தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (IRV) தமிழ் வெளியீடு
நெகேமியா
1. {எருசலேமில் புதிதாக குடியேறியவர்கள்} [PS] மக்களின் அதிகாரிகள் எருசலேமிலே குடியிருந்தார்கள்; மற்ற மக்கள், தங்களுக்குள்ளே பத்துப்பேர்களில் ஒருவனை எருசலேம் என்னும் பரிசுத்த நகரத்திலும் ஒன்பதுபேரை மற்றப் பட்டணங்களிலும் குடியிருக்கச்செய்ய சீட்டுகளைப் போட்டார்கள்.
2. ஆனாலும் எருசலேமிலே குடியிருக்க மனப்பூர்வமாகச் சம்மதித்த மனிதர்களையெல்லாம் மக்கள் வாழ்த்தினார்கள்.
3. யூதாவின் பட்டணங்களில் இஸ்ரவேலர்களும், ஆசாரியர்களும், லேவியர்களும், ஆலயப் பணியாளர்களும், சாலொமோனுடைய வேலைக்காரர்களின் சந்ததிகளும், அவரவர் தங்கள் பட்டணங்களிலுள்ள தங்கள் சொந்த இடத்திலே குடியிருந்தார்கள்; எருசலேமிலே குடியிருந்த நாடுகளின் தலைவர்கள் யாரென்றால்:
4. எருசலேமிலே யூதா சந்ததியர்களில் சிலரும், பென்யமீன் சந்ததியர்களில் சிலரும் குடியிருந்தார்கள்; யூதா மக்களிலே பேரேசின் சந்ததியில் ஒருவனான மகலாலெயேலின் மகனாகிய செபதியாவின் மகன் அமரியாவுக்குப் பிறந்த சகரியாவுக்கு மகனான உசியாவின் மகன் அத்தாயாவும்,
5. சீலோனின் மகன் சகரியாவுக்கு மகனாகிய யோயாரிபுக்கு மகனான அதாயாவுக்குப் பிறந்த அசாயாவின் மகன் கொல்லோசே பெற்ற பாருக்கின் மகன் மாசெயாவுமே.
6. எருசலேமிலே குடியிருக்கிற பேரேசின் மகன்களெல்லாம் நானூற்று அறுபத்தெட்டு பலசாலிகளாக இருந்தார்கள்.
7. பென்யமீன் சந்ததியர்களில் யாரென்றால், சல்லு என்பவன்; இவன் மெசுல்லாமுக்கும், இவன் யோவேதுக்கும், இவன் பெதாயாவுக்கும், இவன் கொலாயாவுக்கும், இவன் மாசெயாவுக்கும், இவன் ஈத்தியேலுக்கும், இவன் எஷாயாவுக்கும் மகனானவன்.
8. அவனுக்குப்பின் கப்பாய், சல்லாய் முதலானவர்கள் தொளாயிரத்து இருபத்தெட்டுபேர்.
9. அவர்கள்மேல் கண்காணியான சிக்ரியின் மகன் யோவேலும், பட்டணத்தின்மேல் இரண்டாவது கண்காணியான அசெனூவாவின் மகன் யூதாவுமே.
10. ஆசாரியர்களில் யோயாரிபின் மகன் யெதாயா, யாகின் என்பவர்களும்,
11. அகிதூபின் மகன் மெராயோத்திற்குப் பிறந்த சாதோக்கின் மகன் மெசுல்லாம் பெற்ற இல்க்கியாவின் மகன் செராயா என்னும் தேவனுடைய ஆலயத்தின் மேற்பார்வையாளனும்,
12. ஆலயத்திலே வேலைசெய்கிற அவர்கள் சகோதரர்களாகிய எண்ணூற்று இருபத்திரண்டுபேரும், மல்கியாவின் மகன் பஸ்கூருக்கு மகனான சகரியாவின் மகன் அம்சிக்குப் பிறந்த பெல்லியாவின் மகன் எரோகாமுக்குப் பிறந்த அதாயாவும்,
13. குடும்பத்தலைவர்களாகிய அவனுடைய சகோதரர்கள் இருநூற்று நாற்பத்திரண்டுபேர்களும், இம்மேரின் மகன் மெசில்லேமோத்தின் மகனாகிய அகசாய்க்குப் பிறந்த அசரெயேலின் மகன் அமாசாயும்,
14. அவர்களுடைய சகோதரர்களாகிய பலசாலிகள் நூற்று இருபத்தெட்டுபேருமே; இவர்கள்மேல் அகெதோலிமின் மகன் சப்தியேல் கண்காணியாக இருந்தான்.
