1. {#1சீயோனின் சீரழிவு } [QS]ஐயோ, தங்கம் மங்கி, சுத்தத் தங்கம் மாறி, [QE][QS]பரிசுத்த ஸ்தலத்தின் கற்கள் சகல வீதிகளின் முனையிலும் கொட்டப்பட்டதே. [QE]
2. [QS]ஐயோ, தங்கத்துக்கொப்பான விலையேறப்பெற்ற மகன்களாகிய சீயோன், [QE][QS]குயவனுடைய கைவேலையான மண்பாத்திரங்களைப்போல நினைக்கப்படுகிறார்களே. [QE]
3. [QS]திமிங்கிலங்கள் முதற்கொண்டு மார்பகங்களை நீட்டி, [QE][QS]தங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுக்கும்; [QE][QS]என் மகளாகிய மக்களோ வனாந்தரத்திலுள்ள நெருப்புக்கோழியைப்போல் கடின மனமுள்ளவளாக இருக்கிறாளே. [QE]
4. [QS]குழந்தைகளின் நாக்கு தாகத்தால் மேல்வாயோடே ஒட்டிக்கொண்டிருக்கிறது; [QE][QS]பிள்ளைகள் உணவுகேட்கிறார்கள், அவர்களுக்கு கொடுப்பவர்கள் இல்லை. [QE]
5. [QS]சுவையான உணவுகளைச் சாப்பிட்டவர்கள் வீதிகளில் பயனற்றுக்கிடக்கிறார்கள்; [QE][QS]இரத்தாம்பரம் உடுத்தி வளர்ந்தவர்கள் குப்பைமேடுகளை அணைத்துக்கொள்கிறார்கள். [QE]
6. [QS]உதவி செய்பவர்கள் இல்லாமல், ஒரு நிமிடத்திலே அழிக்கப்பட்ட [QE][QS]சோதோமின் பாவத்திற்கு வந்த தண்டனையைவிட [QE][QS]என் மகளாகிய மக்களின் அக்கிரமத்திற்கு வந்த தண்டனை பெரிதாயிருக்கிறது. [QE]
7. [QS]அவளுடைய தலைவர்கள் உறைந்த மழையைவிட சுத்தமும், [QE][QS]பாலைவிட வெண்மையும், பவளத்தைவிட சிவப்பும், [QE][QS]இந்திரநீலத்தைவிட பலமுள்ள தோற்றமுமாக இருந்தார்கள். [QE]
8. [QS]இப்பொழுதோ அவர்களுடைய முகம் கரியைக்காட்டிலும் கறுத்துப்போனது; [QE][QS]வீதிகளில் அவர்களை அடையாளம் காணமுடியாது; [QE][QS]அவர்களுடைய தோல் அவர்கள் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டு, [QE][QS]காய்ந்த மரத்திற்கு ஒப்பானது. [QE]
9. [QS]பசியினால் கொல்லப்பட்டவர்களைவிட [QE][QS]பட்டயத்தால் கொல்லப்பட்டவர்கள் பாக்கியவான்களாக இருக்கிறார்கள்; [QE][QS]அவர்கள், வயலில் விளைச்சல் இல்லாததால் பசியினால் கரைந்து போகிறார்கள். [QE]
10. [QS]இரக்கமுள்ள பெண்களின் கைகள் தங்கள் பிள்ளைகளைச் சமைத்தன, [QE][QS]என் மகளாகிய மக்களின் அழிவில் அவைகள் அவர்களுக்கு ஆகாரமாயின. [QE]
11. [QS]யெகோவா தமது கோபத்தை நிறைவேற்றி, தமது கடுங்கோபத்தை ஊற்றி, [QE][QS]சீயோனில் அக்கினியைக் கொளுத்தினார்; [QE][QS]அது அதின் அஸ்திபாரங்களை உடைத்துப்போட்டது. [QE]
12. [QS]எதிரியும் பகைவனும் எருசலேமின் வாசல்களுக்குள் நுழைவான் என்கிறதைப் [QE][QS]பூமியின் ராஜாக்களும் உலகத்தின் சகல குடிமக்களும் நம்பாமல் இருந்தார்கள். [QE]
