1. {#1யெகோவாவின் வார்த்தைகள் } [PS]அப்பொழுது யெகோவா: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு மறுமொழியாக: [PE]
2. [QS]“அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை இருளாக்குகிற இவன் யார்? [QE]
3. [QS]இப்போதும் மனிதனைப்போல் ஆடையைக்கட்டிக்கொள்; [QE][QS]நான் உன்னைக் கேட்பேன்; [QE][QS]நீ எனக்குப் பதில் சொல் [QE]
4. [QS]நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? [QE][QS]நீ அறிவாளியானால் அதைச் சொல். [QE]
5. [QS]அதற்கு அளவு குறித்தவர் யார்? [QE][QS]அதின்மேல் நூல்போட்டவர் யார்? [QE][QS]இதை நீ அறிந்திருந்தால் சொல். [QE]
6. [QS]அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? [QE][QS]அதின் மூலைக்கல்லை வைத்தவர் யார்? [QE]
7. [QS]அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஒன்றாகப்பாடி, [QE][QS]தேவமகன்கள் எல்லோரும் கெம்பீரித்தார்களே. [QE]
8. [QS]கர்ப்பத்திலிருந்து பிறக்கிறதுபோல் கடல் புரண்டுவந்தபோது, [QE][QS]அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்? [QE]
9. [QS]மேகத்தை அதற்கு ஆடையாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும், [QE]
10. [QS]நான் அதற்கு எல்லையைக் குறித்து, [QE][QS]அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு: [QE]
11. [QS]இதுவரை வா, மீறி வராதே; [QE][QS]உன் அலைகளின் பெருமை இங்கே அடங்குவதாக என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்? [QE]
12. [QS]தீயவர்கள் பூமியிலிருந்து அகற்றிப்போடுவதற்காக, [QE][QS]அதின் கடைசி எல்லைகளைப் பிடிக்க, [QE]
13. [QS]உன் வாழ்நாளிலே எப்போதாவது நீ அதிகாலைக்குக் கட்டளை கொடுத்து, [QE][QS]சூரிய உதயத்திற்கு அதின் இடத்தைக் காண்பித்ததுண்டோ? [QE]
14. [QS]பூமி முத்திரையிடப்பட்ட களிமண்போல வேறே தோற்றம்கொள்ளும்; [QE][QS]அனைத்தும் ஆடை அணிந்திருக்கிறதுபோலக் காணப்படும். [QE]
15. [QS]துன்மார்க்கரின் ஒளி அவர்களைவிட்டு எடுபடும்; [QE][QS]மேட்டிமையான கை முறிக்கப்படும்.
16. நீ சமுத்திரத்தின் அடித்தளங்கள்வரை புகுந்து, ஆழத்தின் அடியில் உலாவினதுண்டோ? [QE]
17. [QS]மரணவாசல்கள் உனக்குத் திறந்ததுண்டோ? [QE][QS]மரண இருளின் வாசல்களை நீ பார்த்ததுண்டோ? [QE]
18. [QS]நீ பூமியின் விசாலங்களை ஆராய்ந்து அறிந்ததுண்டோ? [QE][QS]இவைகளையெல்லாம் நீ அறிந்திருந்தால் சொல். [QE]
19. [QS]வெளிச்சம் வாசமாயிருக்கும் இடத்திற்கு வழியெங்கே? [QE][QS]இருள் குடிகொண்டிருக்கும் இடமெங்கே? [QE]
20. [QS]அதின் எல்லை இன்னதென்று உனக்குத் தெரியுமோ? [QE][QS]அதின் வீட்டிற்குப்போகிற பாதையை அறிந்திருக்கிறாயோ? [QE]
21. [QS]நீ அதை அறியும்படி அப்போது பிறந்திருந்தாயோ? [QE][QS]உன் நாட்களின் எண்ணிக்கை அவ்வளவு பெரிதோ? [QE]
