தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
நீதிமொழிகள்
1. {#1சாலொமோனின் நீதிமொழிகள் } [QS]சாலொமோனின் நீதிமொழிகள்: [QE][QS]ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; [QE][QS]மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாக இருக்கிறான். [QE]
2. [QS]அநியாயத்தின் பொருட்கள் ஒன்றுக்கும் உதவாது; [QE][QS]நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும். [QE]
3. [QS]யெகோவா நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடமாட்டார்; [QE][QS]துன்மார்க்கர்களுடைய பொருளையோ அகற்றிவிடுகிறார். [QE]
4. [QS]சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; [QE][QS]சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும். [QE]
5. [QS]கோடைக்காலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; [QE][QS]அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ அவமானத்தை உண்டாக்குகிற மகன். [QE]
6. [QS]நீதிமானுடைய தலையின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; [QE][QS]கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். [QE]
7. [QS]நீதிமானுடைய பெயர் புகழ்பெற்று விளங்கும்; [QE][QS]துன்மார்க்கனுடைய பெயரோ அழிந்துபோகும். [QE]
8. [QS]இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்; [QE][QS]அலப்புகிற மூடனோ விழுவான். [QE]
9. [QS]உத்தமமாக நடக்கிறவன் பத்திரமாக நடக்கிறான்; [QE][QS]கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான். [QE]
10. [QS]கண்சாடை காட்டுகிறவன் தவறு செய்கிறான்; [QE][QS]அலப்புகிற மூடன் விழுவான். [QE]
11. [QS]நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; [QE][QS]கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். [QE]
12. [QS]பகை விரோதங்களை எழுப்பும்; [QE][QS]அன்போ எல்லாப் பாவங்களையும் மூடும். [QE]
13. [QS]புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்; [QE][QS]மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு. [QE]
14. [QS]ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்; [QE][QS]மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது. [QE]
15. [QS]செல்வந்தனுடைய பொருள் அவனுக்குப் பாதுகாப்பான பட்டணம்; [QE][QS]ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கச்செய்யும். [QE]
16. [QS]நீதிமானுடைய உழைப்பு வாழ்வையும், [QE][QS]துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும். [QE]
17. [QS]புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; [QE][QS]திருத்துதலை வெறுக்கிறவனோ மோசம்போகிறான். [QE]
18. [QS]பகையை மறைக்கிறவன் பொய் உதடன்; [QE][QS]புறங்கூறுகிறவன் மதிகேடன். [QE]
19. [QS]சொற்களின் மிகுதியால் பாவமில்லாமற்போகாது; [QE][QS]தன்னுடைய உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான். [QE]
20. [QS]நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; [QE][QS]துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது. [QE]
21. [QS]நீதிமானுடைய உதடுகள் அநேகருக்கு உணவளிக்கும்; [QE][QS]மூடரோ மதியீனத்தினால் சாவார்கள். [QE]
22. [QS]யெகோவாவின் ஆசீர்வாதமே செல்வத்தைத் தரும்; [QE][QS]அதனோடு அவர் வேதனையைக் கூட்டமாட்டார். [QE]
23. [QS]தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு; [QE][QS]புத்திமானுக்கோ ஞானம் உண்டு. [QE]
24. [QS]துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து சம்பவிக்கும்; [QE][QS]நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும். [QE]
25. [QS]சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்; [QE][QS]நீதிமானோ நிரந்தர அஸ்திபாரமுள்ளவன்; [QE]
26. [QS]பற்களுக்கு புளிப்பும், கண்களுக்குப் புகையும் எப்படி இருக்கிறதோ, [QE][QS]அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான். [QE]
27. [QS]யெகோவாவுக்குப் பயப்படுதல் ஆயுள்நாட்களைப் பெருகச்செய்யும்; [QE][QS]துன்மார்க்கர்களுடைய வருடங்களோ குறுகிப்போகும். [QE]
28. [QS]நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; [QE][QS]துன்மார்க்கருடைய வாழ்க்கையோ அழியும். [QE]
29. [QS]யெகோவாவின் வழி உத்தமர்களுக்குப் பாதுகாப்பு, [QE][QS]அக்கிரமக்காரர்களுக்கோ கலக்கம். [QE]
30. [QS]நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; [QE][QS]துன்மார்க்கர்கள் பூமியில் வசிப்பதில்லை. [QE]
31. [QS]நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; [QE][QS]மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோகும். [QE]
32. [QS]நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப்பேச அறியும்; [QE][QS]துன்மார்க்கர்களுடைய வாயோ மாறுபாடுள்ளது. [QE]
மொத்தம் 31 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 10 / 31
சாலொமோனின் நீதிமொழிகள் 1 சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாக இருக்கிறான். 2 அநியாயத்தின் பொருட்கள் ஒன்றுக்கும் உதவாது; நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும். 3 யெகோவா நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடமாட்டார்; துன்மார்க்கர்களுடைய பொருளையோ அகற்றிவிடுகிறார். 4 சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும். 5 கோடைக்காலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ அவமானத்தை உண்டாக்குகிற மகன். 6 நீதிமானுடைய தலையின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். 7 நீதிமானுடைய பெயர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பெயரோ அழிந்துபோகும். 8 இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்; அலப்புகிற மூடனோ விழுவான். 9 உத்தமமாக நடக்கிறவன் பத்திரமாக நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான். 10 கண்சாடை காட்டுகிறவன் தவறு செய்கிறான்; அலப்புகிற மூடன் விழுவான். 11 நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். 12 பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ எல்லாப் பாவங்களையும் மூடும். 13 புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்; மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு. 14 ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்; மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது. 15 செல்வந்தனுடைய பொருள் அவனுக்குப் பாதுகாப்பான பட்டணம்; ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கச்செய்யும். 16 நீதிமானுடைய உழைப்பு வாழ்வையும், துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும். 17 புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; திருத்துதலை வெறுக்கிறவனோ மோசம்போகிறான். 18 பகையை மறைக்கிறவன் பொய் உதடன்; புறங்கூறுகிறவன் மதிகேடன். 19 சொற்களின் மிகுதியால் பாவமில்லாமற்போகாது; தன்னுடைய உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான். 20 நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது. 21 நீதிமானுடைய உதடுகள் அநேகருக்கு உணவளிக்கும்; மூடரோ மதியீனத்தினால் சாவார்கள். 22 யெகோவாவின் ஆசீர்வாதமே செல்வத்தைத் தரும்; அதனோடு அவர் வேதனையைக் கூட்டமாட்டார். 23 தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு; புத்திமானுக்கோ ஞானம் உண்டு. 24 துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து சம்பவிக்கும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும். 25 சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்; நீதிமானோ நிரந்தர அஸ்திபாரமுள்ளவன்; 26 பற்களுக்கு புளிப்பும், கண்களுக்குப் புகையும் எப்படி இருக்கிறதோ, அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான். 27 யெகோவாவுக்குப் பயப்படுதல் ஆயுள்நாட்களைப் பெருகச்செய்யும்; துன்மார்க்கர்களுடைய வருடங்களோ குறுகிப்போகும். 28 நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய வாழ்க்கையோ அழியும். 29 யெகோவாவின் வழி உத்தமர்களுக்குப் பாதுகாப்பு, அக்கிரமக்காரர்களுக்கோ கலக்கம். 30 நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; துன்மார்க்கர்கள் பூமியில் வசிப்பதில்லை. 31 நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோகும். 32 நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப்பேச அறியும்; துன்மார்க்கர்களுடைய வாயோ மாறுபாடுள்ளது.
மொத்தம் 31 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 10 / 31
×

Alert

×

Tamil Letters Keypad References