1. [PS]இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே யெகோவாவுக்குப் பிரியம் என்று பிலேயாம் பார்த்தபோது, அவன் முந்திச் செய்து வந்ததுபோல யெகோவாவைப் பார்க்கப் போகாமல், வனாந்திரத்திற்கு நேராகத் தன்னுடைய முகத்தைத் திருப்பி,
2. தன்னுடைய கண்களை ஏறெடுத்து, இஸ்ரவேல் தன்னுடைய கோத்திரங்களின்படியே முகாமிட்டிருக்கிறதைப் பார்த்தான்; தேவஆவி அவன்மேல் வந்தது.
3. அப்பொழுது அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: [PE][QS]“பேயோரின் மகனாகிய பிலேயாம் சொல்லுகிறதாவது, [QE][QS]கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது, [QE]
4. [QS]தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, [QE][QS]சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு தாழவிழும்போது, கண் திறக்கப்பட்டவன் சொல்லுகிறதாவது, [QE]
5. [QS]யாக்கோபே, உன்னுடைய கூடாரங்களும், இஸ்ரவேலே, [QE][QS]உன்னுடைய தங்குமிடங்களும் எவ்வளவு அழகானவைகள்! [QE]
6. [QS]அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும், [QE][QS]நதியோரத்திலுள்ள தோட்டங்களைப்போலவும், [QE][QS]யெகோவா நாட்டின சந்தனமரங்களைப்போலவும், [QE][QS]தண்ணீர் அருகே உள்ள கேதுரு மரங்களைப்போலவும் இருக்கிறது. [QE]
7. [QS]அவர்களுடைய வாளிகளிலிருந்து தண்ணீர் பாயும்; [QE][QS]அவர்கள் விதை திரளான தண்ணீர்களில் பரவும்; [QE][QS]அவர்களுடைய ராஜா ஆகாகை விட உயருவான்; [QE][QS]அவர்களுடைய ராஜ்ஜியம் மேன்மையடையும். [QE]
8. [QS]தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்; [QE][QS]காண்டாமிருகத்திற்கு இணையான பெலன் அவர்களுக்கு உண்டு; [QE][QS]அவர்கள் தங்களுடைய எதிரிகளாகிய தேசத்தை தின்று, [QE][QS]அவர்களுடைய எலும்புகளை நொறுக்கி, [QE][QS]அவர்களைத் தங்களுடைய அம்புகளாலே எய்வார்கள். [QE]
9. [QS]சிங்கம்போலவும் கொடிய சிங்கம்போலவும் மடங்கிப் படுத்துக்கொண்டிருக்கிறார்கள்; [QE][QS]அவர்களை எழுப்புகிறவன் யார்? [QE][QS]உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், [QE][QS]உங்களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன்” [QE][PS]என்றான்.
10. அப்பொழுது பாலாக் பிலேயாமின்மேல் கோபம் வந்தவனாகி, கையோடு கைதட்டி, பிலேயாமை நோக்கி: “என்னுடைய எதிரிகளைச் சபிக்க உன்னை அழைத்து வந்தேன்; நீயோ இந்த மூன்றுமுறையும் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தாய்.
11. ஆகையால் உன்னுடைய இடத்திற்கு ஓடிப்போ; உன்னை மிகவும் மேன்மைப்படுத்துவேன் என்றேன்; நீ மேன்மை அடையாதபடி யெகோவா தடுத்தார் என்றான்.
12. அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: “பாலாக் எனக்குத் தன்னுடைய வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் கொடுத்தாலும், நான் என்னுடைய மனதாக நன்மையையோ தீமையையோ செய்கிறதற்குக் யெகோவாவின் கட்டளையை மீறக்கூடாது; யெகோவா சொல்வதையே சொல்வேன் என்று,
13. நீர் என்னிடத்திற்கு அனுப்பின தூதுவர்களிடத்தில் நான் சொல்லவில்லையா?
14. இதோ, நான் என்னுடைய மக்களிடத்திற்குப் போகிறேன்; பிற்காலத்திலே இந்த மக்கள் உம்முடைய மக்களுக்குச் செய்வது இன்னதென்று உமக்குத் தெரிவிப்பேன் வாரும்” என்று சொல்லி. [PE]
15. {#1பிலேயாமின் நான்காவது தேவ வாக்கு } [PS]அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: [PE][QS]“பேயோரின் மகன் பிலேயாம் சொல்லுகிறதாவது, [QE][QS]கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது, [QE]
16. [QS]தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, [QE][QS]உன்னதமான தேவன் அளித்த அறிவை அறிந்து, [QE][QS]உன்னதமான தேவனுடைய தரிசனத்தைக் கண்டு, [QE][QS]தாழவிழும்போது, கண் திறக்கப்பட்டவன் சொல்லுகிறதாவது; [QE]
17. [QS]அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; [QE][QS]அவரைத் தரிசிப்பேன், அருகாமையில் அல்ல; [QE][QS]ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், [QE][QS]ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; [QE][QS]அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, [QE][QS]சேத் சந்ததி[* கலகக்காரரின் தலைகளை ] எல்லோரையும் நிர்மூலமாக்கும். [QE]
18. [QS]ஏதோம் சுதந்தரமாகும், சேயீர் தன்னுடைய எதிரிகளுக்குச் சுதந்தரமாகும்; [QE][QS]இஸ்ரவேல் பராக்கிரமம்செய்யும். [QE]
19. [QS]யாக்கோபிலிருந்து தோன்றும் ஒருவர் ஆளுகை செய்வார்; [QE][QS]பட்டணங்களில் மீதியானவர்களை அழிப்பார்” [QE][PS]என்றான். [PE]
20. {#1பிலேயாமின் கடைசி தேவ வாக்கு } [QS]மேலும், அவன் அமலேக்கைப் பார்த்து, [QE][QS]தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: [QE][QS]“அமலேக்கு முந்தியெழும்பினவன்; ஆனாலும் அவன் முடிவில் முற்றிலும் நாசமாவான் என்றான். [QE]
21. [QS]அன்றியும் அவன் கேனியனைப் பார்த்து, [QE][QS]தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: [QE][QS]“உன்னுடைய தங்குமிடம் பாதுகாப்பானது; [QE][QS]உன்னுடைய கூட்டைக் கன்மலையில் கட்டினாய். [QE]
22. [QS]ஆகிலும் கேனியன் அழிந்துபோவான்; [QE][QS]அசூர் உன்னைச் சிறைபிடித்துக்கொண்டுபோக எத்தனை நாட்கள் ஆகும்” என்றான். [QE]
23. [PS]பின்னும் அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: “ஐயோ, தேவன் இதைச்செய்யும்போது யார் பிழைப்பான்;
24. கித்தீமின் கடல் துறையிலிருந்து கப்பல்கள் வந்து, அசூரைச் சிறுமைப்படுத்தி, ஏபேரையும் வருத்தப்படுத்தும்; அவனும் முற்றிலும் அழிந்துபோவான்” என்றான்.
25. பின்பு பிலேயாம் எழுந்து புறப்பட்டு, தன்னுடைய இடத்திற்குத் திரும்பினான்; பாலாகும் தன்னுடைய வழியே போனான். [PE]