1. [PS]பின்னும் எலிகூ மறுமொழியாக: [PE]
2. [QS]“ஞானிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; [QE][QS]அறிவாளிகளே, எனக்குச் செவிகொடுங்கள். [QE]
3. [QS]வாயானது ஆகாரத்தை ருசிபார்க்கிறதுபோல, [QE][QS]காதானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கும். [QE]
4. [QS]நமக்காக நியாயமானதைத் தெரிந்துகொள்வோமாக; [QE][QS]நன்மை இன்னதென்று நமக்குள்ளே அறிந்துகொள்வோமாக. [QE]
5. [QS]யோபு: நான் நீதிமான்; [QE][QS]தேவன் என் நியாயத்தைத் தள்ளிவிட்டார் என்றும், [QE]
6. [QS]நியாயம் என்னிடத்தில் இருந்தும் நான் பொய்யனென்று எண்ணப்படுகிறேன்; [QE][QS]மீறுதல் இல்லாதிருந்தும், [QE][QS]அம்பினால் எனக்கு இருந்த காயம் ஆறாததாயிருக்கிறதென்றும் சொன்னாரே. [QE]
7. [QS]யோபைப் போலவே, கேலிசெய்வதை தண்ணீரைப்போல் குடித்து, [QE]
8. [QS]அக்கிரமக்காரருடன் சேர்ந்துகொண்டு, [QE][QS]துன்மார்க்கருடன் சுற்றுகிறவன் யார்? [QE]
9. [QS]எப்படியென்றால், தேவன்மேல் அன்பு வைக்கிறது [QE][QS]மனிதனுக்குப் பயன் அல்ல என்றாரே. [QE]
10. [QS]ஆகையால் புத்திமான்களே, எனக்குச் செவிகொடுங்கள்; [QE][QS]அநீதி தேவனுக்கும், [QE][QS]சர்வவல்லமையுள்ள தேவனுக்கும் தூரமாயிருக்கிறது. [QE]
11. [QS]மனிதனுடைய செயல்களுக்கு ஏற்ப அவனுக்குச் சரிக்கட்டி, [QE][QS]அவனவன் நடக்கைகளுக்கு ஏற்ப அவனவனுக்குப் பலனளிக்கிறார். [QE]
12. [QS]தேவன் அநியாயம் செய்யாமலும், [QE][QS]சர்வவல்லமையுள்ள தேவன் நீதியைப் புரட்டாமலும் இருக்கிறது உண்மையே. [QE]
13. [QS]பூமியின்மேல் மனிதனுக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்? [QE][QS]உலகம் முழுவதையும் ஒழுங்குபடுத்தினவர் யார்? [QE]
14. [QS]அவர் தம்முடைய இருதயத்தை அவனுக்கு விரோதமாகத் திருப்பினாரென்றால், [QE][QS]அவனுடைய ஆவியையும் அவனுடைய சுவாசத்தையும் தம்மிடத்தில் இழுத்துக்கொள்வார். [QE]
15. [QS]அப்படியே உயிரினங்கள் அனைத்தும் இறந்துபோகும், [QE][QS]மனிதன் மண்ணுக்குத் திரும்புவான். [QE]
16. [QS]உமக்கு உணர்விருந்தால் இதைக் கேளும், [QE][QS]என் வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும். [QE]
17. [QS]நீதியைப் பகைக்கிற ஒருவன் ஆள முடியுமோ? [QE][QS]மகா நீதிபரரைக் குற்றப்படுத்துவீரோ? [QE]
18. [QS]ஒரு ராஜாவைப் பார்த்து, [QE][QS]நீ பொல்லாதவன் என்றும், அதிபதிகளைப் பார்த்து, [QE][QS]நீங்கள் அக்கிரமக்காரர் என்றும் சொல்ல முடியுமோ? [QE]
19. [QS]இப்படியிருக்க, பிரபுக்களின் முகத்தைப்பார்க்காமலும், [QE][QS]ஏழையைவிட செல்வந்தனை அதிகமாக நினைக்காமலும் இருக்கிறவரை நோக்கி [QE][QS]இப்படிச் சொல்லலாமா? [QE][QS]இவர்கள் எல்லோரும் அவர் கரங்களின் செயல்களே. [QE]
