1. {#1யோபுவின் வார்த்தைகள் } [PS]யோபு மறுமொழியாக: [PE]
2. [QS]“என் பிரச்சனைகளும், [QE][QS]துன்பங்களும் தராசிலே வைக்கப்பட்டு நிறுக்கப்பட்டால், நலமாயிருக்கும். [QE]
3. [QS]அப்பொழுது அது கடற்கரை மணலைவிட பாரமாயிருக்கும்; [QE][QS]ஆகையால் என் துக்கம் சொல்லிமுடியாது. [QE]
4. [QS]சர்வவல்லமையுள்ள தேவனின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; [QE][QS]அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; [QE][QS]தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் [QE][QS]எனக்கு முன்பாக அணியணியாக நிற்கிறது. [QE]
5. [QS]புல் இருக்கிற இடத்திலே காட்டுக்கழுதை கத்துமோ? [QE][QS]தனக்குத் தீவனமிருக்கிற இடத்திலே எருது கதறுமோ? [QE]
6. [QS]ருசியில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிடமுடியுமோ? [QE][QS]முட்டையின் வெள்ளைக்கருவில் சுவை உண்டோ? [QE]
7. [QS]உங்கள் வார்த்தைகளை என் ஆத்துமா தொடமாட்டேன் என்கிறது; [QE][QS]அவைகள் வெறுப்பான உணவுபோல இருக்கிறது. [QE]
8. [QS]ஆ, என் மன்றாட்டு எனக்கு அருளப்பட்டு, [QE][QS]நான் விரும்புவதை தேவன் எனக்குத் தந்து, [QE]
9. [QS]தேவன் என்னை நொறுக்க விரும்பி, [QE][QS]தம்முடைய கையை நீட்டி என்னை கொன்றுபோட்டால் நலமாயிருக்கும். [QE]
10. [QS]அப்பொழுதாவது எனக்கு ஆறுதல் இருக்குமே; [QE][QS]அப்பொழுது என்னை விட்டு நீங்காத வியாதியினால் [QE][QS]உணர்வில்லாமல் இருப்பேன்; [QE][QS]பரிசுத்தருடைய வார்த்தைகளை நான் மறைத்துவைக்கவில்லை, [QE][QS]அவர் என்னைக் கைவிடமாட்டார். [QE]
11. [QS]நான் காத்துக்கொண்டிருக்க என் பெலன் எம்மாத்திரம்? [QE][QS]என் வாழ்நாள் நீடித்திருக்கச் செய்ய என் முடிவு எப்படிப்பட்டது? [QE]
12. [QS]என் பெலன் கற்களின் பெலனோ? என் உடல் வெண்கலமோ? [QE]
13. [QS]எனக்கு உதவியானது ஒன்றும் இல்லையல்லவோ? [QE][QS]உதவி என்னைவிட்டு நீங்கிவிட்டதே. [QE]
14. [QS]உபத்திரவப்படுகிறவனுக்கு அவனுடைய நண்பரால் தயவு கிடைக்கவேண்டும்; [QE][QS]அவனோ சர்வவல்லமையுள்ள தேவனுக்குப் பயப்படாமல் போகிறான். [QE]
15. [QS]என் சகோதரர் காட்டாறுபோல மோசம்செய்கிறார்கள்; ஆறுகளின் வெள்ளத்தைப்போலக் கடந்துபோகிறார்கள். [QE]
16. [QS]அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும், [QE][QS]அதில் விழுந்திருக்கிற உறைந்த மழையினாலும் கலங்கலாகி, [QE]
17. [QS]வெப்பம் கண்டவுடனே உருகி வற்றி, [QE][QS]சூடு பட்டவுடனே தங்கள் இடத்தில் உருகிப்போகின்றன. [QE]
18. [QS]அவைகளுடைய வழிகளின் போக்குகள் இங்குமங்கும் பிரியும்; [QE][QS]அவைகள் வீணாக பரவி ஒன்றுமில்லாமற்போகும். [QE]
19. [QS]தேமாவின் பயணக்காரர் தேடி, [QE][QS]சேபாவின் பயணக்கூட்டங்கள் [QE][QS]அவைகள்மேல் நம்பிக்கை வைத்து, [QE]
20. [QS]தாங்கள் இப்படி நம்பினதினாலே வெட்கப்படுகிறார்கள்; [QE][QS]அவ்விடம்வரை வந்து கலங்கிப்போகிறார்கள். [QE]
21. [QS]அப்படியே நீங்களும் இப்பொழுது ஒன்றுக்கும் உதவாமற்போனீர்கள்; [QE][QS]என் ஆபத்தைக் கண்டு பயப்படுகிறீர்கள். [QE]
22. [QS]எனக்கு ஏதாகிலும் கொண்டு வாருங்கள் என்றும், [QE][QS]உங்கள் செல்வத்திலிருந்து எனக்கு ஏதாவது பணம் கொடுங்கள் என்றும்; [QE]
23. [QS]அல்லது சத்துருவின் கைக்கு என்னை காப்பாற்றுங்கள், [QE][QS]கொடியவரின் கைக்கு என்னை தப்புவித்து காப்பாற்றிவிடுங்கள் என்றும் நான் சொன்னதுண்டோ? [QE]
24. [QS]எனக்கு பதில் சொல்லுங்கள், நான் மவுனமாயிருப்பேன்; [QE][QS]நான் எதிலே தவறுசெய்தேனோ அதை எனக்குத் தெரியப்படுத்துங்கள். [QE]
25. [QS]உண்மையான வார்த்தைகளில் எவ்வளவு வல்லமை உண்டு? [QE][QS]உங்கள் கடிந்துகொள்ளுதலினால் காரியம் என்ன? [QE]
26. [QS]கடிந்துகொள்ள நீங்கள் வார்த்தைகளை யோசித்து, [QE][QS]நம்பிக்கையற்றவனுடைய வார்த்தைகளைக் காற்றிலே விட்டுவிடுகிறீர்களோ? [QE]
27. [QS]இப்படிச் செய்து திக்கற்றவன்மேல் நீங்கள் விழுந்து, [QE][QS]உங்கள் நண்பனுக்குப் படுகுழியை வெட்டுகிறீர்கள். [QE]
28. [QS]இப்போதும் உங்களுக்கு விருப்பமானால் என்னை நோக்கிப் பாருங்கள்; [QE][QS]அப்பொழுது நான் பொய்சொல்லுகிறேனோ என்று உங்களுக்கு வெளிப்படையாகத் தெரியும். [QE]
29. [QS]நீங்கள் திரும்ப யோசித்து பாருங்கள்; [QE][QS]அநீதி காணப்படாதிருக்கும்; [QE][QS]திரும்ப சிந்தியுங்கள் என் நீதி அதிலே வெளிப்படும். [QE]
30. [QS]என் நாவிலே அநீதி உண்டோ? [QE][QS]என் வாய் ஆகாதவைகளைப் பகுத்தறியாதோ? [QE]