1. {எருசலேமின் துன்பம்} [PS] 2 ஐயோ, மக்கள் மிகுந்த நகரம் [* எருசலேம்] தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே! [QBR] விதவைக்கு ஒப்பானாளே! தேசங்களில் பெரியவளும், [QBR] அந்த தேசங்களில் இளவரசியுமாயிருந்தவள் வரிகட்டுகிறவளானாளே! [QBR]
2. இரவுநேரத்திலே அழுதுகொண்டிருக்கிறாள்; [QBR] அவளுடைய கண்ணீர் அவள் கன்னங்களில் வடிகிறது; [QBR] அவளுக்குப் பிரியமானவர்களில் அவளைத் தேற்றுபவர்கள் ஒருவரும் இல்லை; [QBR] அவளுடைய நண்பர்கள் அனைவரும் அவளுக்குத் துரோகிகளும் விரோதிகளுமானார்கள். [QBR]
3. யூதா மக்கள் உபத்திரவப்படவும், கொடுமையான அடிமை வேலைசெய்யவும் [QBR] சிறைப்பட்டுப்போனார்கள். அவள் அந்நிய மக்களுக்குள்ளே தங்குகிறாள், [QBR] இளைப்பாறுதல் அடையமாட்டாள்; [QBR] அவளைத் துன்பப்படுத்துகிற அனைவரும் [QBR] அவளை அவளுடைய இக்கட்டான நேரங்களிலே தொடர்ந்துபிடித்தார்கள். [QBR]
4. பண்டிகைக்கு வருபவர்கள் இல்லாததினால், [QBR] சீயோனுக்குப் போகிற வழிகள் புலம்புகிறது; [QBR] அவளுடைய வாசல்கள் எல்லாம் பயனற்றுக்கிடக்கிறது; [QBR] அவளுடைய ஆசாரியர்கள் தவிக்கிறார்கள்; [QBR] அவளுடைய இளம்பெண்கள் சஞ்சலப்படுகிறார்கள்; [QBR] அவளுக்குக் கசப்பே உண்டாயிருக்கிறது. [QBR]
5. அவளுடைய விரோதிகள் அவளுக்குத் தலைவர்களானார்கள், [QBR] அவளுடைய பகைவர்கள் செழித்திருக்கிறார்கள்; [QBR] அவளுடைய மிகுதியான பாவங்களுக்காக யெகோவா அவளைச் சஞ்சலப்படுத்தினார்; [QBR] அவளுடைய பிள்ளைகள் எதிரிக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனார்கள். [QBR]
6. சீயோனாகிய மகளுடைய அழகெல்லாம் அவளை விட்டுப்போனது; [QBR] அவளுடைய தலைவர்கள் மேய்ச்சலைக் காணாத மான்களுக்கு ஒப்பாகி, [QBR] பின்தொடருகிறவனுக்கு முன்பாக பலமில்லாமல் நடந்துபோனார்கள். [QBR]
7. தனக்குச் சிறுமையும் தவிப்பும் ஏற்பட்ட நாட்களிலே [QBR] எருசலேம் ஆரம்பநாட்கள் முதற்கொண்டு தனக்கு உண்டாயிருந்த இன்பமானவைகளையெல்லாம் நினைக்கிறாள்; [QBR] அவளுக்கு உதவிசெய்பவர்கள் இல்லாமல் அவளுடைய மக்கள் விரோதிகளின் கையிலே விழும்போது, [QBR] பகைவர்கள் அவளைப் பார்த்து, அவளுடைய ஓய்வு நாட்களைக் குறித்து ஏளனம் செய்தார்கள். [QBR]
8. எருசலேம் மிகுதியாகப் பாவம்செய்தாள்; [QBR] ஆதலால் தீட்டான பெண்ணைப்போலானாள்; [QBR] அவளைக் கனப்படுத்தியவர்கள் எல்லோரும் அவளை அசட்டை செய்கிறார்கள்; [QBR] அவளுடைய நிர்வாணத்தைக் கண்டார்கள்; [QBR] அவளும் பெருமூச்சுவிட்டுப் பின்னிட்டுத் திரும்பினாள். [QBR]
9. அவளுடைய தீட்டு அவளுடைய ஆடைகளின் ஓரங்களில் இருந்தது; [QBR] தனக்கு வரப்போகிற முடிவை நினைக்காமல் இருந்தாள்; [QBR] ஆகையால் அதிசயமாகத் தாழ்த்தப்பட்டுப்போனாள்; [QBR] தேற்றுபவர்கள் இல்லை; [QBR] யெகோவாவே, என் சிறுமையைப் பாரும்; [QBR] பகைவன் பெருமைபாராட்டினானே. [QBR]
10. அவளுடைய இன்பமான எல்லாவற்றின்மேலும் விரோதி தன் கையை நீட்டினான்; [QBR] உம்முடைய சபையிலே வரக்கூடாதென்று தேவரீர் விலக்கிய அன்னியர்கள் [QBR] உமது பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைவதைக் கண்டாள். [QBR]
11. அவளுடைய மக்களெல்லோரும் ஆகாரத்தைத்தேடித் தவிக்கிறார்கள்; [QBR] தங்களுடைய உயிரைக் காப்பாற்றத் [QBR] தங்களுக்குப் பிரியமானவைகளை ஆகாரத்துக்கென்று கொடுத்துவிட்டார்கள்; [QBR] யெகோவாவே, நோக்கிப்பாரும்; [QBR] நினைக்கப்படாதவளானேன். [QBR]