15. லேவியர்களிலே புன்னியின் மகன் அசபியாவின் மகனாகிய அஸ்ரிக்காமின் மகனான அசூபின் மகன் செமாயாவும்,
16. தேவனுடைய ஆலயத்தின் வெளிவேலையை விசாரிக்கிற லேவியர்களின் தலைவர்களிலே சப்பேதாயியும், யோசபாத்தும்,
17. ஆசாபின் மகன் சப்தியின் மகனாகிய மீகாவின் மகன் மத்தனியா ஜெபத்தில் ஸ்தோத்திரப்பாட்டைத் துவக்குகிற தலைவனும் அவனுடைய சகோதரர்களில் இரண்டாவதான பக்பூக்கியா என்னும் ஒருவனும், எதுத்தூனின் மகன் காலாவின் மகனாகிய சம்முவாவின் மகன் அப்தாவுமே.
18. பரிசுத்த பட்டணத்திலிருந்த லேவியர்கள் அனைவரும் இருநூற்று எண்பத்துநான்குபேர்.
19. வாசல் காவலாளர்கள் அக்கூபும், தல்மோனும், வாசல்களில் காவல்காக்கிற அவர்களுடைய சகோதரர்களும் நூற்று எழுபத்திரண்டுபேர்.
20. மற்ற இஸ்ரவேலர்களும், ஆசாரியர்களும், லேவியர்களும், யூதாவின் எல்லா பட்டணங்களிலும் இருந்தார்கள்.
21. ஆலய பணியாளர்கள் ஓபேலிலே குடியிருந்தார்கள்; அவர்கள்மேல் சீகாவும் கிஸ்பாவும் பொறுப்பாளர்களாக இருந்தார்கள்.
22. எருசலேமிலிருக்கிற லேவியர்களின் தலைமை அதிகாரி மீகாவின் மகன் மத்தனியாவின் மகனாகிய அஷபியாவுக்குப் பிறந்த பானியின் மகன் ஊசி என்பவன் தேவனுடைய ஆலயத்தின் ஊழியத்திற்கு நிற்கிற பாடகர்களாகிய ஆசாபின் மகன்களில் ஒருவன்.
23. பாடகர்களாகிய அவர்களுக்காக தினக்கூலி கொடுக்க ராஜாவினால் கட்டளையிடப்பட்டிருந்தது.
24. யூதாவின் மகனாகிய சேராக்கின் சந்ததியர்களில் மெசெசாபெயேலின் மகன் பெத்தகியா மக்களின் காரியங்களுக்கெல்லாம் ராஜாவின் முன்பு நின்றான்.
25. தங்கள் நாட்டுப்புறங்களான கிராமங்களில் இருக்கிறவர்களுக்குள்ளே யூதாவின் மக்களில் சிலர் கீரியாத் அர்பாவிலும் அதின் கிராமங்களிலும், தீபோனிலும் அதின் கிராமங்களிலும், எகாப்செயேலிலும் அதின் கிராமங்களிலும்,
26. யெசுவாவிலும், மோலாதாகிலும், பெத்பெலேதிலும்,
27. ஆசார்சூவாவிலும், பெயெர்செபாவிலும் அதின் கிராமங்களிலும்,
28. சிக்லாகிலும், மேகோனாகிலும் அதின் கிராமங்களிலும்,
29. என்ரிம்மோனிலும், சோரியாவிலும், யர்மூத்திலும்,
30. சானோவாகிலும், அதுல்லாமிலும் அவைகளின் கிராமங்களிலும், லாகீசிலும் அதின் நாட்டுப்புறங்களிலும், அசெக்காவிலும் அதின் கிராமங்களிலும், பெயெர்செபா துவங்கி இன்னோமின் பள்ளத்தாக்குவரை குடியேறினார்கள்.
31. கேபாவின் ஊரைச்சேர்ந்த பென்யமீன் மக்கள், மிக்மாஸ், ஆயா, பெத்தேல் ஊர்களிலும் அதின் கிராமங்களிலும்,
32. ஆனதோத், நோப், அனனியா,
33. ஆத்சோர், ராமா, கித்தாயிம்,
34. ஆதீத், செபோயிம், நெபலாத்,
35. லோத், ஓனோ என்னும் ஊர்களிலும், சிற்பாசாரிகளின் பள்ளத்தாக்கிலும் குடியிருந்தார்கள்.