22. [QS]உறைந்த மழையின் கிடங்குகளுக்குள் நீ நுழைந்தாயோ? [QE][QS]கல்மழையிலிருக்கிற கிடங்குகளைப் பார்த்தாயோ? [QE]
23. [QS]ஆபத்துவரும் காலத்திலும், கலகமும் போரும் வரும் காலத்திலும், [QE][QS]பயன்படுத்த நான் அவைகளை வைத்துவைத்திருக்கிறேன். [QE]
24. [QS]வெளிச்சம் பரப்புகிறதற்கும், கீழ்காற்று பூமியின்மேல் வீசுவதற்கான வழி எங்கே? [QE]
25. [QS]பாழும் வெட்டவெளியுமான தரையைத் திருப்தியாக்கி, [QE][QS]இளம்செடிகளின் முளைகளை முளைக்கவைப்பதற்கு, [QE]
26. [QS]பூமியெங்கும் மனிதர் குடியில்லாத இடத்திலும், [QE][QS]மனிதநடமாட்டமில்லாத வனாந்திரத்திலும் மழையைப் பொழியச்செய்து, [QE]
27. [QS]வெள்ளத்திற்கு நீர்க்கால்களையும், [QE][QS]இடிமுழக்கங்களுடன் வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்? [QE]
28. [QS]மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளைப் பிறப்பித்தவர் யார்? [QE]
29. [QS]உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது? [QE][QS]ஆகாயத்தின் உறைந்த பனியைப் பெற்றவர் யார்? [QE]
30. [QS]தண்ணீர் பனிக்கட்டியாகி மறைந்து, [QE][QS]ஆழத்தின் முகம் கெட்டியாக உறைந்திருக்கிறதே. [QE]
31. [QS]அறுமீன் நட்சத்திரத்தின் அழகின் ஒற்றுமையை நீ இணைக்கமுடியுமோ? [QE][QS]அல்லது விண்மீன் குழுவை கலைப்பாயோ? [QE]
32. [QS]நட்சத்திரங்களை அதினதின் காலத்திலே வரவைப்பாயோ? [QE][QS]துருவமண்டலத்தின் நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ? [QE]
33. [QS]வானத்தின் அமைப்பை நீ அறிவாயோ? [QE][QS]அது பூமியை ஆளும் ஆளுகையை நீ திட்டமிடுவாயோ? [QE]
34. [QS]ஏராளமான தண்ணீர் உன்மேல் பொழியவேண்டும் என்று [QE][QS]உன் சத்தத்தை மேகங்கள்வரை உயர்த்துவாயோ? [QE]
35. [QS]நீ மின்னல்களை வரவழைத்து, [QE][QS]அவைகள் புறப்பட்டுவந்து: இதோ, [QE][QS]இங்கேயிருக்கிறோம் என்று உனக்குச் சொல்ல வைப்பாயோ? [QE]
36. [QS]மறைவான இடத்தில் ஞானத்தை வைத்தவர் யார்? [QE][QS]உள்ளத்தில் புத்தியைக் கொடுத்தவர் யார்? [QE]
37. [QS]ஞானத்தினாலே மேகங்களை எண்ணுபவர் யார்? [QE]
38. [QS]தூசியானது பரவலாகவும், [QE][QS]மண்கட்டிகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளவும், [QE][QS]வானத்தின் மேகங்களிலுள்ள தண்ணீரைப் பொழியச்செய்கிறவர் யார்? [QE]
39. [QS]நீ சிங்கத்திற்கு இரையை வேட்டையாடி, [QE]
40. [QS]சிங்கக்குட்டிகள் தாங்கள் தங்கும் இடங்களிலே கிடந்து குகையில் பதுங்கியிருக்கிறபோது, [QE][QS]அவைகளின் ஆசையைத் திருப்தியாக்குவாயோ? [QE]
41. [QS]காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, [QE][QS]ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, [QE][QS]அவைகளுக்கு இரையைச் சேகரித்துக் கொடுக்கிறவர் யார்? [QE]