1. [PS]பூமியிலே பாடுபட மனிதனுக்குக் குறிக்கப்பட்ட காலம் உண்டல்லவோ? [PE][QS]அவனுடைய நாட்கள் ஒரு கூலிக்காரன் நாட்களைப்போல் இருக்கிறதல்லவோ? [QE]
2. [QS]ஒரு வேலையாள் நிழலை விரும்பி, [QE][QS]ஒரு கூலிக்காரன் தன் கூலியை வரப்பார்த்திருக்கிறதுபோல, [QE]
3. [QS]மாயையான மாதங்கள் என்னுடைய சொந்தமாகி, [QE][QS]பிரச்சனையான இரவுகள் எனக்குக் குறிக்கப்பட்டது. [QE]
4. [QS]நான் படுத்துக்கொள்ளுகிறபோது, எப்பொழுது எழுந்திருப்பேன்? [QE][QS]இரவு எப்பொழுது முடியும் என்று சொல்லி, [QE][QS]விடியும்வரை உருண்டு புரளுகிறதினால் எனக்குப் போதுமென்றுபோகிறது. [QE]
5. [QS]என் உடல் பூச்சிகளினாலும், [QE][QS]அடைபற்றின புழுதியினாலும் மூடப்பட்டிருக்கிறது; [QE][QS]என் தோல் வெடித்து அருவருப்பாயிற்று. [QE]
6. [QS]என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாக ஓடுகிறது; [QE][QS]அவைகள் நம்பிக்கையில்லாமல் முடிந்துபோகும். [QE]
7. [QS]என் உயிர் காற்றைப்போலிருக்கிறதென்றும், [QE][QS]என் கண்கள் இனி நன்மையைக் காணப்போகிறதில்லையென்றும் நினைத்தருளும். [QE]
8. [QS]இப்போது என்னைக் காண்கிறவர்களின் கண்கள் இனி என்னைக் காண்பதில்லை; [QE][QS]உம்முடைய கண்கள் என்மேல் நோக்கமாயிருக்கிறது; நானோ இல்லாமற்போகிறேன். [QE]
9. [QS]மேகம் பறந்துபோகிறதுபோல, [QE][QS]பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரமாட்டான். [QE]
10. [QS]இனி தன் வீட்டிற்குத் திரும்பமாட்டான், [QE][QS]அவனுடைய இடம் இனி அவனை அறியாது. [QE]
11. [QS]ஆகையால் நான் என் வாயை அடக்காமல், [QE][QS]என் ஆவியின் வேதனையினால் பேசி, [QE][QS]என் ஆத்துமாவின் கசப்பினால் அங்கலாய்ப்பேன். [QE]
12. [QS]தேவரீர் என்மேல் காவல் வைக்கிறதற்கு நான் சமுத்திரமோ? [QE][QS]நான் ஒரு திமிங்கிலமோ? [QE]
13. [QS]என் கட்டில் எனக்கு ஆறுதல் கொடுக்கும் என்றும், [QE][QS]என் படுக்கை என் தவிப்பை ஆற்றும் என்றும் நான் சொல்வேன் என்றால், [QE]
14. [QS]நீர் கனவுகளால் என்னைக் கலங்கவைத்து, [QE][QS]தரிசனங்களால் எனக்கு பயமுண்டாக்குகிறீர். [QE]
15. [QS]அதினால் என் ஆத்துமா, [QE][QS]நெருக்கப்பட்டு சாகிறதையும், [QE][QS]என் எலும்புகளுடன் உயிரோடிருக்கிறதைவிட, [QE][QS]மரணத்தையும் விரும்புகிறது. [QE]
16. [QS]இப்படியிருக்கிறதை வெறுக்கிறேன்; [QE][QS]எந்நாளும் உயிரோடிருக்க விரும்பமாட்டேன், என்னை விட்டுவிடும்; [QE][QS]என் நாட்கள் மாயைதானே. [QE]
17. [QS]மனிதனை நீர் ஒரு பொருட்டாக நினைக்கிறதற்கும், [QE][QS]அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும், [QE]
18. [QS]காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும், [QE][QS]நிமிடந்தோறும் அவனைச் சோதிக்கிறதற்கும், [QE][QS]அவன் எம்மாத்திரம்? [QE]
19. [QS]நான் என் உமிழ்நீரை விழுங்காமல் எத்தனைகாலம் என்னை நெகிழாமலும், [QE][QS]என்னை விடாமலும் இருப்பீர். [QE]
20. [QS]மனிதர்களைக் காப்பவரே, [QE][QS]பாவம்செய்தேனானால் உமக்கு நான் செய்யவேண்டியது என்ன? [QE][QS]நான் எனக்குத்தானே பாரமாயில்லாமல், [QE][QS]நீர் என்னை உமக்குக் குறியாக வைத்தது என்ன? [QE]
21. [QS]என் மீறுதலை நீர் மன்னிக்காமலும், என் அக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறது என்ன? [QE][QS]இப்பொழுதே மண்ணில் படுத்துக்கொள்வேன்; [QE][QS]விடியற்காலத்திலே என்னைத் தேடுவீரானால் நான் இருக்கமாட்டேன்” என்றான். [QE]