1. {#1மையக் கருத்து } [PS]தாவீதின் மகனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்: [PE]
2. [QS]இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, [QE][QS]புத்திமதிகளை உணர்ந்து, [QE]
3. [QS]விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம். [QE]
4. [QS]இவைகள் பேதைகளுக்கு புத்தியையும், வாலிபர்களுக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும். [QE]
5. [QS]புத்திமான் இவைகளைக் கேட்டு அறிவில் வளருவான்; [QE][QS]விவேகி நல்ல ஆலோசனைகளை அடைந்து; [QE]
6. [QS]நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், [QE][QS]ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் சொன்ன மறைபொருட்களையும் அறிந்துகொள்வான். [QE]
7. [QS]யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; [QE][QS]மூடர் ஞானத்தையும் அறிவுரைகளையும் அசட்டை செய்கிறார்கள். [QE]
8. {#1ஞானம் தழுவுவதற்கான அறிவுரைகள் } [QS]என் மகனே, உன்னுடைய தகப்பன் புத்தியைக் கேள், [QE][QS]உன்னுடைய தாயின் போதனையைத் தள்ளாதே. [QE]
9. [QS]அவைகள் உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடமாகவும், [QE][QS]உன்னுடைய கழுத்துக்கு பொன் சங்கிலியாகவும் இருக்கும். [QE]
10. [QS]என் மகனே, பாவிகள் உனக்கு ஆசைகாட்டினாலும் [QE][QS]நீ சம்மதிக்காதே. [QE]
11. [QS]எங்களோடு வா, இரத்தம்சிந்தும்படி நாம் மறைந்திருந்து, [QE][QS]குற்றமில்லாமல் இருக்கிறவர்களை [QE][QS]காரணமில்லாமல் பிடிக்கும்படி ஒளிந்திருப்போம்; [QE]
12. [QS]பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்; [QE][QS]குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் [QE][QS]அவர்களை முழுமையாக விழுங்குவோம்; [QE]
13. [QS]விலையுயர்ந்த எல்லாவிதப் பொருள்களையும் கண்டடைவோம்; [QE][QS]கொள்ளைப்பொருளினால் நம்முடைய வீடுகளை நிரப்புவோம். [QE]
14. [QS]எங்களோடு பங்காளியாக இரு; [QE][QS]நம்மெல்லோருக்கும் ஒரே பை இருக்கும் என்று அவர்கள் சொன்னால்; [QE]
15. [QS]என் மகனே, நீ அவர்களோடு வழிநடவாமல், [QE][QS]உன்னுடைய காலை அவர்களுடைய பாதைக்கு விலக்குவாயாக. [QE]
16. [QS]அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, [QE][QS]இரத்தம் சிந்த விரைகிறது. [QE]
17. [QS]எவ்வகையான பறவையானாலும் சரி, [QE][QS]அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது வீணானது. [QE]
18. [QS]இவர்களோ தங்களுடைய இரத்தத்திற்கே மறைந்திருக்கிறார்கள், [QE][QS]தங்களுடைய உயிருக்கே கண்ணிவைத்திருக்கிறார்கள். [QE]
19. [QS]பொருளாசையுள்ள எல்லோருடைய வழியும் இதுவே; [QE][QS]இது தன்னை உடையவர்களின் உயிரை வாங்கும். [QE]
20. {#1ஞானத்தைத் தள்ளுதலுக்கு எதிரான எச்சரிக்கை } [QS]ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது, [QE][QS]வீதிகளில் சத்தமிடுகிறது. [QE]
21. [QS]அது ஆள் நடமாட்டமுள்ள தெருக்களின் சந்திப்பிலும், [QE][QS]நகரத்தின் நுழைவு வாசலிலும் நின்று கூப்பிட்டு, [QE][QS]பட்டணத்தில் தன்னுடைய வார்த்தைகளைச் சொல்லுகிறது: [QE]
22. [QS]பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், ஏளனம் செய்பவர்களே, [QE][QS]நீங்கள் ஏளனத்தில் பிரியப்படுவதும், அறிவில்லாதவர்களே, [QE][QS]நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும். [QE]
23. [QS]என்னுடைய கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; [QE][QS]இதோ, என்னுடைய ஆவியை உங்களுக்கு அருளுவேன், [QE][QS]என்னுடைய வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன். [QE]
24. [QS]நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; [QE][QS]நான் என்னுடைய கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை. [QE]
25. [QS]என்னுடைய ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, [QE][QS]என்னுடைய கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள். [QE]
26. [QS]ஆகையால், நானும் உங்களுடைய ஆபத்துக்காலத்தில் சிரித்து, [QE][QS]நீங்கள் பயப்படும் காரியம் வரும்போது ஏளனம்செய்வேன். [QE]
27. [QS]நீங்கள் பயப்படும் காரியம் புயல்போல் வரும்போதும், [QE][QS]ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும், [QE][QS]நெருக்கமும் இடுக்கணும் உங்கள்மேல் வரும்போதும், ஏளனம்செய்வேன். [QE]
28. [QS]அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; [QE][QS]நான் மறுஉத்திரவு கொடுக்கமாட்டேன்; [QE][QS]அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள். [QE]
29. [QS]அவர்கள் அறிவை வெறுத்தார்கள், [QE][QS]யெகோவாவுக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள். [QE]
30. [QS]என்னுடைய ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; [QE][QS]என்னுடைய கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டை செய்தார்கள். [QE]
31. [QS]ஆகையால் அவர்கள் தங்களுடைய வழியின் பலனைச் சாப்பிடுவார்கள்; [QE][QS]தங்களுடைய யோசனைகளினால் திருப்தியடைவார்கள். [QE]
32. [QS]அறிவீனர்களின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், [QE][QS]மூடரின் பொறுப்பின்மை அவர்களை அழிக்கும்; [QE]
33. [QS]எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, [QE][QS]அவன் பயமின்றி தங்கி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாக இருப்பான். [QE]