1. {#1எலிப்பாஸின் வார்த்தைகள் } [PS]அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் மறுமொழியாக: [PE]
2. [QS]நாங்கள் உம்முடன் பேசத்துணிந்தால், அனுமதிப்பீரோ? [QE][QS]ஆனாலும் பேசாமல் அடக்கிக்கொள்ளத்தக்கவன் யார்? [QE]
3. [QS]இதோ, நீர் அநேகருக்குப் புத்திசொல்லி, [QE][QS]சோர்ந்த கைகளைத் திடப்படுத்தினீர். [QE]
4. [QS]விழுகிறவனை உம்முடைய வார்த்தைகளால் நிற்கச்செய்தீர், [QE][QS]தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர். [QE]
5. [QS]இப்பொழுதோ துன்பம் உமக்கு சம்பவித்ததினால் சோர்ந்துபோகிறீர்; [QE][QS]அது உம்மைத் தொட்டதினால் கலங்குகிறீர். [QE]
6. [QS]உம்முடைய தேவபக்தி உம்முடைய உறுதியாயும், [QE][QS]உம்முடைய வழிகளின் உத்தமம் உம்முடைய நம்பிக்கையாகவும் இருக்கவேண்டியதல்லவோ? [QE]
7. [QS]குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ? [QE][QS]சன்மார்க்கர் அழிக்கப்பட்டது எப்போது? [QE][QS]இதை நினைத்துப்பாரும்.
8. நான் கண்டிருக்கிறபடி, [QE][QS]அநியாயத்தை உழுது, தீமையை விதைத்தவர்கள், [QE][QS]அதையே அறுக்கிறார்கள். [QE]
9. [QS]தேவனுடைய சுவாசத்தினாலே அவர்கள் அழிந்து, [QE][QS]அவருடைய மூக்கின் காற்றினாலே அழிகிறார்கள். [QE]
10. [QS]சிங்கத்தின் கெர்ச்சிப்பும், கொடிய சிங்கத்தின் முழக்கமும் அடங்கும்; [QE][QS]பாலசிங்கங்களின் பற்களும் உடைந்துபோகும். [QE]
11. [QS]கிழச்சிங்கம் இரையில்லாமையால் இறந்துபோகும், [QE][QS]பாலசிங்கங்கள் சிதறிப்போகும். [QE]
12. [QS]இப்போதும் ஒரு வார்த்தை என்னிடத்தில் இரகசியமாக அறிவிக்கப்பட்டது, [QE][QS]அதன் மெல்லிய ஓசை என் காதில் விழுந்தது. [QE]
13. [QS]மனிதர்மேல் அயர்ந்த தூக்கம் வரும்போது, [QE][QS]இரவு தரிசனங்களில் பலவித தோற்றங்கள் உண்டாகும்போது, [QE]
14. [QS]பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது, [QE][QS]என் எலும்புகளெல்லாம் நடுங்கியது. [QE]
15. [QS]அப்பொழுது ஒரு ஆவி என் முகத்திற்கு முன்பாகக் கடந்தது, [QE][QS]என் உடலின் முடிகள் சிலிர்த்தது. [QE]
16. [QS]அது ஒரு உருவம் போல என் கண்களுக்குமுன் நின்றது, [QE][QS]ஆனாலும் அதின் உருவம் இன்னதென்று விளங்கவில்லை; [QE][QS]அமைதலுண்டானது, அப்பொழுது நான் கேட்ட சத்தமாவது: [QE]
17. [QS]மனிதன் தேவனைவிட நீதிமானாயிருப்பானோ? [QE][QS]மனிதன் தன்னை உண்டாக்கினவரைவிட சுத்தமாயிருப்பானோ? [QE]
18. [QS]கேளும், அவர் தம்முடைய வேலைக்காரரிடத்தில் நம்பிக்கை வைப்பதில்லை; [QE][QS]தம்முடைய தூதரின்மேலும் புத்தியீனத்தைச் சுமத்துகிறாரே, [QE]
19. [QS]புழுதியில் அஸ்திபாரம் போட்டு, [QE][QS]மண் வீடுகளில் குடியிருந்து, செல்லுப்பூச்சியால் [QE][QS]அரிக்கப்படுகிறவர்கள்மேல் அவர் நம்பிக்கை வைப்பது எப்படி? [QE]
20. [QS]காலைமுதல் மாலைவரைக்கும் அழிந்து, [QE][QS]கவனிப்பார் ஒருவருமில்லாமல், [QE][QS]நிலையான அழிவை அடைகிறார்கள். [QE]
21. [QS]அவர்களிலிருக்கிற அவர்களுடைய மேன்மை போய்விடுமல்லவோ? [QE][QS]ஞானமடையாமல் இறக்கிறார்களே என்று சொன்னான். [QE]