2. “இஸ்ரவேல் மக்களுக்காக மீதியானியர்களிடத்தில் பழிவாங்கு; அதின் பின்பு உன்னுடைய மக்களிடத்தில் சேர்க்கப்படுவாய்” என்றார்.
|
3. அப்பொழுது மோசே மக்களை நோக்கி: “யெகோவாக்காக மீதியானியர்களிடம் பழிவாங்கத்தக்க, உங்களில் அவர்கள்மேல் யுத்தத்திற்குப் போகும்படியாக மனிதர்களைப் பிரித்தெடுங்கள்.
|
4. இஸ்ரவேலர்களுடைய எல்லாக் கோத்திரங்களிலும் ஒவ்வொரு கோத்திரத்தில் 1,000 பேரை யுத்தத்திற்கு அனுப்பவேண்டும்” என்றான்.
|
5. அப்படியே இஸ்ரவேலர்களாகிய அநேகம் ஆயிரங்களில், ஒவ்வொரு கோத்திரத்தில் ஆயிரமாயிரம் பேராகப் 12,000 பேர் யுத்தத்திற்கு ஆயத்தமாக நிறுத்தப்பட்டார்கள்.
|
6. மோசே அவர்களையும் ஆசாரியனாகிய எலெயாசாரின் மகன் பினெகாசையும் யுத்தத்திற்கு அனுப்பும்போது, அவனுடைய கையிலே பரிசுத்த பொருட்களையும், தொனிக்கும் பூரிகைகளையும் கொடுத்து அனுப்பினான்.
|
7. யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி அவர்கள் மீதியானியர்களுடன் யுத்தம்செய்து, ஆண்கள் எல்லோரையும் கொன்றுபோட்டார்கள்.
|
8. அவர்களைக் கொன்றுபோட்டதும் அல்லாமல், மீதியானியர்களின் ஐந்து ராஜாக்களாகிய ஏவி, ரேக்கேம், சூர், ஊர், ரேபா என்பவர்களையும் கொன்றுபோட்டார்கள். பேயோரின் மகனாகிய பிலேயாமையும் பட்டயத்தினாலே கொன்றுபோட்டார்கள்.
|
9. அன்றியும் இஸ்ரவேல் இராணுவம் மீதியானியர்களின் பெண்களையும் குழந்தைகளையும் சிறைபிடித்து, அவர்களுடைய மிருகஜீவன்களாகிய ஆடுமாடுகள் யாவையும், மற்ற சொத்துகள் அனைத்தையும் கொள்ளையிட்டு,
|
12. சிறைப்பிடிக்கப்பட்ட மனிதர்களையும், மிருகங்களையும், கொள்ளையிட்ட பொருள்களையும், எரிகோவின் அருகிலுள்ள யோர்தானுக்கு இக்கரையில் மோவாபின் சமவெளிகளிலுள்ள முகாமிலிருந்த மோசேயினிடத்திற்கும், ஆசாரியனாகிய எலெயாசாரினிடமும், இஸ்ரவேல் மக்களாகிய சபையாரிடமும் கொண்டுவந்தார்கள்.
|
13. மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சபையின் பிரபுக்கள் எல்லோரும் அவர்களைச் சந்திக்க முகாமிற்கு வெளியே புறப்பட்டுப்போனார்கள்.
|
14. அப்பொழுது மோசே யுத்தத்திலிருந்து வந்த ஆயிரம்பேருக்குத் தலைவர்களும், நூறுபேருக்குத் தலைவர்களுமாகிய சேனாபதிகள்மேல் கோபங்கொண்டு,
|
16. பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் மக்கள் யெகோவாவுக்கு விரோதமாகத் துரோகம்செய்யக் காரணமாக இருந்தவர்கள் இவர்கள்தானே; அதினால் யெகோவாவின் சபையிலே வாதையும் நேரிட்டதே.
|
17. ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், ஆண்தொடர்பு கொண்டுள்ள எல்லா பெண்களையும் கொன்றுபோடுங்கள்.
|
19. பின்பு நீங்கள் ஏழுநாட்கள் முகாமிற்கு வெளியே தங்குங்கள்; மனித உயிரைக் கொன்றவர்களும். வெட்டுண்டவர்களைத் தொட்டவர்களுமாகிய நீங்கள் யாவரும் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் உங்களையும் உங்களால் சிறைபிடிக்கப்பட்டவர்களையும் சுத்திகரித்து,
|
20. அந்தப்படியே எல்லா ஆடைகளையும், தோலால் செய்த கருவிகளையும், வெள்ளாட்டுமுடியினால் நெய்தவைகளையும், மரச்சாமான்களையும் சுத்திகரிக்கவேண்டும்” என்றான்.