12. வழியில் நடந்துபோகிற அனைத்து மக்களே, [QBR] இதைக்குறித்து உங்களுக்குக் கவலையில்லையா? [QBR] யெகோவா தாம் மிகவும் கோபப்பட்ட நாளிலே என்னை வருத்தப்படுத்தியதால் [QBR] எனக்கு ஏற்பட்ட என் துக்கத்திற்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப்பாருங்கள். [QBR]
13. உயரத்திலிருந்து என் எலும்புகளில் அக்கினியை அனுப்பினார், [QBR] அது அவைகளில் பற்றியெரிகிறது; [QBR] என் கால்களுக்கு வலையை வீசினார்; [QBR] என்னைப் பின்னிட்டு விழச்செய்தார்; என்னைப் பாழாக்கினார்; [QBR] தினமும் நான் பெலவீனப்பட்டுப்போகிறேன். [QBR]
14. என் மீறுதல்களின் நுகம் அவருடைய கையால் பூட்டப்பட்டிருக்கிறது; [QBR] அவைகள் பிணைக்கப்பட்டு என் கழுத்தைச் சுற்றிக்கொண்டது; [QBR] என் பெலனை இழக்கச்செய்தார்; [QBR] நான் எழுந்திருக்க முடியாதபடி ஆண்டவர் என்னை ஒடுக்குகிறவர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார். [QBR]
15. என்னிடத்திலுள்ள பலசாலிகளாகிய எனக்குரிய அனைவரையும் ஆண்டவர் மிதித்துப்போட்டார்; [QBR] என் வாலிபர்களை நொறுக்குவதற்காக எனக்கு விரோதமாக ஒரு கூட்டத்தை வரவழைத்தார்; [QBR] திராட்சைப்பழத்தை ஆலையில் மிதிக்கிறதுபோல, [QBR] ஆண்டவர், மகளாகிய யூதா என்னும் இளம்பெண்ணை மிதித்தார். [QBR]
16. இவைகளுக்காக நான் அழுகிறேன்; என் கண், [QBR] என் கண்ணே கண்ணீரை சிந்துகிறது; [QBR] என் உயிரைக் காப்பாற்றித் தேற்றுகிறவர்கள் என்னைவிட்டு விலகினார்கள்; [QBR] பகைவன் மேற்கொண்டதினால் என் பிள்ளைகள் பாழாய்ப்போனார்கள். [QBR]
17. சீயோன் தன் கைகளை உதவிக்கா விரிக்கிறாள்; [QBR] அவளைத் தேற்றுபவர்கள் ஒருவருமில்லை; [QBR] யெகோவா யாக்கோபைச் சுற்றிலும் உள்ளவர்களை அவனுக்கு விரோதிகளாகக் கட்டளையிட்டார்; [QBR] அவர்களுக்குள்ளே எருசலேம் தீட்டான பெண்ணுக்கு ஒப்பானாள். [QBR]
18. யெகோவா நீதிபரர்; [QBR] அவருடைய கட்டளைகளுக்கு விரோதமாக நான் எழும்பினேன்; [QBR] மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேட்டு என் துக்கத்தைப் பாருங்கள்; [QBR] என்னுடைய இளம்பெண்களும், வாலிபர்களும் சிறைப்பட்டுப்போனார்கள். [QBR]
19. என்னைச் சிநேகித்தவர்களைக் கூப்பிட்டேன், [QBR] அவர்களோ எனக்கு துரோகம் செய்தார்கள்; [QBR] என் ஆசாரியர்களும் என் மூப்பர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத் [QBR] தங்களுக்கு ஆகாரம் தேடும்போது நகரத்தில் மூச்சு அடங்கி இறந்துபோனார்கள். [QBR]
20. யெகோவாவே, பாரும், நான் நெருக்கப்படுகிறேன்; [QBR] என் குடல் கொதிக்கிறது; நான் மிகவும் துரோகம் செய்ததினால் என் இருதயம் வேதனைப்படுகிறது; [QBR] வெளியிலே பட்டயம் என்னைப் பிள்ளையற்றவளாக்கியது, வீட்டுக்குள்ளே மரணம் வந்திருக்கிறது. [QBR]
21. நான் தவிக்கிறதை அவர்கள் கேட்டாலும் என்னைத் தேற்றுபவர்கள் ஒருவரும் இல்லை; [QBR] என் பகைவர்கள் எல்லோரும் எனக்கு வந்த ஆபத்தைக் கேட்டு, [QBR] தேவரீர் அதைச் செய்ததினால் சந்தோஷமாயிருக்கிறார்கள்; [QBR] நீர் சொன்ன நாளை வரச்செய்வீர். அப்பொழுது அவர்களும் என்னைப்போலாவார்கள். [QBR]
22. அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் உமது முகத்திற்கு முன்பாக வரட்டும். [QBR] என்னுடைய சகல பாவங்களுக்காக நீர் எனக்குச் செய்ததுபோல அவர்களுக்கும் செய்யும்; [QBR] என் பெருமூச்சுகள் மிகுதியாயின, [QBR] என் இருதயம் பலவீனமாயிருக்கிறது. [PE]