2. தேவனுடைய சத்தத்தினால் உண்டாகிற அதிர்ச்சியையும்,
அவர் வாயிலிருந்து புறப்படுகிற முழக்கத்தையும் கவனமாகக் கேளுங்கள். |
3. அவர் வானத்தின் கீழெங்கும் அந்தத் தொனியையும்,
பூமியின் கடையாந்தரங்கள்மேல் அதின் மின்னலையும் செல்லவிடுகிறார். |
4. அதற்குப்பின்பு அவர் சத்தமாக முழங்கி,
தம்முடைய மகத்துவத்தின் சத்தத்தைக் குமுறச்செய்கிறார்; அவருடைய சத்தம் கேட்கப்படும்போது அதைத் தவிர்க்கமுடியாது. |
5. தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியவிதமாகக் குமுறச் செய்கிறார்;
நாம் விளங்கமுடியாத பெரிய காரியங்களை அவர் செய்கிறார். |
6. அவர் உறைந்த மழையையும், கல்மழையையும்,
தம்முடைய வல்லமையின் பெருமழையையும் பார்த்து: பூமியின்மேல் பெய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார். |
7. தாம் உண்டாக்கின எல்லா மனிதரும் தம்மை அறியவேண்டுமென்று,
அவர் எல்லா மனிதருடைய கைகளையும் முடக்கிப்போடுகிறார். |
10. தம்முடைய சுவாசத்தினால் தேவன் குளிரைக் கொடுக்கிறார்;
அப்பொழுது தண்ணீரின் மேற்பரப்பு உறைந்துபோகும். |
12. அவர் அவைகளுக்குக் கட்டளையிடுகிற யாவையும்,
அவைகள் பூச்சக்கரத்தில் நடப்பிக்கும்படி, அவர் அவைகளைத் தம்முடைய ஞான ஆலோசனைகளின்படியே சுற்றித் திரியவைக்கிறார். |
13. ஒன்றில் தண்டனையாகவும், ஒன்றில் தம்முடைய பூமிக்கு உபயோகமாகவும்,
ஒன்றில் கிருபையாகவும், அவைகளை வரச்செய்கிறார். |
20. நான் பேசத்துணிந்தேன் என்று யாராவது ஒருவன் அவருக்கு முன்பாகச் சொல்லமுடியுமோ?
ஒருவன் பேசத்துணிந்தால் அவன் அழிக்கப்பட்டுப்போவானே. |
21. இப்போதும் காற்று வீசி ஆகாய மண்டலங்களிலுள்ள மப்பு நீங்கச் செய்திருக்கிற சமயத்தில் வடக்கேயிருந்து பொன்மயமான கதிர்கள் வருகிறபோது,
|
22. ஆகாயமண்டலத்திலே பிரகாசிக்கிற சூரியனை முதலாய் ஒருவரும் நோக்கிப் பார்க்கமுடியாதே;
தேவனிடத்திலோ பயங்கரமான மகத்துவமுண்டு. |
23. சர்வவல்லமையுள்ள தேவனை நாம் கண்டுபிடிக்கமுடியாது;
அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; அவர் மகா நீதிபரர்; அவர் ஒடுக்கமாட்டார். |
24. ஆகையால் மனிதர் அவருக்குப் பயப்படவேண்டும்;
தங்கள் மனதில் ஞானிகளாயிருக்கிற எவர்களையும் அவர் மதிக்கமாட்டார்” என்றான். PE |