|
21. ஆசாரியனாகிய எலெயாசாரும் யுத்தத்திற்குப் போய்வந்த படைவீரர்களை நோக்கி: “யெகோவா மோசேக்குக் கட்டளையிட்ட விதிப்பிரமாணம் என்னவென்றால்:
|
22. அக்கினிக்கு நிற்கத்தக்கவைகளாகிய பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம், ஈயம் ஆகிய இவைகளெல்லாம் சுத்தமாகும்படி,
|
23. அவைகளை அக்கினியிலே போட்டு எடுக்கவேண்டும்; தீட்டுக்கழிக்கும் தண்ணீராலும் அவைகள் சுத்திகரிக்கப்படவேண்டும்; அக்கினிக்கு நிற்கத் தகாதவைகள் எல்லாம் தண்ணீரினால் சுத்தம் செய்யவேண்டும்.
|
24. ஏழாம் நாளில் உங்களுடைய ஆடைகளைத் தோய்க்கவேண்டும்; அப்பொழுது சுத்தமாக இருப்பீர்கள்; பின்பு நீங்கள் முகாமிற்குள் வரலாம்” என்றான். PS
|
26. “பிடித்துக்கொண்டு வரப்பட்ட மனிதர்களையும் மிருகங்களையும் நீயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சபையினுடைய முன்னோர்களாகிய தலைவர்களும் கணக்கிட்டு,
|
27. கொள்ளையிடப்பட்டதை இரண்டு பங்காகப் பங்கிட்டு, யுத்தத்திற்குப் படையெடுத்துப்போனவர்களுக்கும் சபையனைத்திற்கும் கொடுங்கள்.
|
28. மேலும் யுத்தத்திற்குப் போன படைவீரர்களிடத்தில் யெகோவாக்காக மனிதர்களிலும், மாடுகளிலும், கழுதைகளிலும், ஆடுகளிலும் ஐந்நூற்றிற்கு ஒரு மிருகம் வீதமாக வரி வாங்கி,
|
29. அவர்களுடைய பாதிப்பங்கில் எடுத்து, யெகோவாவுக்கு ஏறெடுத்துப்படைக்கும் படைப்பாக ஆசாரியனாகிய எலெயாசாருக்கு கொடுக்கவேண்டும்.
|
30. இஸ்ரவேல் மக்களின் பாதிப்பங்கிலோ மனிதர்களிலும், மாடுகள், கழுதைகள், ஆடுகளாகிய எல்லா வித மிருகங்களிலும், ஐம்பதிற்கு ஒன்று வீதமாக வாங்கி, அவைகளைக் யெகோவாவுடைய வாசஸ்தலத்தின் காவலைக்காக்கும் லேவியர்களுக்குக் கொடுக்கவேண்டும்” என்றார்.
|
41. யெகோவாவுக்கு ஏறெடுத்துப் படைக்கும் அந்தப் பகுதியை, மோசே யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடி. ஆசாரியனாகிய எலெயாசாரிடம் கொடுத்தான்.
|
42. யுத்தம்செய்த பேர்களுக்கும் இஸ்ரவேல் மக்களுக்கும் மோசே பாதி பாதியாகப் பங்கிட்டதின்படி சபையாருக்கு வந்த பாதிப்பங்காவது:
|
47. இஸ்ரவேல் மக்களின் பாதிப்பங்குக்கு வந்த இந்த மனிதஉயிர்களிலும் மிருகங்களிலும் மோசே ஐம்பதிற்கு ஒன்று வீதமாக, எடுத்து அவைகளைக் யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடி, யெகோவாவுடைய வாசஸ்தலத்தின் காவலைக் காக்கிற லேவியர்களுக்குக் கொடுத்தான்.
|
49. “உமது ஊழியக்காரராகிய நாங்கள் எங்களுடைய கையின் கீழிருக்கிற யுத்தமனிதர்களை கணக்கு பார்த்தோம்; அவர்களுக்குள்ளே ஒரு ஆளும் குறையவில்லை.
|
50. ஆகையால், யெகோவாவுடைய சந்நிதியில் எங்களுடைய ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்காக, எங்களுக்குக் கிடைத்த பொற்பணிகளாகிய காலணிகளையும், கை அணிகளையும், மோதிரங்களையும், காதணிகளையும், காப்புகளையும் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தோம்” என்றார்கள்.
|
51. அப்பொழுது மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் எல்லாவித வேலைப்பாடுள்ள பொருட்களான அந்தப் பொன் ஆபரணங்களை அவர்களிடத்தில் வாங்கினார்கள்.
|
52. இப்படி ஆயிரம்பேருக்குத் தலைவர்களானவர்களாலும் நூறுபேருக்குத் தலைவர்களானவர்களாலும் யெகோவாவுக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட பொன் முழுவதும் பதினாறு ஆயிரத்து எழுநூற்று ஐம்பது சேக்கல் நிறையாக இருந்தது.
|
54. அந்தப் பொன்னை மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் ஆயிரம் பேருக்குத் தலைவர்களானவர்களின் கையிலும், நூறு பேருக்குத் தலைவர்களானவர்களின் கையிலும் வாங்கி, இஸ்ரவேல் மக்களுக்கு ஞாபகக்குறியாக ஆசரிப்புக் கூடாரத்திலே யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து வைத்தார்கள். PE
|