1. [QS]“இதினால் என் இருதயம் தத்தளித்து, [QE][QS]தன்னிடத்தைவிட்டுத் தெறிக்கிறது. [QE]
2. [QS]தேவனுடைய சத்தத்தினால் உண்டாகிற அதிர்ச்சியையும், [QE][QS]அவர் வாயிலிருந்து புறப்படுகிற முழக்கத்தையும் கவனமாகக் கேளுங்கள். [QE]
3. [QS]அவர் வானத்தின் கீழெங்கும் அந்தத் தொனியையும், [QE][QS]பூமியின் கடையாந்தரங்கள்மேல் அதின் மின்னலையும் செல்லவிடுகிறார். [QE]
4. [QS]அதற்குப்பின்பு அவர் சத்தமாக முழங்கி, [QE][QS]தம்முடைய மகத்துவத்தின் சத்தத்தைக் குமுறச்செய்கிறார்; [QE][QS]அவருடைய சத்தம் கேட்கப்படும்போது அதைத் தவிர்க்கமுடியாது. [QE]
5. [QS]தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியவிதமாகக் குமுறச் செய்கிறார்; [QE][QS]நாம் விளங்கமுடியாத பெரிய காரியங்களை அவர் செய்கிறார். [QE]
6. [QS]அவர் உறைந்த மழையையும், கல்மழையையும், [QE][QS]தம்முடைய வல்லமையின் பெருமழையையும் பார்த்து: [QE][QS]பூமியின்மேல் பெய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார். [QE]
7. [QS]தாம் உண்டாக்கின எல்லா மனிதரும் தம்மை அறியவேண்டுமென்று, [QE][QS]அவர் எல்லா மனிதருடைய கைகளையும் முடக்கிப்போடுகிறார். [QE]
8. [QS]அப்பொழுது காட்டுமிருகங்கள் தங்கள் குகைகளில் புகுந்து, [QE][QS]தங்கள் கெபிகளில் தங்கும். [QE]
9. [QS]தெற்கேயிருந்து சூறாவளியும், [QE][QS]வடகாற்றினால் குளிரும் வரும். [QE]
10. [QS]தம்முடைய சுவாசத்தினால் தேவன் குளிரைக் கொடுக்கிறார்; [QE][QS]அப்பொழுது தண்ணீரின் மேற்பரப்பு உறைந்துபோகும். [QE]
11. [QS]அவர் நீர்த்துளிகளை மேகத்தில் ஏற்றி, [QE][QS]மின்னலினால் மேகத்தைச் சிதறவைக்கிறார். [QE]
12. [QS]அவர் அவைகளுக்குக் கட்டளையிடுகிற யாவையும், [QE][QS]அவைகள் பூச்சக்கரத்தில் நடப்பிக்கும்படி, [QE][QS]அவர் அவைகளைத் தம்முடைய ஞான ஆலோசனைகளின்படியே சுற்றித் திரியவைக்கிறார். [QE]
13. [QS]ஒன்றில் தண்டனையாகவும், ஒன்றில் தம்முடைய பூமிக்கு உபயோகமாகவும், [QE][QS]ஒன்றில் கிருபையாகவும், அவைகளை வரச்செய்கிறார். [QE]
14. [QS]யோபே, இதற்குச் செவிகொடும்; [QE][QS]தரித்துநின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப்பாரும். [QE]
15. [QS]தேவன் அவைகளைத் திட்டமிட்டு, [QE][QS]தம்முடைய மேகத்தின் மின்னலை மின்னச்செய்யும் விதத்தை அறிவீரோ? [QE]
16. [QS]மேகங்கள் தொங்கும்படி வைக்கும் எடையையும், [QE][QS]பூரண ஞானமுள்ளவரின் அற்புதமான செய்கைகளையும், [QE]
17. [QS]தென்றலினால் அவர் பூமியை அமைக்கும்போது, [QE][QS]உம்முடைய ஆடைகள் வெப்பமாயிருக்கும் முறையையும் அறிவீரோ? [QE]
18. [QS]செய்யப்பட்ட கண்ணாடியைப்போல் கெட்டியான ஆகாயமண்டலங்களை நீர் அவருடன் இருந்து விரித்தீரோ? [QE]
19. [QS]அவருக்கு நாம் சொல்லக்கூடியதை எங்களுக்குப் போதியும்; [QE][QS]இருளின் காரணமாக முறைதவறிப் பேசுகிறோம். [QE]
20. [QS]நான் பேசத்துணிந்தேன் என்று யாராவது ஒருவன் அவருக்கு முன்பாகச் சொல்லமுடியுமோ? [QE][QS]ஒருவன் பேசத்துணிந்தால் அவன் அழிக்கப்பட்டுப்போவானே. [QE]
21. [QS]இப்போதும் காற்று வீசி ஆகாய மண்டலங்களிலுள்ள மப்பு நீங்கச் செய்திருக்கிற சமயத்தில் வடக்கேயிருந்து பொன்மயமான கதிர்கள் வருகிறபோது, [QE]
22. [QS]ஆகாயமண்டலத்திலே பிரகாசிக்கிற சூரியனை முதலாய் ஒருவரும் நோக்கிப் பார்க்கமுடியாதே; [QE][QS]தேவனிடத்திலோ பயங்கரமான மகத்துவமுண்டு. [QE]
23. [QS]சர்வவல்லமையுள்ள தேவனை நாம் கண்டுபிடிக்கமுடியாது; [QE][QS]அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; [QE][QS]அவர் மகா நீதிபரர்; [QE][QS]அவர் ஒடுக்கமாட்டார். [QE]
24. [QS]ஆகையால் மனிதர் அவருக்குப் பயப்படவேண்டும்; [QE][QS]தங்கள் மனதில் ஞானிகளாயிருக்கிற எவர்களையும் அவர் மதிக்கமாட்டார்” என்றான். [QE]