36. லேவியர்களிலே சிலர் யூதாவிலும், சிலர் பென்யமீனிலும் இருந்தார்கள். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 13 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 11 / 13
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
நெகேமியா 11:54
எருசலேமில் புதிதாக குடியேறியவர்கள் 1 மக்களின் அதிகாரிகள் எருசலேமிலே குடியிருந்தார்கள்; மற்ற மக்கள், தங்களுக்குள்ளே பத்துப்பேர்களில் ஒருவனை எருசலேம் என்னும் பரிசுத்த நகரத்திலும் ஒன்பதுபேரை மற்றப் பட்டணங்களிலும் குடியிருக்கச்செய்ய சீட்டுகளைப் போட்டார்கள். 2 ஆனாலும் எருசலேமிலே குடியிருக்க மனப்பூர்வமாகச் சம்மதித்த மனிதர்களையெல்லாம் மக்கள் வாழ்த்தினார்கள். 3 யூதாவின் பட்டணங்களில் இஸ்ரவேலர்களும், ஆசாரியர்களும், லேவியர்களும், ஆலயப் பணியாளர்களும், சாலொமோனுடைய வேலைக்காரர்களின் சந்ததிகளும், அவரவர் தங்கள் பட்டணங்களிலுள்ள தங்கள் சொந்த இடத்திலே குடியிருந்தார்கள்; எருசலேமிலே குடியிருந்த நாடுகளின் தலைவர்கள் யாரென்றால்: 4 எருசலேமிலே யூதா சந்ததியர்களில் சிலரும், பென்யமீன் சந்ததியர்களில் சிலரும் குடியிருந்தார்கள்; யூதா மக்களிலே பேரேசின் சந்ததியில் ஒருவனான மகலாலெயேலின் மகனாகிய செபதியாவின் மகன் அமரியாவுக்குப் பிறந்த சகரியாவுக்கு மகனான உசியாவின் மகன் அத்தாயாவும், 5 சீலோனின் மகன் சகரியாவுக்கு மகனாகிய யோயாரிபுக்கு மகனான அதாயாவுக்குப் பிறந்த அசாயாவின் மகன் கொல்லோசே பெற்ற பாருக்கின் மகன் மாசெயாவுமே. 6 எருசலேமிலே குடியிருக்கிற பேரேசின் மகன்களெல்லாம் நானூற்று அறுபத்தெட்டு பலசாலிகளாக இருந்தார்கள். 7 பென்யமீன் சந்ததியர்களில் யாரென்றால், சல்லு என்பவன்; இவன் மெசுல்லாமுக்கும், இவன் யோவேதுக்கும், இவன் பெதாயாவுக்கும், இவன் கொலாயாவுக்கும், இவன் மாசெயாவுக்கும், இவன் ஈத்தியேலுக்கும், இவன் எஷாயாவுக்கும் மகனானவன். 8 அவனுக்குப்பின் கப்பாய், சல்லாய் முதலானவர்கள் தொளாயிரத்து இருபத்தெட்டுபேர். 9 அவர்கள்மேல் கண்காணியான சிக்ரியின் மகன் யோவேலும், பட்டணத்தின்மேல் இரண்டாவது கண்காணியான அசெனூவாவின் மகன் யூதாவுமே. 10 ஆசாரியர்களில் யோயாரிபின் மகன் யெதாயா, யாகின் என்பவர்களும், 11 அகிதூபின் மகன் மெராயோத்திற்குப் பிறந்த சாதோக்கின் மகன் மெசுல்லாம் பெற்ற இல்க்கியாவின் மகன் செராயா என்னும் தேவனுடைய ஆலயத்தின் மேற்பார்வையாளனும், 12 ஆலயத்திலே வேலைசெய்கிற அவர்கள் சகோதரர்களாகிய எண்ணூற்று இருபத்திரண்டுபேரும், மல்கியாவின் மகன் பஸ்கூருக்கு மகனான சகரியாவின் மகன் அம்சிக்குப் பிறந்த பெல்லியாவின் மகன் எரோகாமுக்குப் பிறந்த அதாயாவும், 13 குடும்பத்தலைவர்களாகிய அவனுடைய சகோதரர்கள் இருநூற்று நாற்பத்திரண்டுபேர்களும், இம்மேரின் மகன் மெசில்லேமோத்தின் மகனாகிய அகசாய்க்குப் பிறந்த அசரெயேலின் மகன் அமாசாயும், 14 அவர்களுடைய சகோதரர்களாகிய பலசாலிகள் நூற்று இருபத்தெட்டுபேருமே; இவர்கள்மேல் அகெதோலிமின் மகன் சப்தியேல் கண்காணியாக இருந்தான். 