13. [QS]அதின் நடுவில் நீதிமான்களின் இரத்தத்தைச் சிந்தின அதின் தீர்க்கதரிசிகளின் பாவங்களினாலும், [QE][QS]அதின் ஆசாரியர்களின் அக்கிரமங்களினாலும் இப்படி வந்தது. [QE]
14. [QS]குருடர்களைப்போல வீதிகளில் அலைந்து, [QE][QS]ஒருவரும் அவர்களுடைய உடைகளைத் தொடமுடியாதபடி இரத்தத்தால் கறைப்பட்டிருந்தார்கள். [QE]
15. [QS]தீட்டுப்பட்டவர்களே விலகுங்கள், தொடாமல் விலகுங்கள், விலகுங்கள், [QE][QS]என்று அவர்களை நோக்கிக் கூப்பிட்டார்கள்; [QE][QS]உண்மையாகவே பறந்தோடி அலைந்து போனார்கள்; [QE][QS]இனி தங்கியிருக்கமாட்டார்கள் என்று அந்நிய மக்களுக்குள்ளே சொல்லப்பட்டது. [QE]
16. [QS]யெகோவாவுடைய கோபம் அவர்களைச் சிதறடித்தது, [QE][QS]அவர்களை இனி அவர் பார்க்கமாட்டார்; [QE][QS]ஆசாரியர்களுடைய முகத்தைப் பார்க்காமலும் முதியோரை மதிக்காமலும்போனார்கள். [QE]
17. [QS]இன்னும் எங்களுக்கு உதவி வருமென்று நாங்கள் வீணாக எதிர்பார்த்திருந்ததினாலே எங்களுடைய கண்கள் பூத்துப்போயின; [QE][QS]காப்பாற்றமுடியாத மக்களுக்காக எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம். [QE]
18. [QS]நாங்கள் எங்கள் வீதிகளில் நடந்து செல்லாதபடி எங்கள் பாதசுவடுகளை வேட்டையாடினார்கள்; [QE][QS]எங்கள் முடிவு நெருங்கியது; எங்கள் நாட்கள் நிறைவேறிவிட்டது; [QE][QS]எங்கள் முடிவு வந்துவிட்டது. [QE]
19. [QS]எங்களைப் பின்தொடர்ந்தவர்கள் ஆகாயத்துக் கழுகுகளைவிட வேகமாயிருந்தார்கள்; [QE][QS]மலைகள்மேல் எங்களைப் பின்தொடர்ந்தார்கள்; [QE][QS]வனாந்திரத்தில் எங்களுக்காகப் பதுங்கியிருந்தார்கள். [QE]
20. [QS]யெகோவாவால் அபிஷேகம்செய்யப்பட்டவனும், எங்கள் உயிர்மூச்சுமாக இருந்தவனும், அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டான்; [QE][QS]அவனுடைய நிழலிலே தேசங்களுக்குள்ளே பிழைத்திருப்போம் என்று அவனைக்குறித்துச் சொல்லியிருந்தோமே. [QE]
21. [QS]ஊத்ஸ் தேசத்தைச் சேர்ந்த மகளாகிய ஏதோமே, சந்தோஷப்பட்டு மகிழ்ந்திரு; [QE][QS]பாத்திரம் உன்னிடத்திற்கும் வரும், அப்பொழுது நீ வெறித்து, ஆடையில்லாமல் கிடப்பாய். [QE]
22. [QS]மகளாகிய சீயோனே, உன் அக்கிரமத்திற்கு வரும் தண்டனை முடிந்தது; [QE][QS]அவர் இனி உன்னை சிறைப்பட்டுப்போக விடமாட்டார்; [QE][QS]மகளாகிய ஏதோமே, உன் அக்கிரமத்தை அவர் விசாரிப்பார்; [QE][QS]உன் பாவங்களை வெளிப்படுத்துவார். [QE]