1. [PS]பின்னும் எலிகூ: [PE]
2. [QS]“நான் பேசிமுடியும்வரை சற்றேபொறும்; [QE][QS]இன்னும் தேவனின் சார்பாக நான் சொல்லவேண்டிய நியாயங்களை உமக்குச் சொல்லிக் காண்பிப்பேன். [QE]
3. [QS]நான் தூரத்திலிருந்து என் ஞானத்தைக் கொண்டுவந்து, [QE][QS]என்னை உண்டாக்கினவருடைய நீதியை விளங்கச்செய்வேன். [QE]
4. [QS]மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யில்லாமல் இருக்கும்; [QE][QS]உம்முடன் பேசுகிறவன் அறிவில் தேறினவன். [QE]
5. [QS]இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் தள்ளிவிடமாட்டார்; [QE][QS]மன உருக்கத்திலும் அவர் மகத்துவமுள்ளவர். [QE]
6. [QS]அவர் துன்மார்க்கரைப் பிழைக்க விடாதிருக்கிறார்; [QE][QS]சிறுமையானவர்களின் நியாயத்தை விசாரிக்கிறார். [QE]
7. [QS]அவர் தம்முடைய கண்களை நீதிமான்களைவிட்டு விலக்காமல், [QE][QS]அவர்களை ராஜாக்களுடன் சிங்காசனத்தில் ஏறவும், [QE][QS]உயர்ந்த இடத்தில் என்றைக்கும் அமர்ந்திருக்கவும் செய்கிறார். [QE]
8. [QS]அவர்கள் விலங்குகள் போடப்பட்டு, [QE][QS]உபத்திரவத்தின் கயிறுகளால் கட்டப்பட்டிருந்தாலும், [QE]
9. [QS]அவர், அவர்களுடைய செயல்களையும், [QE][QS]அதிகமான அவர்களுடைய மீறுதல்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி, [QE]
10. [QS]அக்கிரமத்தைவிட்டுத் திரும்பும்படி அவர்கள் காது கேட்க கடிந்துகொள்ளுகிறார். [QE]
11. [QS]அவர்கள் அடங்கி அவரை ஆராதித்தால், [QE][QS]தங்கள் நாட்களை நன்மையாகவும், [QE][QS]தங்கள் வருடங்களைச் செழிப்பான வாழ்வாகவும் போக்குவார்கள். [QE]
12. [QS]அடங்கவில்லை என்றால் பட்டயத்திற்கு இரையாகி, [QE][QS]ஞானம் அடையாமல் இறந்துபோவார்கள். [QE]
13. [QS]மாயமுள்ள இருதயத்தார்[* இருதயத்தில் விசுவசிக்காதவர்கள் ] கோபத்தைக் குவித்துக்கொள்ளுகிறார்கள்; [QE][QS]அவர்களை அவர் கட்டிவைக்கும்போதும் தேவனைக் கெஞ்சிக் கூப்பிடுவதில்லை. [QE]
14. [QS]அவர்கள் இளவயதிலே இறந்துபோவார்கள்; [QE][QS]இழிவானவர்களுக்குள்ளே அவர்கள் இறப்பார்கள். [QE]
15. [QS]சிறுமைப்பட்டவர்களை அவர் சிறுமைக்கு விலக்கி, [QE][QS]அவர்கள் ஒடுக்கப்பட்டிருக்கும்போது அவர்கள் செவியைத் திறக்கிறார். [QE]
16. [QS]அப்படியே அவர் உம்மையும் நெருக்கத்திலிருந்து விலக்கி, [QE][QS]இடுக்கமில்லாத விசாலத்திலே வைப்பார்; [QE][QS]உம்முடைய உணவுப்பந்தி கொழுமையான பதார்த்தங்களால் நிறைந்திருக்கும். [QE]
17. [QS]ஆகாதவன்மேல் வரும் நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப் பார்ப்பீர்; [QE][QS]நியாயமும் நீதியும் உம்மை ஆதரிக்கும். [QE]
18. [QS]கடுங்கோபம் உண்டாயிருக்கிறதினால் [QE][QS]அவர் உம்மை ஒரு அடியினால் அழித்துவிடாமலிருக்க எச்சரிக்கையாயிரும்; [QE][QS]அப்பொழுது மீட்கும் பொருளை அதிகமாகக் கொடுத்தாலும் அதற்கு நீர் தப்பமாட்டீர். [QE]
19. [QS]உம்முடைய செல்வத்தை அவர் மதிப்பாரோ? [QE][QS]உம்முடைய பொன்னையும், பூரண பராக்கிரமத்தையும் அவர் மதிக்கமாட்டாரே. [QE]
20. [QS]மக்கள் தங்கள் இடத்தைவிட்டு அழிந்துபோகச்செய்கிற இரவை விரும்பாதிரும். [QE]
21. [QS]பாவத்தைத் திரும்பவும் செய்யாமல் எச்சரிக்கையாயிரும்; [QE][QS]உபத்திரவத்தைவிட அக்கிரமத்தைத் தெரிந்துகொண்டீரே. [QE]
22. [QS]இதோ, தேவன் தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறார்; [QE][QS]அவரைப் போல் போதிக்கிறவர் யார்? [QE]
23. [QS]அவருடைய வழியின் நியாயத்தை விசாரிக்கத்தகுந்தவன் யார்? [QE][QS]நீர் அநியாயம் செய்தீர் என்று சொல்லத்தக்கவன் யார்? [QE]
24. [QS]மனிதர் நோக்கிப்பார்க்கிற அவருடைய செயல்களை நீர் மகிமைப்படுத்த நினையும். [QE]
25. [QS]எல்லா மனிதரும் அதைக் காண்கிறார்களே; [QE][QS]தூரத்திலிருந்து அது மனிதருக்கு வெளிப்படுகிறது. [QE]
26. [QS]இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; [QE][QS]நாம் அவரை அறிய முடியாது; [QE][QS]அவருடைய வருடங்களின் தொகை எண்ணமுடியாதது. [QE]
27. [QS]அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறவைக்கிறார்; [QE][QS]அவைகள் மேகத்திலிருந்து மழையாக பொழிகிறது. [QE]
28. [QS]அதை மேகங்கள் பெய்து, மனிதர்கள் மேல் அதிகமாகப் பொழிகிறது. [QE]
29. [QS]மேகங்கள் பரவுகிறதையும், அவருடைய கூடாரத்திலிருந்து எழும்பும் குமுறல்களையும் அறியமுடியுமோ? [QE]
30. [QS]இதோ, அதின்மேல் தம்முடைய மின்னலின் ஒளியை பரப்புகிறார்; [QE][QS]சமுத்திரத்தை இருளால் மூடுகிறார். [QE]
31. [QS]அவைகளால் மக்களை தண்டிக்கிறவரும், [QE][QS]ஆகாரம்கொடுத்து காப்பாற்றுகிறவருமாயிருக்கிறார். [QE]
32. [QS]அவர் மின்னலின் ஒளியைத் தமது கைக்குள்ளே மூடி, [QE][QS]அது எவைகளையெல்லாம் அடிக்கவேண்டுமென்று கட்டளையிடுகிறார். [QE]
33. [QS]அதினால், அவர் செய்ய நினைக்கிறதையும், [QE][QS]புயல் எழும்பப்போகிறதையும், ஆடுமாடுகள் தெரியப்படுத்தும். [QE]