15 லேவியர்களிலே புன்னியின் மகன் அசபியாவின் மகனாகிய அஸ்ரிக்காமின் மகனான அசூபின் மகன் செமாயாவும், 16 தேவனுடைய ஆலயத்தின் வெளிவேலையை விசாரிக்கிற லேவியர்களின் தலைவர்களிலே சப்பேதாயியும், யோசபாத்தும், 17 ஆசாபின் மகன் சப்தியின் மகனாகிய மீகாவின் மகன் மத்தனியா ஜெபத்தில் ஸ்தோத்திரப்பாட்டைத் துவக்குகிற தலைவனும் அவனுடைய சகோதரர்களில் இரண்டாவதான பக்பூக்கியா என்னும் ஒருவனும், எதுத்தூனின் மகன் காலாவின் மகனாகிய சம்முவாவின் மகன் அப்தாவுமே. 18 பரிசுத்த பட்டணத்திலிருந்த லேவியர்கள் அனைவரும் இருநூற்று எண்பத்துநான்குபேர். 19 வாசல் காவலாளர்கள் அக்கூபும், தல்மோனும், வாசல்களில் காவல்காக்கிற அவர்களுடைய சகோதரர்களும் நூற்று எழுபத்திரண்டுபேர். 20 மற்ற இஸ்ரவேலர்களும், ஆசாரியர்களும், லேவியர்களும், யூதாவின் எல்லா பட்டணங்களிலும் இருந்தார்கள். 21 ஆலய பணியாளர்கள் ஓபேலிலே குடியிருந்தார்கள்; அவர்கள்மேல் சீகாவும் கிஸ்பாவும் பொறுப்பாளர்களாக இருந்தார்கள். 22 எருசலேமிலிருக்கிற லேவியர்களின் தலைமை அதிகாரி மீகாவின் மகன் மத்தனியாவின் மகனாகிய அஷபியாவுக்குப் பிறந்த பானியின் மகன் ஊசி என்பவன் தேவனுடைய ஆலயத்தின் ஊழியத்திற்கு நிற்கிற பாடகர்களாகிய ஆசாபின் மகன்களில் ஒருவன். 23 பாடகர்களாகிய அவர்களுக்காக தினக்கூலி கொடுக்க ராஜாவினால் கட்டளையிடப்பட்டிருந்தது. 24 யூதாவின் மகனாகிய சேராக்கின் சந்ததியர்களில் மெசெசாபெயேலின் மகன் பெத்தகியா மக்களின் காரியங்களுக்கெல்லாம் ராஜாவின் முன்பு நின்றான். 25 தங்கள் நாட்டுப்புறங்களான கிராமங்களில் இருக்கிறவர்களுக்குள்ளே யூதாவின் மக்களில் சிலர் கீரியாத் அர்பாவிலும் அதின் கிராமங்களிலும், தீபோனிலும் அதின் கிராமங்களிலும், எகாப்செயேலிலும் அதின் கிராமங்களிலும், 26 யெசுவாவிலும், மோலாதாகிலும், பெத்பெலேதிலும், 27 ஆசார்சூவாவிலும், பெயெர்செபாவிலும் அதின் கிராமங்களிலும், 28 சிக்லாகிலும், மேகோனாகிலும் அதின் கிராமங்களிலும், 29 என்ரிம்மோனிலும், சோரியாவிலும், யர்மூத்திலும், 30 சானோவாகிலும், அதுல்லாமிலும் அவைகளின் கிராமங்களிலும், லாகீசிலும் அதின் நாட்டுப்புறங்களிலும், அசெக்காவிலும் அதின் கிராமங்களிலும், பெயெர்செபா துவங்கி இன்னோமின் பள்ளத்தாக்குவரை குடியேறினார்கள். 31 கேபாவின் ஊரைச்சேர்ந்த பென்யமீன் மக்கள், மிக்மாஸ், ஆயா, பெத்தேல் ஊர்களிலும் அதின் கிராமங்களிலும், 32 ஆனதோத், நோப், அனனியா, 33 ஆத்சோர், ராமா, கித்தாயிம், 34 ஆதீத், செபோயிம், நெபலாத், 35 லோத், ஓனோ என்னும் ஊர்களிலும், சிற்பாசாரிகளின் பள்ளத்தாக்கிலும் குடியிருந்தார்கள். 36 லேவியர்களிலே சிலர் யூதாவிலும், சிலர் பென்யமீனிலும் இருந்தார்கள்.
மொத்தம் 13 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 11 / 13
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References