2. “சர்வவல்லமையுள்ள தேவனுடன் வழக்காடி அவருக்குப் புத்தி சொல்லுகிறவன் யார்?
தேவன் பேரில் குற்றம் கண்டுபிடிக்கிறவன் இவைகளுக்குப் பதில் சொல்லட்டும் என்றார். |
4. இதோ, நான் எளியவன்;
நான் உமக்கு என்ன பதில் சொல்லுவேன்; என் கையால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன். |
10. இப்போதும் நீ முக்கியத்துவத்தாலும் மகத்துவத்தாலும் உன்னை அலங்கரித்து,
மகிமையையும் கனத்தையும் அணிந்துகொண்டு, |
12. பெருமையுள்ளவனையெல்லாம் கவனித்து,
அவனைப் பணியவைத்து, துன்மார்க்கரை அவர்கள் இருக்கிற இடத்திலே மிதித்துவிடு. |
15. இப்போதும் பிகெமோத்தை * யானையை போன்ற பெரிய மிருகம் நீ கவனித்துப்பார்;
உன்னை உண்டாக்கினதுபோல அதையும் உண்டாக்கினேன்; அது மாட்டைப்போல் புல்லைத் தின்னும். |
17. அது தன் வாலைக் கேதுரு மரத்தைப்போல் நீட்டுகிறது;
அதின் இடுப்பு நரம்புகள் பின்னிக்கொண்டிருக்கிறது. |
18. அதின் எலும்புகள் கெட்டியான வெண்கலத்தைப்போலவும்,
அதின் கால்கள் இரும்புக் கம்பிகளைப்போலவும் இருக்கிறது. |
19. அது தேவனுடைய படைப்புகளில் முதன்மையான ஒரு படைப்பு,
அதை உண்டாக்கினவர் அதற்கு ஒரு பட்டயத்தையும் கொடுத்தார். |
23. இதோ, நதி புரண்டு வந்தாலும் அது பயந்தோடாது;
யோர்தான் நதியளவு தண்ணீர் அதின் முகத்தில் மோதினாலும் அது அசையாமலிருக்கும். |
24. அதின் கண்கள் பார்த்திருக்க அதை யார் பிடிக்கமுடியும்?
மூக்கணாங்கயிறுபோட அதின் மூக்கை யார் குத்தமுடியும்? PE |