2. “இஸ்ரவேல் சந்ததியார்கள் அவரவர் தங்கள் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தைச் சேர்ந்த தங்கள் தங்கள் கொடியருகில் தங்களுடைய கூடாரங்களைப் போட்டு, ஆசரிப்புக் கூடாரத்திற்கு எதிராகச் சுற்றிலும் முகாமிடவேண்டும்.
|
3. யூதாவின் முகாமின் கொடியை உடைய இராணுவங்கள் சூரியன் உதிக்கும் கிழக்குப்புறத்திலே முகாமிடவேண்டும்; அம்மினதாபின் மகனாகிய நகசோன் யூதா சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
|
5. அவன் அருகே இசக்கார் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; சூவாரின் மகன் நெதனெயேல் இசக்கார் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
|
7. அவன் அருகே செபுலோன் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; ஏலோனின் மகனாகிய எலியாப் செபுலோன் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
|
9. எண்ணப்பட்ட யூதாவின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் தங்களுடைய இராணுவங்களின்படியே 1,86,400 பேர்; இவர்கள் பயணத்தில் முதல் முகாமாகப் போகவேண்டும்.
|
10. “ரூபனுடைய முகாமின் கொடியையுடைய இராணுவங்கள் தென்புறத்தில் முகாமிடவேண்டும்; சேதேயூரின் மகனாகிய எலிசூர் ரூபன் சந்ததியாருக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
|
12. அவன் அருகே சிமியோன் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; சூரிஷதாயின் மகனாகிய செலூமியேல் சிமியோன் சந்ததியாருக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
|
14. அவன் அருகே காத் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; ரேகுவேலின் மகனாகிய எலியாசாப் காத் சந்ததியாருக்கு படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
|
16. எண்ணப்பட்ட ரூபனின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் தங்களுடைய இராணுவங்களின்படியே 1,51,450 பேர்; இவர்கள் பயணத்தில் இரண்டாம் முகாமாகப் போகவேண்டும்.
|
17. “பின்பு ஆசரிப்புக் கூடாரம் லேவியர்களின் இராணுவத்தோடு முகாம்களின் நடுவே பிரயாணப்பட்டுப் போகவேண்டும்; எப்படி முகாமிடுகிறார்களோ, அப்படியே அவரவர் தங்களுடைய வரிசையிலே தங்களுடைய கொடிகளோடு பிரயாணமாகப் போகவேண்டும்.
|
18. “எப்பிராயீமுடைய முகாமின் கொடியையுடைய இராணுவங்கள் மேற்கு புறத்தில் இறங்கவேண்டும், அம்மியூதின் மகனாகிய எலிஷாமா எப்பிராயீமின் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
|
20. அவன் அருகே மனாசே கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; பெதாசூரின் மகனாகிய கமாலியேல் மனாசே சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
|
22. அவன் அருகே பென்யமீன் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; கீதெயோனின் மகனாகிய அபீதான் பென்யமீன் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
|
24. எண்ணப்பட்ட எப்பிராயீமின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் தங்களுடைய இராணுவங்களின்படியே 1,08,100 பேர்; இவர்கள் பயணத்தில் மூன்றாம் முகாமாகப் போகவேண்டும்.
|
25. “தாணுடைய முகாமின் கொடியையுடைய இராணுவங்கள் வடபுறத்தில் இறங்கவேண்டும்; அம்மிஷதாயின் மகனாகிய அகியேசேர் தாண் வம்சத்திற்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
|
27. அவன் அருகே ஆசேர் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; ஓகிரானின் மகனாகிய பாகியேல் ஆசேர் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
|
29. அவன் அருகே நப்தலி கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; ஏனானின் மகனாகிய அகீரா நப்தலி சந்ததியாருக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
|
31. எண்ணப்பட்ட தாணின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் 1,57,600 பேர்; இவர்கள் தங்களுடைய கொடிகளோடு கடைசியிலும் போகவேண்டும்”.
|
32. இவர்களே தங்கள் தங்கள் முன்னோர்களின் வம்சத்தின்படி இஸ்ரவேல் மக்களில் எண்ணப்பட்டவர்கள். முகாம்களிலே தங்கள் தங்கள் இராணுவங்களின்படியே எண்ணப்பட்டவர்கள் எல்லோரும் 6,03,550 பேராயிருந்தார்கள்.
|
34. யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல் மக்கள் செய்து, தங்கள் தங்கள் கொடிகளின்கீழ் முகாமிட்டு, தங்கள் தங்கள் முன்னோர்களின் வம்சங்களின்படியே பயணப்பட்டுப் போனார்கள். PE
|