1. [QS]“இப்போது கூப்பிடும், உமக்கு பதில் கொடுப்பவர் உண்டோ என்று பார்ப்போம்? [QE][QS]பரிசுத்தவான்களில் யாரை நோக்கிப் பார்ப்பீர்? [QE]
2. [QS]கோபம் மூடனைக் கொல்லும்; [QE][QS]பொறாமை புத்தியில்லாதவனை அழிக்கும். [QE]
3. [QS]மூடன் ஒருவன் வேரூன்றுகிறதை நான் கண்டு [QE][QS]உடனே அவனுடைய குடியிருக்கும் இடத்தைச் சபித்தேன். [QE]
4. [QS]அவனுடைய பிள்ளைகள் காப்பாற்றுவதற்குத் தூரமாகி, [QE][QS]காப்பாற்றுவாரில்லாமல், வாசலிலே நொறுக்கப்பட்டார்கள். [QE]
5. [QS]பசித்தவன் அவனுடைய விளைச்சலை முட்செடிகளுக்குள் இருந்து பறித்துச் சாப்பிட்டான்; [QE][QS]பேராசைக்காரன் அவனுடைய செல்வத்தை விழுங்கினான். [QE]
6. [QS]தீமை புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை; [QE][QS]வருத்தம் மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை. [QE]
7. [QS]தீப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, [QE][QS]மனிதன் வருத்தம் அநுபவிக்கப் பிறந்திருக்கிறான். [QE]
8. [QS]ஆனாலும் நான் தேவனை நாடி, [QE][QS]என் நியாயத்தை தேவனிடத்தில் ஒப்படைப்பேன். [QE]
9. [QS]ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணமுடியாத [QE][QS]அதிசயங்களையும் அவர் செய்கிறார். [QE]
10. [QS]தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, [QE][QS]துக்கிக்கிறவர்களை காப்பாற்றி உயர்த்துகிறார். [QE]
11. [QS]அவர் பூமியின்மேல் மழையை பெய்யவைத்து, [QE][QS]வெளிநிலங்களின்மேல் தண்ணீர்களை வருவிக்கிறார். [QE]
12. [QS]தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முழுவதும் செய்துமுடிக்காமல் இருக்க, [QE][QS]அவர்களுடைய திட்டங்களை அவர் பொய்யாக்குகிறார். [QE]
13. [QS]அவர் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார்; [QE][QS]தந்திரக்காரரின் ஆலோசனை கட்டப்படும். [QE]
14. [QS]அவர்கள் பகற்காலத்திலே இருளுக்குள்ளாகி, [QE][QS]மத்தியான வேளையிலே இரவில் தடவுகிறதுபோல தடவி அலைகிறார்கள். [QE]
15. [QS]ஆனாலும் எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்திற்கும், [QE][QS]பெலவானின் கைக்கும் தடுத்து காப்பாற்றுகிறார். [QE]
16. [QS]அதினால் தரித்திரனுக்கு நம்பிக்கை உண்டு; [QE][QS]தீமையானது தன் வாயை மூடும். [QE]
17. [QS]இதோ, தேவன் தண்டிக்கிற மனிதன் பாக்கியவான்; [QE][QS]ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும். [QE]
18. [QS]அவர் காயப்படுத்திக் காயம் கட்டுகிறார்; [QE][QS]அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது. [QE]
19. [QS]ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை விலக்கிக்காப்பார்; [QE][QS]ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது. [QE]
20. [QS]பஞ்சகாலத்திலே அவர் உம்மை மரணத்திற்கும், [QE][QS]போரிலே பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கிக்காப்பார். [QE]
21. [QS]நாவின் சவுக்குக்கும் மறைக்கப்படுவீர்; [QE][QS]அழிவு வரும்போதும் பயப்படாமலிருப்பீர். [QE]
22. [QS]அழிவையும் பஞ்சத்தையும் பார்த்து சிரிப்பீர்கள்; [QE][QS]காட்டுமிருகங்களுக்கும் பயப்படாமலிருப்பீர்கள். [QE]
23. [QS]வெளியின் கற்களுடனும் உமக்கு உடன்படிக்கையிருக்கும்; [QE][QS]வெளியின் மிருகங்களும் உம்முடன் சமாதானமாயிருக்கும். [QE]
24. [QS]உம்முடைய குடியிருப்பு சமாதானத்துடன் இருக்கக் காண்பீர்; [QE][QS]உம்முடைய குடியிருக்கும் இடத்தை விசாரிக்கும்போது [QE][QS]குறைவைக் காணமாட்டீர். [QE]
25. [QS]உம்முடைய சந்ததி பெருகி, [QE][QS]உம்முடைய சந்ததியார் பூமியின் தாவரங்களைப்போல இருப்பார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள். [QE]
26. [QS]தானியம் ஏற்றகாலத்திலே களஞ்சியத்தில் சேருகிறதுபோல, [QE][QS]முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர். [QE]
27. [QS]இதோ, நாங்கள் ஆராய்ந்து அறிந்தது இதுதான்; [QE][QS]காரியம் இப்படியிருக்கிறது; [QE][QS]இதை நீர் கேட்டு உமக்கு நன்மையுண்டாக அறிந்துகொள்ளும்” என்றான். [QE]