1. [PS]பின்னும் எலிகூ மறுமொழியாக: [PE]
2. [QS]“என் நீதி தேவனுடைய நீதியைவிட உயர்ந்ததென்று [QE][QS]நீர் சொன்னது நியாயம் என்று நினைக்கிறீரோ? [QE]
3. [QS]நான் பாவியாக இல்லாததினால் [QE][QS]எனக்கு நன்மை என்ன? பலன் என்ன? என்று சொன்னீர். [QE]
4. [QS]உமக்கும் உம்முடன் இருக்கிற உம்முடைய நண்பனுக்கும் நான் பதில் சொல்லுகிறேன். [QE]
5. [QS]நீர் வானத்தை அண்ணாந்து பார்த்து, [QE][QS]உம்மைவிட உயரமாயிருக்கிற ஆகாயமண்டலங்களைக் கண்ணோக்கும். [QE]
6. [QS]நீர் பாவம் செய்தால் அதினாலே அவருக்கு என்ன நஷ்டம்? [QE][QS]உம்முடைய மீறுதல்கள் அதிகமானாலும், அதினாலே அவருக்கு என்ன பாதிப்பு? [QE]
7. [QS]நீர் நீதிமானாயிருந்தால், அதினாலே அவருக்கு என்ன கிடைக்கும்? [QE][QS]அல்லது அவர் உம்முடைய கையில் என்ன லாபத்தைப் பெறுவார்? [QE]
8. [QS]உம்முடைய பாவத்தினால் உம்மைப்போன்ற மனிதனுக்கு நஷ்டமும், [QE][QS]உம்முடைய நீதியினால் மனுமக்களுக்கு லாபமும் உண்டாகும். [QE]
9. [QS]அநேகரால் பலவந்தமாக ஒடுக்கப்பட்டவர்கள் முறையிட்டு, [QE][QS]வல்லவர்களுடைய புயத்தினிமித்தம் அலறுகிறார்கள். [QE]
10. [QS]பூமியின் மிருகங்களைவிட எங்களைப் புத்திமான்களும், [QE][QS]ஆகாயத்துப் பறவைகளைவிட எங்களை ஞானவான்களுமாக்கி, [QE]
11. [QS]என்னை உண்டாக்கினவரும், [QE][QS]இரவிலும் பாடல்பாட அருள்செய்கிறவருமாகிய என்னை உருவாக்கின கர்த்தராகிய தேவன் எங்கே என்று கேட்பவன் ஒருவனுமில்லை. [QE]
12. [QS]அங்கே அவர்கள் பொல்லாதவர்களின் பெருமையினாலே கூப்பிடுகிறார்கள்; [QE][QS]அவரோ திரும்ப பதில் கொடுக்கிறதில்லை. [QE]
13. [QS]தேவன் வீண்வார்த்தைகளைக் கேட்கமாட்டார், [QE][QS]சர்வவல்லமையுள்ள தேவன் அதைக் கவனிக்கமாட்டார். [QE]
14. [QS]அவருடைய தரிசனம் உமக்குக் கிடைக்கிறதில்லை என்று நீர் சொல்லுகிறீரே; [QE][QS]ஆனாலும் நியாயத்தீர்ப்பு அவரிடத்தில் இருக்கிறது; [QE][QS]ஆகையால் அவருக்குக் காத்துக்கொண்டிரும். [QE]
15. [QS]இப்போது அவருடைய கோபமானது நியாயத்தை முற்றிலும் விசாரிக்காது; [QE][QS]அவர் இன்னும் ஒன்றையும் குறையில்லாத முறையில் தண்டிக்கவில்லை. [QE]
16. [QS]ஆகையால் யோபு வீணாய்த் தம்முடைய வாயைத் திறந்து, [QE][QS]அறிவில்லாத வார்த்தைகளை அதிகமாகப் பேசுகிறார்” என்றான். [QE]