1. {மீண்டும் செழிப்படைவதற்கான ஜெபம்} [PS] யெகோவாவே, எங்களுக்குச் சம்பவித்ததை நினைத்தருளும்; [QBR] எங்கள் அவமானத்தை நோக்கிப்பாரும். [QBR]
2. எங்களுடைய சொத்து அந்நியரின் வசமாகவும், எங்களுடைய வீடுகள் வெளித்தேசத்தாரின் வசமாகவும் மாறியது. [QBR]
3. திக்கற்றவர்களானோம், தகப்பன் இல்லை; [QBR] எங்கள் தாய்கள் விதவைகளைப்போல இருக்கிறார்கள். [QBR]
4. எங்கள் தண்ணீரைப் பணத்திற்கு வாங்கிக்குடிக்கிறோம்; [QBR] எங்களுக்கு விறகு விலைக்கிரயமாக வருகிறது. [QBR]
5. பாரம்சுமந்து எங்கள் கழுத்து வலிக்கிறது; [QBR] நாங்கள் உழைக்கிறோம், எங்களுக்கு ஓய்வு இல்லை. [QBR]
6. உணவினால் திருப்தியடைய எகிப்தியர்களுக்கும் அசீரியர்களுக்கும் எங்களை ஒப்படைத்தோம். [QBR]
7. எங்கள் முற்பிதாக்கள் பாவம்செய்து இறந்துபோனார்கள்; [QBR] நாங்கள் அவர்களுடைய அக்கிரமங்களைச் சுமக்கிறோம். [QBR]
8. அடிமைகள் எங்களை ஆளுகிறார்கள்; [QBR] எங்களை அவர்கள் கையிலிருந்து விடுவிப்பவர்கள் இல்லை. [QBR]
9. வனாந்திரத்தில் இருக்கிறவர்களின் பட்டயத்தினால், [QBR] எங்களுடைய உயிரைப் பணயம்வைத்து ஆகாரத்தைத் தேடுகிறோம். [QBR]
10. பஞ்சத்தின் கொடுமையினால் எங்கள் தோல் அடுப்படியைப்போல் கறுத்துப்போனது. [QBR]
11. சீயோனில் இருந்த பெண்களையும் யூதா பட்டணங்களில் இருந்த இளம்பெண்களையும் அவமானப்படுத்தினார்கள். [QBR]
12. தலைவர்களுடைய கைகளை அவர்கள் கட்டி, அவர்களை தொங்கவிட்டார்கள்; [QBR] முதியோர்கள் மதிக்கப்படவில்லை. [QBR]
13. வாலிபர்களை இயந்திரம் அரைக்கக் கொண்டுபோனார்கள்; [QBR] இளைஞர்கள் விறகு சுமந்து தடுமாறி விழுகிறார்கள். [QBR]
14. முதியோர்கள் வாசல்களில் உட்காருகிறதும், [QBR] வாலிபர்கள் கின்னரங்களை வாசிக்கிறதும் நின்றுபோனது. [QBR]
15. எங்கள் இருதயத்தின் மகிழ்ச்சி ஒழிந்துபோனது; [QBR] எங்கள் சந்தோஷம் துக்கமாக மாறினது. [QBR]
16. எங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ, நாங்கள் பாவம்செய்தோமே. [QBR]
17. அதினால் எங்கள் இருதயம் பலவீனமானது; [QBR] அதினால் எங்களுடைய கண்கள் இருண்டுபோயின. [QBR]
18. பயனற்றுக்கிடக்கிற சீயோன் மலையின்மேல் நரிகள் ஓடித்திரிகிறது. [QBR]
19. யெகோவாவே, நீர் என்றென்றைக்கும் இருக்கிறீர்; [QBR] உம்முடைய சிங்காசனம் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும். [QBR]
20. தேவரீர் என்றைக்கும் எங்களை மறந்து, நீண்ட நாட்களாக எங்களைக் கைவிட்டிருப்பது என்ன? [QBR]
21. யெகோவாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்; [QBR] ஆரம்பநாட்களிலிருந்ததுபோல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும். [QBR]
22. எங்களை முற்றிலும் வெறுத்துவிடுவீரோ? [QBR] எங்கள்மேல் கடுங்கோபமாக இருக்கிறீரே! [PE]