவாகிறான். [QE]
20. [QS]மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்; [QE][QS]உத்தம வழியில் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியமானவர்கள். [QE]
21. [QS]கையோடு கைகோர்த்தாலும், கெட்டவன் தண்டனைக்குத் தப்பான்; [QE][QS]நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும். [QE]
22. [QS]மதிகேடாக நடக்கிற அழகுள்ள பெண், [QE][QS]பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமம். [QE]
23. [QS]நீதிமான்களுடைய ஆசை நன்மையே; [QE][QS]துன்மார்க்கர்களுடைய நம்பிக்கையோ கோபத்தின் தண்டனையாக முடியும். [QE]
24. [QS]வாரி இறைத்தும் விருத்தியடைந்தவர்களும் உண்டு; [QE][QS]அதிகமாக தனக்கென்று மட்டும் வைத்துக்கொண்டும் [QE][QS]வறுமையடைபவர்களும் உண்டு. [QE]
25. [QS]உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; [QE][QS]எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும். [QE]
26. [QS]தானியத்தைக் கட்டிவைக்கிறவனை மக்கள் சபிப்பார்கள்; [QE][QS]விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும். [QE]
27. [QS]நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; [QE][QS]தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும். [QE]
28. [QS]தன்னுடைய செல்வத்தை நம்புகிறவன் விழுவான்; [QE][QS]நீதிமான்களோ துளிரைப்போல தழைப்பார்கள். [QE]
29. [QS]தன்னுடைய வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்; [QE][QS]மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான். [QE]
30. [QS]நீதிமானுடைய பலன் ஜீவமரம்; [QE][QS]ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன். [QE]
31. [QS]இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும் [QE][QS]பாவிக்கும் எத்தனை அதிகம். [QE]