20. [QS]இப்படிப்பட்டவர்கள் உடனே இறப்பார்கள்; [QE][QS]மக்கள் நடுஇரவில் கலங்கி இறந்துபோவார்கள்; [QE][QS]பார்க்காத கையினால் பலவந்தர் அழிந்துபோவார்கள். [QE]
21. [QS]அவருடைய கண்கள் மனிதருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; [QE][QS]அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார். [QE]
22. [QS]அக்கிரமக்காரர் ஒளிந்துகொள்ளக்கூடிய இருளுமில்லை, [QE][QS]மரணஇருளுமில்லை. [QE]
23. [QS]மனிதன் தேவனுடன் வழக்காடுவதற்கு [QE][QS]அவர் அவன்மேல் அதிகமானதொன்றையும் சுமத்தமாட்டார். [QE]
24. [QS]ஆராய்ந்து முடியாதவிதத்தில், [QE][QS]நியாயமாக அவர் வல்லமையுள்ளவர்களை நொறுக்கி, [QE][QS]வேறு மனிதரை அவர்கள் இடத்திலே நிறுத்துகிறார். [QE]
25. [QS]அவர்களின் செயல்களை அவர் அறிந்தவர் என்பதினால், [QE][QS]அவர்கள் நசுங்கிப்போகும் அளவுக்கு இரவுநேரத்தில் அவர்களை அழித்துப்போடுகிறார். [QE]
26. [QS]அவர்கள் அவரைவிட்டுப் பின்வாங்கி [QE][QS]அவருடைய எல்லா வழிகளையும் உணர்ந்துகொள்ளாமல் போனதினாலும், [QE]
27. [QS]எளியவர்களின் வேண்டுதல் அவரிடத்தில் சேரவைத்ததினாலும், [QE][QS]சிறுமையானவனுடைய வேண்டுதலை கேட்கிற அவர், [QE]
28. [QS]எல்லோரும் பார்க்கும்படி அவர்களைத் துன்மார்க்கரென்று அடிக்கிறார். [QE]
29. [QS]மாயக்காரன் ஆளுகை செய்யாமலும், [QE][QS]மக்கள் சிக்கிக்கொள்ளாமலும், [QE]
30. [QS]ஒரு மக்களுக்காவது ஒரு மனிதனுக்காவது, [QE][QS]அவர் சமாதானத்தை அருளினால் யார் கலங்கவைப்பான்? [QE][QS]அவர் தமது முகத்தை மறைத்தால் அவரைப் பார்ப்பவன் யார்? [QE]
31. [QS]நான் தண்டிக்கப்பட்டேன்; [QE][QS]நான் இனிப் பாவம் செய்யமாட்டேன். [QE]
32. [QS]நான் பார்க்காத காரியத்தை நீர் எனக்குப் போதியும், [QE][QS]நான் அநியாயம் செய்தேனென்றால், [QE][QS]நான் இனி அப்படிச் செய்வதில்லை என்று தேவனை நோக்கிச் சொல்லமுடியுமே. [QE]
33. [QS]நீர் அப்படிச் செய்யமாட்டேன் என்கிறதினால், [QE][QS]உம்முடன் இருக்கிறவர்களில் ஒருவனை உமக்குப் பதிலாக அதைச் செய்யச்சொல்வீரோ? [QE][QS]நான் அல்ல, நீரே தெரிந்துகொள்ளவேண்டும்; [QE][QS]அல்லவென்றால், நீர் அறிந்திருக்கிறதைச் சொல்லும். [QE]
34. [QS]யோபு அறிவில்லாமல் பேசினார்; [QE][QS]அவர் வார்த்தைகள் ஞானமுள்ளவைகள் அல்லவென்று, [QE]
35. [QS]புத்தியுள்ள மனிதர் என் சார்பாகப் பேசுவார்கள்; [QE][QS]ஞானமுள்ள மனிதனும் எனக்குச் செவிகொடுப்பான். [QE]
36. [QS]அக்கிரமக்காரர் சொன்ன மறுமொழிகளினால் [QE][QS]யோபு முற்றும்முடிய சோதிக்கப்படவேண்டியதே என் ஆசை. [QE]
37. [QS]தம்முடைய பாவத்துடன் மீறுதலைச் சேர்த்தார்; [QE][QS]அவர் எங்களுக்குள்ளே கைகொட்டி, [QE][QS]தேவனுக்கு விரோதமாகத் தம்முடைய வார்த்தைகளை அதிகமாகப் பேசினார்” என்றான். [QE]